வடிவேலு நல்லவர் கிடையாது! ஆனால் நல்ல நடிகர்.. அவரோடு நடிக்க முடியாதுன்னு சொன்ன காரணம்! நடிகை சோனா ஓபன்

  • சென்னை: சினிமாவில் சில சர்ச்சைகள் காலம் கடந்தாலும் மறைவதில்லை. எத்தனை வருஷம் ஆனாலும் மீண்டும் மீண்டும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிவிடும். அதேபோலத்தான் நடிகை சோனா பேசிய விஷயம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே வடிவேலுவுடன் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருந்தார். இப்போது வடிவேலு பற்றி மீண்டும் அவர் பேசி இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    அந்த பேட்டியில் சோனா பேசுகையில், வடிவேலு நல்ல நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அவருடைய பாடி லாங்குவேஜ், டைமிங் காமெடி, நடிப்பு எல்லாம் தனி ஸ்டைலாக இருக்கும். அதை வேறு எந்த நடிகராலும் அவ்வளவு ஈசியாக செய்ய முடியாது. அதனால அவர் நடிகராக சூப்பர். ஆனால் மனிதனாக அவர் நல்லவர் கிடையாது. அதனால் தான் அவருடன் நான் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன்.

    Advertisement

    நடிகை சோனா பேட்டி

    இது பணத்துக்காக எடுத்த முடிவு இல்லை தன்மானத்துக்காக எடுத்த முடிவு இல்ல. அவரை நல்ல நடிகர் என்று சினிமாவில் எல்லோரும் கொண்டாடலாம். ஆனால் அவரை பற்றி அவருடன் நடித்தவர்கள் எல்லாரும் எப்படி பேசுறாங்க? அதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் அவருடைய கேரக்டர் எப்படி இருக்கும் என்று ஓபனாக பேசியிருக்கிறார்.

    இதற்கு முன்பே ஒரு பேட்டியில் வடிவேலுவுடன் நடிப்பதை விட நான் பிச்சை எடுத்தாலும் எடுத்துக் கொள்வேன் என்று சொல்லியிருந்தார். அது குறித்து அவர் இப்போது மீண்டும் பேசுகையில், நான் முன்பே வடிவமுடன் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் இப்போதும் அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அதில் நான் இன்னும் உறுதியாகத் தான் இருக்கிறேன் என்று சோனா சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    வடிவேலு பற்றி சோனா பேட்டி

    அதோடு குசேலன் படத்தில் நடிக்க என்ன காரணம் என்றும் அதற்காக அது குறித்தும் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது அந்த படத்தில் நடிக்க முடியாது என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். ஆனால் சினிமாவில் மிகவும் மதிக்கும் ஒரு பிரபலம் என்னிடம் பேசினார் பேசினார். அவர் கேட்ட பிறகு என்னால மறுக்க முடியல. அவர் மீது இருந்த மரியாதை காரணமாகத்தான் அந்த படத்தில் சம்மதித்தேன். அதுவும் படபிடிப்பு முழுக்க எனக்கு பாடி கார்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான் அந்த படத்தில் நடித்தேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    நடிகை சோனாவின் ஆரம்ப காலம்

    மாடலிங் மூலம் தனது பயணத்தை தொடங்கிய சோனா பிறகு தமிழ் சினிமாவில் கவர்ச்சி கேரக்டர்கள், குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளரவும் தனது தடத்தை பதித்தார். சினிமாவில் ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்கள் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் பற்றியும் அடிக்கடி பேட்டிகளில் பேசி பரபரப்பை ஏற்படுத்திவிடுவார்.

    சட்டசபையில் முதல்வர் விஜய் பேசிய
    அதுபோலத்தான் அவர் இப்போது வடிவேலு பற்றி பேசியதும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஒரு சிலர் வடிவேலு உண்மையில் இப்படிப்பட்டவரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் இவங்க வேற இப்படி சொல்லிட்டாங்க அப்போ வடிவேலு இவங்க மீதும் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர போறாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே சோனாவுக்கும் சர்ச்சைக்கும் ரொம்ப நெருக்கம். அவர் பேட்டியில் பேசும் போது யாரைப்பற்றி என்ன விஷயத்தை போட்டு உடைக்க போறாரோ? என்ற பதட்டமும் பலருக்கும் இருக்கும். இப்போ வடிவேலு பற்றி பேசியதும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    Actress Sona: Some controversies in cinema never go away. No matter how many years it goes viral on social media again and again. Similarly, actress Sona's talk is causing a stir now. He had already said that he would not act with Vadivelu even if he paid crores of rupees. Now he is talking about Vadivelu again which has created a debate.