மதுரையில் விஜயுடன் திரிஷா போட்டோ.. தொண்டர்கள் செயலால் கடுப்பாகும் ரசிகர்கள்!

  • சென்னை: முதல்வர் விஜய் இன்று மதுரை சென்றிருந்த நிலையில் அங்கு ஒட்டப்பட்டு இருக்கும் ஒரு போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் பெற்று இருக்கிறது. விஜய் செல்லும் நிகழ்ச்சிக்கு வாழ்த்து சொல்வதற்காக போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள் என்றால் அதில் என்ன பெரிய விஷயம் என்று கேட்கலாம். ஆனால் அந்த போஸ்டரில் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்கள்தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி இருக்கிறது.

    Advertisement

    தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

    தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு முதல் முறையாக மதுரைக்கு வருகிறார். அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை இன்று அவர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் 2026 ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட இருக்கிறது. முதல் கட்டமாக 1.28 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக ஆண்டுக்கு 75.83 கோடி நிதி குழு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    மதுரையில் போஸ்டர்

    இந்த நிலையில் தான் மதுரை முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது. அந்த போஸ்டரில் ஒரு பக்கம் குழந்தையை கையில் வைத்திருக்கும் விஜய்யின் ஃபோட்டோவும், மற்றொரு பக்கம் நடிகை திரிஷாவின் போட்டோவும் இடம்பெற்றிருக்கிறது. மேலும் அரசு கொண்டு வந்திருக்கும் இந்த தங்க மோதிரம் திட்டத்தை வரவேற்கும் விதமாகவும், முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் அந்த போஸ்டரில் இருக்கிறது.

    விஜய், திரிஷா சர்ச்சை

    குறிப்பாக திரிஷா நற்பணி மன்றம் சார்பில் விஜய்க்கு இப்படி ஒரு வாழ்த்து போஸ்டர் வந்திருப்பது தான் இப்போ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஏற்கனவே பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களின் திரை ஜோடி ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு பெற்ற ஒன்று. சமீப காலமாக விஜய், திரிஷா தொடர்பான விவாதங்கள் எழுந்து வருகிறது.

    Advertisement
    திரிஷா விஜய்க்கு செய்வது தப்பு! நடிகை அம்பிகா ஓபனாக சொன்ன வார்த்தை.. பாராட்டும் முதல்வர் ரசிகர்கள்

    ரசிகர்கள் கருத்து

    இந்த நிலையில் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு தொண்டர்கள் ஒட்டிய போஸ்டரால் விஜய் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார்கள். ஏற்கனவே விஜய்க்கு திரிஷாவுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது நெகட்டிவாக பேசப்பட்ட வரும் நிலையில் இது போன்ற போஸ்டர்கள் தேவையா? என்று சில கேள்வி எழுப்பி வருகிறார்கள். சிலர், இது வேண்டும் என்று விஜய்யை அசிங்கப்படுத்துவதற்காக திட்டமிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர் என்றும் கூறி வருகிறார்கள்.

    English Summary

    Vijay: As Vijay visits Madurai today, a poster put up there is currently garnering attention online. One might wonder what is so significant about a poster conveying best wishes for an event he is attending; however, it is the photographs featured on the poster that have become a topic of discussion among fans.