உதயநிதியின் சர்ச்சை பேச்சு.. கடும் கோபத்தில் திரிஷா! கவனம் ஈர்க்கும் இன்ஸ்டா பக்கம்

  • சென்னை: உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், அதில் நடிகை திரிஷா பெயர் சர்ச்சைக்குள் இழுக்கப்பட்ட விவாகரமும் தமிழக அரசியலிலும் சினிமா உலகிலும் தற்போது அதிகம் பேசப்படும் விஷயமாக மாறி உள்ளது. காவிரி உரிமை போராட்ட மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கண்டிருந்த சமயத்தில் திரிஷா.. திரிஷா.. என்ற முழக்கத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதில் சோசியல் மீடியாவில் கடும் விவாதத்தை கிளப்பி உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இரட்டை அர்த்தமாக இருந்ததாக தவெக, பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    இதுவரை இந்த விவாகரத்தில் பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து விட்டனர். நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாஜக தரப்பிலும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூவும் இந்த பேச்சை கடுமையாக விமர்சித்து பதிவு வெளியிட்டிருக்கிறார். ஆனால் இந்த சர்ச்சையில் மையமாக இருக்கும் திரிஷா மட்டும் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இருப்பது தான் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Advertisement

    திரிஷா போஸ்ட்க்கு வெயிட்டிங்

    திரிஷா எப்போதுமே சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருப்பார். பொதுவாக தன்னைப் பற்றிய சர்ச்சைகள் எழுந்தாலும், தவறான தகவல்கள் பரவினாலும் அவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிலடி கொடுப்பது வழக்கம். சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன், குந்தவை நீ வீட்டில் கொஞ்ச நாள் குந்த வைத்தால் போதும் என்று பேசியது சோசியல் மீடியாவில் விவாதம் ஆனது.

    திரிஷாவின் பதிலடி

    அதற்கு திரிஷா பார்த்திபனுக்கு பதிலடி கொடுத்து ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார். அதுபோல பாஜக பிரபலமான நயினார் நாகேந்திரன் திரிஷாவை பற்றி பேசியபோது கூட அதற்கும் அவர் பதிலடி கொடுத்திருந்தார். ஆனால் இப்போது நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது அங்கிருந்த தொண்டர்கள் திரிஷா, திரிஷா என்று கத்தியது, அதற்கு உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்த வார்த்தைகள் போன்றவற்றிற்கு பலரும் தங்களுடைய கோபத்தை வெளிக்காட்டி கொண்டிருக்கும் சமயத்தில் திரிஷா மட்டும் எந்த பதிவுகளையும் வெளியிடவில்லை.

    Advertisement

    ரசிகர்கள் கேள்வி

    அதனால் அவர் செம கோபத்தில் இருக்கிறாரா? அதற்காக அவர் எந்த பதிவும் வெளியிடாமல் இருக்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒருவேளை திரிஷா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போகிறாரா? அல்லது இதை கண்டுகொள்ளாமல் விடப் போகிறாரா? என்ற குழப்பத்திலேயே ரசிகர்கள் இருக்கிறார்கள் எதற்காகவே இவருடைய சோசியல் மீடியா பக்கத்தை நிமிடத்திற்கு ஒருமுறை பார்த்து வருவதாகவும் நெட்டிசன்கள் கமாண்டுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

    அதிரடிக்கு பெயர் போன அதிகாரி! உதயநிதியை கைது செய்ய வந்த விஜயகுமார் ஐபிஎஸ் யார்?
    22 வருஷங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக இருக்கும் திரிஷா சமீப காலமாகவே சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் மதுரையில் அவருடைய ரசிகர்கள் திரிஷா அரசியலுக்கு வரவேண்டும் என்று ஒட்டிய போஸ்டர்கள் வைரலானது. இதுபோல அவருடைய ரசிகர்கள் அவருக்கு அன்பு தொல்லைகள் கொடுத்து கொண்டு இருந்தாலும், தேவையில்லாத சர்ச்சைக்கு அவர் என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

    English Summary

    Udhayanidhi Stalin: Udhayanidhi Stalin's speech and the divorce in which actress Trisha's name was dragged into the controversy has become the most talked about topic in Tamil Nadu politics and cinema world. Udhayanidhi Stalin's response to the slogan Trisha.. Trisha.. when Udhayanidhi Stalin was seen speaking on the stage of the Cauvery rights struggle has sparked a heated debate on social media. Various parties including Thaveka and BJP have strongly protested that Udhayanidhi Stalin's speech had a double meaning. But now when Udhayanidhi Stalin was speaking in the program, the volunteers there shouted Trisha, Trisha, while many people were expressing their anger at Udhayanidhi Stalin's double meaning words etc. Trisha alone did not publish any records.