விஜய் கூட்டத்தில் பாடி சர்ச்சையில் சிக்கிய வேல்முருகன்.. இப்போது அறநிலைத்துறை மாநில குழுவில் முக்கிய பொறுப்பு

  • சென்னை: தமிழக இந்த சமய அறநிலைத்துறையில் புதிய மாநில அளவிலான அறங்காவலர் தேர்வு குழு தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. காரணம் இந்த குழுவில் இடம் பெற்றுள்ள சில பெயர்கள் தான். இதில் வேல்முருகன் பெயரும் இடம் பிடித்திருக்கிறது. இதுதான் இப்போ பலராலும் பேசப்படுகிறது.

    Advertisement

    கோயில்களில் பரம்பரை முறையை சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்காக, வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்காக மாநில அளவிலான புதிய குழுவை தமிழக அரசு அமைந்துள்ளது. கடந்த ஜூலை 24ஆம் தேதி உடன் முந்தைய குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த புதிய குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    கோவில் அறநிலை துறை பொறுப்புகள்

    இந்த குழுவின் தலைவராக பொம்மபுரம் ஆதீனம் சிவனான பாலய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் கே ராமநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல உறுப்பினர்களாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பா.ரா சம்பத், சொற்பொழிவாளர் மா. சுமதி, டாக்டர் த வேல்முருகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    வருஷத்துக்கு 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ள கோயில்களுக்கு பரம்பரை சாரா அறங்காவலர்களின் நியமிப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை இந்தக் குழு மேற்கொள்ள இருக்கிறது. இந்த நியமனங்களில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதியின் பெயர் கவனம் பெற்றாலும் அதே அளவில் பேசப்படுவது பின்னணி பாடகர் வேல்முருகனின் நியமனம் தான்.

    Advertisement

    பாடகர் வேல் முருகனுக்கு பொறுப்பு

    தமிழ் சினிமாவின் பல நாட்டுப்புறப் பாடல்களை பாடி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் வேல்முருகன். திரைப்பட பாடல்களுடன் பல்வேறு ஆன்மீக மற்றும் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நடைபெற்ற தமிழக வெற்றி கழகப் பொதுக் கூட்டத்தில் அவர் பாடிய பாடல் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    விஜயை புகழ்ந்து பாட்டு

    அந்த மேடையில் முருகப்பெருமானுக்கான பக்தி பாடலின் வரிகளை மாற்றி அதனை விஜயை மையப்படுத்தி பாடியது சோசியல் மீடியாவில் அதிகமாக விமர்சனம் செய்யப்பட்டது. பக்தி பாடலை அரசியல் மேடை அதுவும் குறிப்பிட்ட ஒரு கட்சி தலைவரை வைத்து பாடி விட்டாரே என்று பலரும் கூறி வந்தனர். இந்த விவகாரம் தொடர்ந்து பெரிதாக பேசப்பட்டதை தொடர்ந்து வேல்முருகன் விளக்கம் அளித்து இருந்தார்.

    Advertisement

    கோவில் அறங்காவலர் தேர்வு குழுவில்.. திரிஷாவின் நெருங்கிய தோழி அர்ச்சனா கல்பாத்திக்கு முக்கிய பொறுப்பு
    யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை என்றும் அதனால் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் அந்த சமயத்தில் பெரிதாக பேசப்பட்டது. அந்த சர்ச்சைக்கு பிறகு தமிழக அரசிற் இந்து சமய அறநிலைத்துறையின் முக்கிய மாநிலக் குழுவில் வேல்முருகன் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது மீண்டும் கவனம் ஈர்த்திருக்கிறது.

    ஒரு புறம் அவருடைய இசை மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் உள்ள அனுபவத்தை கருத்தில் கொண்டு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறி வருகின்றனர். மறுபக்கம் தேர்தல் காலத்தில் விஜய் மேடையில் பாடிய வேல்முருகனுக்கு தற்போது இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் ரீதியாகவும் பேசப்பட்டு வருகிறது.

    English Summary

    Velmurugan: Tamil Nadu's new state-level board of trustees in this religious charity department has become a talking point in political and film circles. The reason is some of the names included in this group. Velmurugan's name is also included in this. This is what many people are talking about now.