சென்னை: எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான வதந்தி வெப் சீரிஸ் வெற்றிக்கு பிறகு வதந்தி 2 தி மினிஸ்டரி ஆஃப் மணி என்ற பெயரில் Amazon Prime வீடியோவில் வெளியாகி உள்ளது. இந்த முறை புதிய கதையும், விசாரணையும், புதிய போலீஸ் அதிகாரியும் தான் ரசிகர்களை சந்தித்து இருக்கிறார்கள். இந்த சீரிஸ் எப்படி இருக்கிறது? இதன் கதை என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.
வதந்தி 2 வெப் சீரிஸ் ரிவ்யூ
இந்த சீரியஸின் கதை என்னவென்றால், மதுரை அருகே 8 வழி சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நடைபெறுகிறது. அப்போ நிலத்தை தோண்டும் போது மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது. அது யாருடையது? எப்படி அங்கே புதைக்கப்பட்டது? என்பதை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரியாக மூசா ராசா (சசிகுமார்) வருகிறது.
இந்த கேஸ் சசிகுமாரிடம் வந்து சமயத்தில் இன்னொரு பக்கம் இன்னொரு கதையையும் காட்டுகிறார்கள். அது இரண்டு வருஷத்துக்கு முன்பு நடந்தது. அதாவது மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் பரிசுகளை வாங்கி குவிக்கும் மணியை அவருக்கே தெரியாமல் ஒரு பொண்ணு காதலித்து வருகிறார். பிறகு அந்தப் பெண்ணை மணியும் காதலிக்கிறார்.
ஆனால் திடீரென அந்த பெண்ணும், மணியின் தங்கச்சியும் இறந்து போனதற்காக மணி கைது செய்யப்பட்டு இருக்கிறார். எந்த இருவருடைய எலும்புக்கூடுகளை தான் சசிகுமார் கண்டுபிடிக்கிறார். இந்த கதையை சுற்றி தான் ஒரு உணர்வு பூர்வமான, செண்டிமெண்ட் கதை இருக்கிறது. கடைசியில் அந்த இருவரையும் யார் கொன்றது? என்பதை தான் பரபரப்பான ஒவ்வொரு ட்விஸ்ட்களுடன் சொல்லி இருக்கிறார்கள். சில இடங்களில் கதை ரொம்பவும் ஸ்லோவாகவும், அழுத்தமாகவும் இருந்தாலும் மணியின் கேரக்டர், அவருடைய காதல், கிராமத்து திமிரு எல்லாமே கதைக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. அதுபோல இந்த சீரிஸ் முழுக்க சசிகுமார் தாடியுடன் அமைதியான ஆனால் ஸ்ட்ராங்கான போலீஸ் அதிகாரியாக மூஸா கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் சசிகுமார் போலீஸ் அதிகாரி என்பது மனதிறகுள் ஒட்டவில்லை என்பதுதான் உண்மை. சசிகுமார் தாடி வைத்திருப்பதால் போலீஸ் அதிகாரி எப்படி தாடி வைக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தாலும் அதற்கும் படத்தில் ஒரு புது கதை இருக்கிறது. காவலர்கள் படும் கஷ்டம் குறித்து பல படங்கள் வந்தாலும் இந்த படம் ஒரு வித்தியாசமான கதையாக இருக்கிறது. இந்த சீரிஸை மீண்டும் ஆண்ட்ரூஸ் லூயிஸ் இயக்கியிருக்கிறார். முதல் சீசனை போலவே இந்த முறையும் கிராமத்து பின்னணி, இயல்பான காட்சி அமைப்பு, மெதுவாக நகரும் விசாரணை ஒவ்வொரு எபிசோட்டிலும் ஒரு சஸ்பென்ஸ் எனக்காக கவனம் செலுத்தி இருக்கிறார். புஷ்கர் காயத்ரி இந்த சீரியஸில் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக இணைந்து இருக்கிறார். ஆனால் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று இருக்கும் கட்டுப்பாடுகள் சமுதாயத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுகிறது என்று இந்த சீரியஸிலும் சில இடங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. முதல் சீசனை போலவே வதந்தி 2வில் வேகமான ஆக்ஷன் சீரியஸ் ஆக இல்லாமல் பொறுமையாக ரசிக்க வேண்டிய இன்வெஸ்டிகேஷன் திர்லராக உருவாகியுள்ளது. மர்மம், குற்றம், இன்வெஸ்டிகேஷன், வதந்திகளின் தாக்கத்தை மையமாகக் கொண்ட கதைகள் பிடிக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.வதந்தி 2 சீரிஸ் கதை
சசிகுமாரின் நடிப்பு
வதந்தி 2 சீரிஸின் குறைகள்
இந்த சீரியஸில் கதையை பெரிதாக குறை சொல்ல முடியாவிட்டாலும் ஒரு முறை பார்க்கலாம் என்கிற ரகமாக இருக்கிறது. அதே நேரத்தில் சில இடங்களில் விசாரணை ரொம்பவும் மெதுவாக நகர்கிறது. மூஸாவிற்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு ஸ்டேஷனில் இருக்கும் விசாரணை கைதிக்கு தண்டனை கிடைத்த பிறகும் தன்னுடைய உள் உணர்வு காரணமாக அவர் விசாரணை செய்வது, அதற்கு மூஸாவின் உயர் அதிகாரி பெர்மிஷன் கொடுப்பது என சில இடங்களில் கதை நெருடலை சந்திக்கிறது.பார்க்கலாமா? வேண்டாமா?