முதல்வர் விஜய்யுடன் வரலட்சுமி போஸ்ட்.. ஆனால் ரசிகர்கள் கேள்வி இதுதான்! விவாதம் கிளம்பியதே!

  • சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய கணவர் நிக்கோலாய் சச்சுதேவ் உடன் தமிழகம் முதல்வர் ஜி ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதிலும் விஜய் குறித்து அவர் எழுதிய பதிவு வைரலாகி வரும் நிலையில் அந்த பதிவை விட ரசிகர்கள் வேறு ஒரு விஷயத்தை வைத்து அதிகமாக பேசி வருகின்றனர்.

    Advertisement

    வரலட்சுமி வெளியிட்ட பதிவு

    வரலட்சுமி வெளியிட்ட பதிவில், மக்கள் நூறு விஷயங்கள் பேசுவார்கள். ஆனால் முதல் தேர்தலில் முதல்வராக தேர்வு செய்யப்படுவது சாதாரண விஷயம் அல்ல. வார்த்தைகளை விட செயல்கள்தான் சத்தமாக பேசும். நான் எப்போதும் விஜய்யின் வெறியன். பெண்கள் நலம் குறித்து அவருடன் பேசினோம். கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்" என்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

    Advertisement

    சரத்குமார் விமர்சனம்

    இந்த போஸ்ட் வெளியான அடுத்த நொடியே சோசியல் மீடியாவில் விவாதமும் எழுந்து இருக்கிறது. அதாவது சரத்குமார் ஆரம்பத்தில் இருந்தே விஜய்யின் அரசியலை விமர்சித்து இருந்தார். விஜய் நடிகராக இருந்த வரைக்கும் அவருக்கு நல்ல சப்போர்ட் கொடுத்திருந்தார். அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் பேசி இருந்தார். ஆனால் அரசியலில் விஜய் கால் அடி எடுத்து வைத்ததும் விமர்சிக்க தொடங்கி விட்டார்.

    விஜய்யால் மூன்று சீட்டு கூட ஜெயிக்க முடியாது என்றெல்லாம் பேசி இருந்தார். ஆனால் இப்போது அவர் முதல்வராக மாறி இருக்கிறார். ஆனாலும் அவருடைய மகள் நான் அப்பவும் விஜய் ரசிகை இப்போ அப்பா எதிர்த்தாலும் அதே மனநிலை தான் என்று நிரூபித்து விட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்திருக்கின்றனர். அதே நேரத்தில் இன்னும் ஒரு சிலர் இந்த போட்டோவை உற்று கவனித்து ஒரு கேள்விகளையும் எழுப்புகின்றனர்.

    Advertisement

    ரசிகர்களின் கேள்வி

    அதாவது இதுவரைக்கும் படங்களிலும் சோசியல் மீடியா போஸ்ட்களிலும் வரலட்சுமி மற்றும் அவருடைய கணவரை கவனித்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் உயரம் அதிகமானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் விஜய் பக்கத்தில் நிற்கும்போது நிக்கோலாய் உயரம் கம்மியாக தெரிகிறார். அதைவிட கம்மியான உயரத்தில் வரலட்சுமி தெரிகிறார். உண்மையிலேயே விஜய் இவர்கள் இருவரை விட உயரத்தில் அதிகமானவரா? அல்லது ஸ்டூல் எதுவும் போட்டு நின்று போஸ் கொடுத்திருக்கிறாரா? என்பது தான் இப்போ ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

    பாக்யராஜ் உடலை கண்ணீருடன் சுமந்த சரத்குமார், பார்த்திபன்.. கதறி அழுத சாந்தனு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
    நாட்டில் எதை எதையோ கண்டுபிடிக்கிறாங்க இவங்க இதை கண்டுபிடிச்சுருக்காங்க பாருங்கன்னு சொல்ற மாதிரி தான் நெட்டிசன்கள் இப்போ உயரத்தை வைத்து ஒரு பஞ்சாயத்தையே நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதற்கு இடையே சிலர் முதல்வராக விஜய் பதவி ஏற்ற பிறகு அரசு வேலைகளில் கவனம் செலுத்துவார் என்று பார்த்தால் தினமும் சினிமா பிரபலங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறாரே? அவர்களை சந்திக்க மட்டும் அவருக்கு இப்படித்தான் நேரம் இருக்கிறது என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

    Advertisement

    ரசிகர்களின் விவாதம்

    ஏற்கனவே நேற்று சிவகார்த்திகேயனை விஜய் சந்தித்திருந்தார். ஆனால் விஜய் உடன் கில்லி படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த நடிகையை சந்திக்க முடியாமல் போய்விட்டது. அவரும் அப்பாயின்மென்ட் வாங்காமல் வந்ததால் கண் கலங்கி அழுதப்படியே வெளியே சென்ற வீடியோக்கள் கூட வைரலானது. இதனால் இவர்கள் எல்லாம் சில நாட்களுக்கு முன்பே அப்பாயின்மென்ட் வாங்கி தான் வந்து சந்தித்திருக்கிறார்களா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். அது எப்படியோ இப்போ வரலட்சுமி போட்ட ஒரு போஸ்ட் சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறது.

    English Summary

    Varalaxmi Sarathkumar: Actress Varalaxmi Sarathkumar along with her husband Nikolai Sachudev shared pictures on her social media page where she met Tamil Nadu Chief Minister G Joseph Vijay in person. Especially when the post he wrote about Vijay is going viral, fans are talking about something else than that post.