டோரதி படத்தை பார்த்து வெற்றி மாறன் சொன்ன வார்த்தை.. விமர்சனமும், பாராட்டும் விவாதம்!

  • சென்னை : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான டோரதி படம் இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதமாக மாறி இருக்கிறது. படம் பார்த்தவர்கள் எல்லோருமே ஒரே மாதிரியான கருத்தை சொல்லவில்லை. சிலருக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. குறிப்பாக கார்த்திக் சுப்புராஜ் வழக்கமான கதைக்களத்தில் இருந்து விலகி ஆணாதிக்கம், பாலினம், சமூக கட்டுப்பாடுகள் என பல விஷயங்களை பேசி இருப்பதை பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் சில நெகட்டிவ் விமர்சனங்களும் இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் வெற்றி மாறன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

    Advertisement

    வெற்றிமாறன் பாராட்டு

    இந்த படத்தை பார்த்துவிட்டு ஏற்கனவே சில பிரபலங்கள் பேசி இருக்கிறார்கள். அந்த வரிசையில் வெற்றி மாறன் பேசுகையில், இந்த படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்க்கு பெரிய பாராட்டுக்கள் சொல்லியாக வேண்டும். ஏனென்றால் அவருடைய துணிச்சலான இந்த கதை பார்க்கும்போது நமக்கு ஒரு வியப்பை ஏற்படுகிறது. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்கு இளையராஜா சாரின் மியூசிக் எனக்கு தனியாக கேட்கவே இல்லை. படத்தோடு எமோஷனலாகவே கலந்துவிட்டது.

    Advertisement

    அதில் ஒரு பாடல் வரும் அந்த பாடலை சுச்சுவேஷனை சொல்லி இளையராஜாவிடம் பாட்டு கேட்டியா? அல்லது அவர் பாட்டு போட்ட பிறகு அந்த சுச்சுவேஷனை வைத்தியா? என்று கார்த்திக்கிடம் கேட்டேன். ஆனால் அவர் சுச்சுவேஷனை சொல்லி தான் இளையராஜா சார் பாட்டு போட்டாரு என்று சொன்னாரு. எனக்கு அந்த குழப்பம் வர மாதிரி தான் பாடல்களும் உள்ளே மியூசிக்கும் இருக்கிறது. இளையராஜா மியூசிக் சொல்லவே வேண்டாம், அது இந்த படம் முழுக்க ஒரு மாயாஜாலம் செய்து இருக்கிறார்.

    அதுபோல இந்த படத்தில் லீடு கேரக்டரில் நடித்தவர்களும் சரி, சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர்களும் சரி, அவ்வளவு தத்துரூபமாக நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை 1990 காலகட்டத்தில் உள்ளது. அதை நாம இப்போ பார்க்கும்போது சிலருக்கு முகம் சுளிக்க வைக்கலாம். சிலருக்கு திருப்பி இல்லாமல் இருக்கலாம். சிலருக்கு விமர்சனங்கள் வரலாம். ஆனால் அந்த காலகட்டத்தில் இதுபோன்று ஒரு மனநிலையில் சூழ்நிலையில் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று தான் ஒரு கதை எழுதப்பட்டிருக்கிறது.

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    கதையாக பார்க்கும் போதும் சரி, படமாக பார்க்கும்போது சரி, அவ்வளவு அழகாக இருக்கிறது என்று படத்தை வெற்றி மாறன் பாராட்டி இருக்கிறார். அதே நேரத்தில் சோசியல் மீடியாவில் சில விஷயங்கள் படத்தை பற்றி பேசப்பட்டு வருகிறது. 2 நண்பர்களின் கதை கடைசியில் காதலை நோக்கி போகிறது, அது நல்லாவா இருக்கிறது? என்று சிலர் விமர்சித்து வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் இரண்டு நண்பர்களாக இருந்தாலும் ஒருவருக்குள் இருக்கும் பெண்மையை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார், அவர்களுக்குள் என்ன மாதிரியான கேரக்டரோ அதைத்தானே அந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள் என்றும் சப்போர்ட் செய்கிறார்கள்.

    Advertisement

    இருவிதமான விமர்சனம்

    இதனாலையே இந்த படத்தை பற்றிய விவாதம் எழுதுகிறது. ட்ரைலரை பார்க்க பார்த்தபோது 2 ஆண்கள் ஒரு பெண்ணுக்கு சண்டை போடுவது போல இருந்தது. ஆனால் படத்தை பார்த்தால் வேற கதையை காட்டி விட்டார்கள் என்று சிலர் அலுத்துக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. இந்த படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது பட குழுவுக்கு பாராட்டு கிடைத்தது. அதுபோல இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சனந்த் மற்றும் ரிஷிக்காந்த் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதனால் இப்பொழுது டோரதி மீது ஒரே மாதிரியான விமர்சனங்கள் இல்லை. பிடித்தவர்களுக்கு இது வித்தியாசமான முயற்சி பிடிக்காதவர்களுக்கு படத்தின் சில கருத்துக்களும் முடிவும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

    English Summary

    The film *Dorothy*, directed by Karthik Subbaraj, has sparked a major debate among Tamil cinema fans. Opinions on the movie are divided; while some really enjoyed it, there are also negative reviews. Amidst this, a video of director Vetrimaaran speaking about the film is going viral.