கோவில் விளக்கு முதல் சுடலைமாடன் வேட்டை வரை.. 59 வினாடிகளில் மிரள வைத்த வேட்டை சாமி! கூஸ்பம்ப் ஏற்றிய குரல்

  • சென்னை: அருள்நிதி படம் என்றாலே வழக்கமாக கமர்சியல் கதைகளை விட கொஞ்சம் வித்தியாசமான கதை களத்தை எதிர்பார்க்கலாம். அந்த வரிசையில் தற்போது வெளியாகியிருக்கும் வேட்டை சாமி படத்தின் அறிமுக கிளிம்ஸ் படத்தின் கதையை விட அதில் ஒலிக்கும் ஒரு குரல் தான் ரசிகர்களின் கவனத்தை திருப்பி உள்ளது. அது வேறு யாருடைய குரலும் இல்லை வில்லுப்பாட்டு மூலம் பிரபலமான மாதவியின் குரல்.

    Advertisement

    நேற்று வெளியாகி இருக்கும் 59 வினாடி கிளிப்ஸ் வீடியோவில் கிராமத்தில் இருக்கும் கோவில், மின்விளக்குகள், சாமியாடும் அருள்நிதி, சுடலைமாடன் வழிபாடு என தென் மாவட்டத்தின் நாட்டுப்புற ஆன்மீக சூழல் கண் முன்னே விரிகிறது. அந்த காட்சிகளில் பின்னணியாக மாதவியின் கம்பீரமான குரலில் ஒலிக்கும் சுடலை மாடன் வேட்டை பாடல் தான் வீடியோவில மிகப்பெரிய பலமாக மாறி இருக்கிறது.

    Advertisement

    வில்லுப்பாட்டு மாதவியின் குரல்

    வில்லுப்பாட்டு கலைஞராக ஏற்கனவே தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாகி இருக்கும் மாதவி இந்த படத்தின் மூலம் திரைப்பட பாடகியாக அறிமுகம் ஆகிறார். ஜிப்ரான் இசை அமைப்பில் அவர் பாடி இருக்கும் சுடலைமாட வேட்டை பாடல் ஏற்கனவே ஒளிப்பதிவு செய்யப்பட்டு விட்டதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது அந்த குரலின் ஒரு பகுதி கிளிப்ஸ் ஒலித்தது. இந்த குரலே காட்சிக்கு கூஷ்பம்ஸ் கொடுக்கிறது.

    நாட்டுப்புற இசையின் அந்த மண்ணின் வாசனை அப்படியே இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக இது வழக்கமான சினிமா பாடல் போல இல்லாமல் ஒரு காவல் தெய்வத்தின் வேட்டை, சாமியாட்டம், கிராம வழிபாடு ஆகியவற்றோடு கலந்த நாட்டுப்புற பாடல் என்பதால் காட்சிகளுக்கும் இசைக்கும் ஒரு வித்தியாசமான தன்மை கிடைத்து இருக்கிறது.

    Advertisement

    மாதவியை செலக்ட் செய்ய காரணம்

    இங்கேதான் வேட்டை சாமி படத்தில் படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. வில்லுப்பாட்டு என்பது வெறுமனே பாடுவது கிடையாது. கதை சொல்லுதல், குரலில் ஏற்ற இறக்கம், வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்தல், ஒரு சம்பவத்தை கண் முன்னே கொண்டு வருவது என தனித்துவமான இசை வடிவம் அந்த அனுபவத்துடன் இருக்கும். மாதவியின் குரலை ஜிப்ரான் பயன்படுத்தி இருப்பது படத்தின் கதை நடக்கும் மண்ணின் குரலையே பாடலுக்குள் கொண்டு வருவது போல் அமைந்திருக்கிறது. இதுவே கிளிம்ஸ் வீடியோவையும் மற்ற படங்களின் அறிமுக வீடியோக்களில் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.

    Advertisement

    சுடலை மாடனாக அருள்நிதி

    அந்த வீடியோவில் அருள்நிதி சாமி ஆடும் தோற்றத்தில் வேட்டைக்கு சொல்லும் சுடலைமாடன் கதாபத்திரத்தில் காட்டப்படுகிறார். மறுபுறம் அமீர் சாமக்கொடையில் ஆடு வெட்டும் காட்சிகளும் இருக்கிறது. 59 வினாடிகளில் ஒரே ஒரு அடிய மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பின்னணி இசை பதற்றத்தை அதிகரிக்கிறது. படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள "சட்டத்தில் இருந்து தப்பி இறைவனை எதிர்கொள்" என்ற வாசகமும் கதையின் மீது இன்னொரு கேள்வியை எழுப்புகிறது.

    கோலிவுட்டில் நுழைந்த வில்லுப்பாட்டு மாதவி.. கோவில் திருவிழாக்களை கலக்கிய நாட்டுப்புற குரல்.. யார் இந்த 2k கிட்?
    அதனால் இது வெறுமனே பக்தி படம் என்பதை கடந்து தெய்வ நம்பிக்கை, வீரம், மண், காவல் தெய்வம், மனிதர்களின் வாழ்க்கை ஆகியவற்றை இணைக்கும் கதையாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தைபம்பர் படத்தை இயக்கிய எம் செல்வகுமார் எழுதி இயக்கியுகிறார். அருள்நிதி கதாநாயகனாக நடிக்க அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    Advertisement

    வேட்டை சாமி பட நடிகர்கள்

    இவர்களோடு ஆடுகளம் நரேன், மதுசூதன ராவ், ஹரிஷ் பேரடி, விஜி சந்திரசேகர், மைனா நந்தினி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். படத்தை 7 மைல்ட்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். ஒளிப்பதிவு ஆர்டி ராஜசேகர் செய்திருக்கிறார். எடிட்டிங் பணிகளை ரூபன் கவனிக்கிறார். சண்டை காட்சிகளை சிறுத்தை கணேஷ் அமைத்திருக்கிறார்.

    சமீபத்தில் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி தயாரித்த கருப்பு படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. அது முழுக்க முழுக்க சாமி படம் போல இல்லாமல் அநியாயத்திற்கு எதிராக கடவுள் வந்தால் என்ன நடக்கும் என்பது போல இருந்தது. அதேபோலத்தான் இந்த படமும் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஆன்மீகம், தெய்வ நம்பிக்கை மற்றும் நாட்டுப்புற தெய்வங்களை மையமாக வைத்து கதைகள் உருவாக்கும் போக்கு அதிகரித்து இருக்கிறது. சிவகார்த்திகேயனின் சேயோன், தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் தமிழ் முருகன் போன்ற படங்களை தொடர்ந்து அந்த வரிசையில் வேட்டை சாமியும் இணைந்து இருக்கிறது.

    Advertisement

    English Summary

    Vettai Saami: With an Arulnithi film, one can usually expect a storyline that differs somewhat from standard commercial fare. In this vein, regarding the recently released introductory glimpse of the movie *Vettai Saami*, it is not the plot itself but a voice heard in the clip that has captured the audience's attention. That voice belongs to none other than Madhavi, who rose to fame through the *Villu Paattu* art form.