சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் தனது 51வது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நிலையில் அவரை சந்திக்க திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் திரண்டானர். ஆள் உயர மாலை, கேக் வெட்டு என கொண்டாட்டம் கலை கட்டிய நிலையில் அந்த விழாவில் வெற்றி வீரவாள் ஒன்று பரிசாக வழங்கப்பட்ட காட்சி தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
வீரவாளை வெற்றிமாறன் கையில் வைத்திருக்க, அவரை சுற்றி இருந்தார்கள் ஆர்வமாக பார்க்கிறார்கள். குறிப்பாக அருகில் இருந்த சிறுவர்கள் அந்த வாளை பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் கட்சியும் வீடியோவில் இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த சிலர் வெற்றிமாறன் போன்ற இயக்குனரின் பிறந்தநாள் விழாவில் இப்படி ஒரு ஆயுதத்தை பரிசாக கொடுப்பது எதற்காக என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வெற்றிமாறனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
ஒரு ரசிகர் பகிர்ந்த பதிவில், வன்முறையை தூண்டும் வெற்றிமாறன்.. அவர் மீதும் அவரது படங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். அதேபோல் மற்றொரு பதிவில் அந்த வாளை சிறுவர்கள் ஆர்வமாக பார்ப்பதை சுட்டிக்காட்டி இந்த குழந்தையின் ரியாக்சனை பாருங்கள் இதுதான் கெத்து, இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்து விடுவான். அதனால் இதுபோன்ற செயலை தடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இங்கே தான் இந்த சர்ச்சையை கொஞ்சம் வேறு விதமாக பார்க்க வேண்டியது இருக்கிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெற்றிமாறனுக்கு வீரவாள் வழங்கப்பட்டதற்கான காரணம் அல்லது அதன் பின்னணி குறித்து அவர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை. அதனால் வெற்றிமாறன் வன்முறையை ஆதரிக்கிறார் என்று இந்த ஒரு விஷயத்தை வைத்து சொல்வது சரியா? என்று சிலர் கேள்வி வருகின்றனர். ஆனால் குழந்தைகள் இருக்கும் ஒரு கொண்டாட்டத்தில் ஆயுதம் பெரிதாக காட்டுவது தவறு தான் என்றும் சோசியல் மீடியாவில் விவாதம் எழுந்து வருகிறது. ஏற்கனவே வெற்றிமாறனின் படங்களில் பெரும்பாலும் சமூகப் பிரச்சனைகள், வன்முறை, அதிகாரம், ஒடுக்குமுறை போன்ற விஷயங்களை மையமாக வைத்திருப்பதால் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இப்படி ஒரு காட்சி வந்ததும் நெட்டிசன்கள் அதை வைத்து விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் ஆகிவிட்டன. 2007இல் தனுஷை வைத்து இயக்கிய பொல்லாதவன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை என அவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை அதிகமாக எல்லா விட்டாலும் ஒவ்வொரு படத்திலும் தனக்கான ஒரு தடத்தை ஏற்படுத்தியவர். குறிப்பாக ஆடுகளம் 6 தேசிய விருதுகளை வென்றது. வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை என இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்தன. அதன் பிறகு விசாரணை இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்காக அதிகாரபூர்வ பட்டியலில் அனுப்பப்பட்டது. Mohan G: வெற்றிமாறன் சொன்னா ஏத்துக்கிறாங்க! நான் சொன்னா மட்டும் திட்றாங்க.. மோகன் ஜி ஆதங்கம்வீரவாள் சர்ச்சை
வெற்றிமாறனின் படங்கள்
அசுரன் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. அதனால் தான் வெற்றிமாறனுக்கு சினிமாவில் மட்டுமல்லாமல் அவருடைய படைப்புகளை தீவிரமாக பின்பற்றும் ஒரு தனி பார்வையாளர்கள் கூட்டமும் இருக்கிறது. இந்த நிலையில் வெற்றிமாறன் படங்களில் வரும் வன்முறைக்கும் அவரது பிறந்தநாள் விழாவில் அவருக்கு வழங்கப்பட்ட ஒரு வீர வாளுக்கும் முடிச்சு போட்டு பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது.