விஜய் சேதுபதி மீது பாலியல் குற்ற சாட்டை தோண்டி எடுத்த தவெக ஐடி டீம்.. டார்கெட் விஜய்க்கு?

  • சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி லீடர்ஷிப் பற்றி பேசியது சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர் எந்த இடத்திலும் தற்போதைய அரசியல் சூழ்நிலையையோ அல்லது முதல்வர் விஜய் பெயரையோ சொல்லவில்லை. ஆனால் அதிகமான விஜய் ரசிகர்கள் அவர் விஜய்யை தான் மறைமுகமாக சொன்னார் என குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு எதிராக தவெக ஐடி டீம் விஜய் சேதுபதி மீது சில மாதங்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் ஒரு பெண் கொடுத்த பழைய பாலியல் குற்றச்சாட்டை தோண்டி எடுத்து விமர்சித்து வருகிறது.

    பிக் பாஸ் பிரச்சனை

    கடந்த சனிக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி அந்த வார தலைவராக இருந்த ஷாதிகாவிடம் நீங்க தலைவராகுவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீங்களா? என்று கேட்டிருந்தார். அதற்கு ஷாதிகா நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்தேன் சார் ஆனால் முடியவில்லை என்று சொன்னதும்,

    விஜய் சேதுபதி லீடர்னா என்னன்னு தெரியாம.. லீடர்ஷிப்னா என்னன்னு புரியாம தலைவர் ஆகுறதுக்கு முன்னாடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துட்டு தலைவர் ஆனதும் பிரச்சனைகள் வந்தால் உடனே எதிர்க்கட்சி மீது பழியை போட்டுவிட்டு ஓடிவிடுவது லீடர் இல்லை என்று சொல்லி இருந்தார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி பேசியதும் தற்போதைய அரசியல் சூழ்நிலையோடு ஒப்பிட்டு விஜயை தாக்கி தான் விஜய் சேதுபதி பேசிவிட்டார் என்று விஜய் ஆதரவாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

    விஜய் சேதுபதி பஞ்சாயத்து

    இது குறித்து விஜய் சேதுபதி தரப்பில் எந்த மறுப்பு பதிவுகளோ, விளக்கங்களோ கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் விஜய்க்கு ஆதரவாக தவக ஐடி விங் மோசமாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். அதிலும் ஒரு பதிவில் விஜய் சேதுபதியை நாய் என மோசமாக திட்டி இருக்கிறார்கள். அதுபோல இதற்கு முன்பு விஜய் சேதுபதி பற்றி ஒரு பெண் வெளியிட்ட பதிவுகளும் பெரிய அளவில் பரப்பரப்பை ஏற்படுத்தியது அந்த பழைய விஷயத்தை வைத்து விஜய் சேதுபதியை விமர்சிக்கிறார்கள்.

    பாலியல் குற்றச்சாட்டு

    அதாவது ஒரு பெண் வெளியிட்ட பதிவில், விஜய் சேதுபதி சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார், அவருடன் கேரவனில் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுவதற்கு 2 லட்சம், ரூமுக்கு என்றால் 3 லட்சம் என்றெல்லாம் அந்த பெண் ஒரு பதிவு வெளியிட்டு பிறகு திடீரென அதை நீக்கி இருந்தார். இது பெரிதாக பேசப்பட்டது. அப்போது இதற்க்கு விஜய் சேதுபதி இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, லீகலாக ஆக்சன் எடுக்க போவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    நெட்டிசன்கள் கேள்வி

    இந்த பஞ்சாயத்தை இப்போது தவெக ஐடி விங்க் கையில் எடுத்து விஜய் சேதுபதியை மோசமாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து வருகிறார்கள். இதை பார்க்கும் நெட்டிசன்கள் அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி எந்த இடத்திலும் விஜய் பெயரை சொல்லவே இல்லை. ஆனால் நீங்கள் விஜய் சேதுபதியை இவ்வளவு மோசமாக விமர்சிப்பதை பார்க்கும்போது விஜயைத் தான் அவர் சொன்னார் என்று நீங்களே ஒத்துக் கொள்வது போல இருக்கிறது.

    விஜய் கட்சியினர் நாங்கள் அடுத்தவர்களை ஆபாசமாக பேச மாட்டோம், பெண்களுக்கு மரியாதை கொடுப்போம் என்றெல்லாம் சொல்லி வருகிறீர்கள். ஆனால் ஒருவரை இவ்வளவு தரக்குறைவாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இது சரியா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    English Summary

    Vijay Sethupathi: Vijay Sethupathi's remarks about leadership on the *Bigg Boss* show sparked a major stir on social media. Although he did not explicitly mention Chief Minister Vijay by name, many of Vijay's fans have voiced the opinion that he was indirectly referring to him. Amidst this, the TVK IT wing has begun criticizing Vijay Sethupathi by digging up an old sexual harassment allegation made against him by a woman on social media several months ago.