உதயநிதி - திரிஷா சர்ச்சையால் கொதிக்கும் இணையம்.. நடிகை மீனா போட்ட போஸ்ட் ! மனித நேயம்” பாடம்

  • சென்னை: உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பரவி வரும் சர்ச்சை பேச்சு, நடிகை திரிஷாவை சுற்றிய விவாதம், அரசியல் கட்சிகளின் கண்டனங்கள், பிரபலங்களில் பதிவுகள் என சோசியல் மீடியாவில் நேற்றில் இருந்து விவாதம் வெடித்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நடிகை மீனா வெளியிட்ட ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போதைய ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

    Advertisement

    அரசியல் விவாதங்கள் எதிலும் பெரிதாக கருத்து தெரிவிக்காத மீனா இந்த முறை எந்த ஒருவரின் பெயரையும் குறிப்பிடாமல் மனிதநேயத்தை வலியுறுத்தும் ஒரு பதிவை பகிர்ந்து இருப்பது ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

    Advertisement

    நடிகை மீனா பகிர்ந்த ஸ்டோரி

    மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில், ஒரு மனிதர் எந்த சாதியில் பிறந்தார்? எந்த மதத்தை சேர்ந்தவர்? எந்த ஊரில் பிறந்தவர்? ஆணா? பெண்ணா? என்பது அவர் தேர்வு செய்த விஷயம் அல்ல. பிறப்பால் கிடைத்த அடையாளங்களை விட வாழ்க்கையில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்? நம்முடைய குணம் என்ன? மனிதர்களை எப்படி மதிக்கிறோம் என்பது தான் உண்மையான பெருமை என்பதை அந்த பதிவில் கூறி இருக்கிறார்.

    எந்த அரசியல் கட்சியையும், சமூகத்தையும், எந்த நபரையும் சுட்டிக்காட்டாமல் மனித நேயமே எல்லாவற்றுக்கு மேலானது என்று சிம்பிளாக மீனா போட்ட ஒரு போஸ்ட் இப்போ இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

    Advertisement

    அட்வைஸ் பதிவு

    சாதாரணமாக இது போன்ற ஒரு பதிவு வந்திருந்தால் அது ஒரு மோட்டிவேஷனல் வாசகமாக கடந்து போயிருக்கும். ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் அரசியல் பேச்சு, பெண்கள் குறித்து பேசப்பட்டு வரும் சர்ச்சை, சோசியல் மீடியாவில் நடக்கும் கடுமையான வார்த்தை மோதல்கள் என பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் மீனா இநத பதிவை பகிர்ந்து இருப்பதால் தான் அது அதிக கவனம் பெற்று இருக்கிறது.

    இதனால் பலரும் இது யாருக்காவது மறைமுக பதிலா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். ஆனால் அந்த பதிவில் மீனா யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

    Advertisement

    மீனாவின் சினிமா பயணம்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் 40 வருடத்திற்கும் மேலாக நடித்து வரும் மீனா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். பெரிதாக அரசியல் சார்ந்த கருத்துக்களை பதிவிடுவது கிடையாது. ஆனால் தன்னுடைய தோழிகளுடன் எடுக்கும் புகைப்படங்கள், குடும்ப போட்டோக்கள், தன்னுடைய போட்டோ சூட் புகைப்படங்கள் என சிலவற்றை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார்.

    அதிலும் அவருடைய பதிவில் அதிகமாக மோட்டிவேஷனல் கொடுப்பது போல பாசிட்டிவாக தான் இருக்கும். அந்த வரிசையில் இப்போது அவர் ஜாதி மதம் பற்றி பகிர்ந்த பதிவை பலரும் பாராட்டுகிறார்கள். எல்லோரும் உதயநிதி பேசியது சரியா? தவறா? அவர் பேசுனது உண்மையா? இல்லையா? என்ற விவாதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்போது நீங்க ட்ராக்கில் போய்க்கொண்டிருக்கிறீர்கள். என்று சொல்லி வருகிறார்கள்.

    English Summary

    Actress Meena: The controversy surrounding Udhayanidhi Stalin's speech, the debate surrounding actress Trisha, the condemnations of political parties and the posts of celebrities have been erupting on social media since yesterday. At the moment, only one Instagram story posted by actress Meena is getting the attention of current fans.