சென்னை: இலவசமா ஒரு ஸ்வீட் பாக்ஸ் ஆசையே தனக்கு இப்படி ஒரு சோதனையை கொண்டு வந்து சேர்க்கும்னு இன்ஸ்டா பிரபலம் வீரமணி நினைச்சிருக்க மாட்டார் போல! ஸ்வீட் பாக்ஸுக்காக தன்னுடைய வீட்டு முகவரியை கொடுத்தவர், இப்போது நெட்டிசன்கள் அனுப்பும் ஆர்டர்களால் நொந்து போய் வீடியோ போட்டு புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால் அவர்நிலையை பார்த்து பல மீம்ஸ்களும் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் ஒருவரை பிடித்துவிட்டால் அவருடன் சேர்ந்து சிரிப்பதும், கலாய்ப்பதும் சாதாரணமாகிவிட்டது. ஆனால், அந்த கலாய்ப்பு நேரடியாக வீட்டுக்கே பார்சல்களாக வந்து இறங்கினால் எப்படி இருக்கும்? அதைத்தான் இப்போது வீரமணி சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஸ்வீட் பாக்ஸ் கிடைக்கும் என்ற ஆசையில் தன்னுடைய வீட்டு முகவரியைக் கொடுத்திருக்கிறார் வீரமணி. ஆனால், அதைத் தெரிந்துகொண்ட சில நெட்டிசன்கள் அவருடைய முகவரிக்கு விதவிதமான பொருட்களை ஆர்டர் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதுவும் சாதாரணமாக ஒரு சின்னப் பொருளை அனுப்பிவிட்டு நிறுத்தவில்லை. வீட்டுக்குத் தேவையான டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் என பெரிய பொருட்களைக்கூட கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இப்படிப் பொருட்கள் வீட்டுக்கு வந்து கொண்டே இருந்தால், டெலிவரி செய்பவர்களிடம் பதில் சொல்ல வேண்டியது, ஆர்டர் செய்யாத பொருட்களை வாங்க மறுப்பது என வீட்டில் இருப்பவர்களுக்கும் தலைவலிதான். இப்போது இந்த விளையாட்டு இன்னும் ஒரு படி மேலே போய், பீரங்கி வரைக்கும் ஆர்டர் செய்திருப்பதாகச் சொல்லி வீரமணியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த தொல்லை தாங்க முடியாமல் வீட்டையே காலி செய்து வேறு தெருவுக்கு குடிபோய்விட்டதாக வீரமணி வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார். தன்னுடைய நிலைமையை நினைத்து அவர் புலம்பும் வீடியோவைப் பார்த்த சிலர் பரிதாபப்பட, இன்னும் சிலரோ அதையும் வைத்து மீம்ஸ் போட்டு சிரித்து வருகிறார்கள். இதற்கு முன்பும் டிக் டாக் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான ஜிபி முத்துவுக்கும் இதேபோன்ற தொல்லைகள் வந்ததாகப் பேசப்பட்டது. அவருடைய முகவரியைப் பயன்படுத்தி சிலர் பொருட்களை ஆர்டர் செய்து அனுப்பியதால், அவரும் அவதிப்பட்டார். இப்போது அந்த வரிசையில் வீரமணியும் சிக்கியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ஆனால், ஒருவரைக் கலாய்க்கிறோம் என்ற பெயரில் அவருடைய வீட்டுக்கு ஆர்டர் செய்யாத பொருட்களை அனுப்புவது விளையாட்டு மட்டுமல்ல. அதனால் பணம், நேரம் வீணாவதோடு, வீட்டில் இருப்பவர்களுக்கும் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். குறிப்பாக, பணம் கொடுத்துப் பெறும் முறையில் ஆர்டர் செய்தால் டெலிவரி ஊழியர்களும் தேவையில்லாமல் அலைக்கழிக்கப்படுவார்கள். இந்த சம்பவத்தை பார்த்த நெட்டிசன்களுக்கு உடனே நினைவுக்கு வருவது விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படம்தான். ராம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், சைக்கோ கொலைகாரன் கிறிஸ்டோபர் சிறுமிகளைக் குறிவைத்து கிஃப்ட் பாக்ஸ் மூலம் வலை விரிக்கும் காட்சிகள் பார்ப்பவர்களைப் பதற வைத்திருக்கும். படத்தில் அந்த கிப்ட் பாக்ஸ் ஒரு பயங்கரமான திருப்பத்துக்கு வழிவகுக்கும். இப்போது வீரமணி ஸ்வீட் பாக்ஸுக்கு ஆசைப்பட்டு இப்படி மாட்டிக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தைப் பார்த்தவர்கள், "ராட்சசன் படத்தில் கிப்ட் பாக்ஸுக்கு ஆசைப்பட்டால் என்ன நடக்கும்னு காட்டினாங்க.. இங்கே ஸ்வீட் பாக்ஸுக்கு ஆசைப்பட்டு வீரமணி வீட்டையே காலி பண்ணிட்டாரே!" என்று கலாய்த்து வருகின்றனர். படத்தில் கிப்ட் பாக்ஸ் என்றால் திகில்; இங்கே ஸ்வீட் பாக்ஸ் என்றால் டெலிவரி தொல்லை என்று மீம்ஸ் போட்டு சிரிக்கிறார்கள். ஆனால், வீரமணியைப் பொறுத்தவரை இது சிரிப்பதற்கான விஷயமாக இல்லாமல், வீட்டையே மாற்றும் அளவுக்கு தலைவலியாக மாறியிருக்கிறது. ஒரு ஸ்வீட் பாக்ஸுக்கு ஆசைப்பட்டதற்காக இவ்வளவு பெரிய சோதனையா என்று வீரமணியின் வீடியோவைப் பார்த்து சிலர் கேட்க, இன்னும் சிலர் இனிமேல் யாராவது இலவசமாக ஏதாவது கொடுக்கிறோம் என்று சொன்னால் முகவரியைக் கொடுப்பதற்கு முன்பு இரண்டு முறை யோசிப்பார் போல என்று கிண்டல் செய்து வருகின்றனர்.வீட்டுக்கு வந்த பொருட்கள்
வீட்டை விட்டு ஓட்டம்
2026 தேர்தல் களம்.. மக்களுக்கு அட்வைஸ்! ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்.. அடுத்த பஞ்சாயத்து
ராட்சசன் படத்தில் கிப்ட் பாக்ஸ்
கஷ்டம் காதலுக்கு இஷ்டம்.. 4வது விமானம்.. சோசியல் மீடியாவை அதிரவிடும் தம்பதி.. புலம்பும் நெட்டிசன்கள்