தலையை வெட்டி, ரத்த காவு கொடுத்த விஜய் ரசிகர்கள்... ப்ளூ சட்டை மாறன் விளாசல்... ஜனநாயகன் சம்பவம்

  • சென்னை: நேற்று (ஜூலை 23) உலக அளவில் ஜனநாயகன் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியானது. அதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் செய்த செயல் முகம் சுளிக்கும்படி இருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதிலும் சில ரசிகர்கள் தியேட்டர் வாசலில் விஜய் போஸ்டருக்கு ரத்த காவு கொடுத்து இருக்கின்றனர். அந்த வீடியோவை ப்ளூ சட்டை மாறன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து விளாசி இருக்கிறார்.

    Advertisement

    விஜய் ரசிகர்கள் கடந்த 7 மாதங்களாக காத்திருந்ததற்கு ஜனநாயகன் திரைப்படம் நேற்று வெளியாகி இருக்கிறது. இந்த படம் பல சர்ச்சைகளை கடந்து வந்தது. ஆரம்பத்திலேயே பொங்களுக்கு வெளியாக இருந்த இந்த திரைப்படம் பிறகு சென்சார் பிரச்சனைகளால் தள்ளி போனது. அதற்கு பிறகு முழு படமும் சோசியல் மீடியாவில் லீக் ஆகிவிட்டது. ஆனாலும் விஜய் படம் எப்போது வருகிறதோ அதுதான் எங்களுக்கு உண்மையான பொங்கல் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

    Advertisement

    அதேபோல இப்போது விஜய் முதல்வரான பிறகு முதல் படமாக ஜனநாயகன் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதுதான் என்னுடைய கடைசி படம் என்று விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தாலும் இந்த படம் ரிலீஸ் திருவிழா போலவே கொண்டாடி வந்தனர்.

    ஜனநாயகன் ரிலீஸ் அலப்பறை

    தியேட்டரில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நேற்று அதிகாலையில் இருந்து ஆண்களும் பெண்களும் தியேட்டர் வாசலில் காத்திருந்தனர். அப்போது பாலபிஷேகம் செய்வது, வெடி வெடிப்பது, தாரை தப்பட்டை முழக்கம், டிஜே ஆட்டம் என வேறலெவலில் எல்லோரும் என்ஜாய் பண்ணிக் கொண்டிருந்தனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சிலர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    விஜய் ரசிகர் ரத்தக்காவு

    அதிலும் சில ரசிகர்கள் விஜய் கட்டவுட் முன்பு கோழியை பலி கொடுத்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. தியேட்டர் வாசலில் ஜனநாயகனின் ரிலீஸுக்காக வைக்கப்பட்ட கட்டவுட் முன்பு அந்த நபர் நின்று கொண்டு இது நம்முடைய ஆட்சி யாரு கேட்பாங்கன்னு பார்க்கலாம் வாங்க என்று சொல்கிறார்.
    பிறகு ஒரு கோழி கழுத்தை அறுத்து அதில் பீறிட்டு வந்த ரத்தத்தை விஜய் கட் அவுட்க்கு அபிஷேகம் செய்திருக்கின்றனர். இதை பார்க்கும் போதே பதற வைக்கிறது.

    ப்ளூ சட்டை மாறன் விளாசல்

    பிறகு அந்த கோழி துடித்து... முழுமையாக உயிர் பிரிந்த பிறகு அதை கட்டவுட் முன்பே போட்டுவிட்டு விஜய் போட்டோவை தொட்டு கும்பிடுகிறார். இதை பார்த்து சிலர் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த வீடியோவை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்து "இந்த முட்டாள்தனங்களை செய்வதில் மெடல் வாங்கியவர்கள்" என்று விளாசி இருக்கிறார். இது சோசியல் மீடியாவில் விமர்சனங்களை பெற்று வருகிறது.

    Advertisement

    ஏற்கனவே டெல்லியில் மாணவர்கள் நீட் எக்ஸாமுக்கு எதிராக போராடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ரசிகர்கள் எல்லோரும் தியேட்டர் வாசலில் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பதை வைத்தும் பலர் விமர்சித்து வருகிறார்கள். இதற்கு இடையே இது போன்று முகம் சுளிக்கும் வகையிலும் சிலர் நடந்து கொள்கிறார்கள்.

    English Summary

    Jana nayagan : Yesterday (July 23) the movie Jana nayagan was released globally. Vijay fans are celebrating it. At the same time, many people are displeased on social media saying that what some people have done is frowned upon. Moreover, some fans are giving blood to the Vijay poster at the theater door. Blue Sattai Maran has shared the video on his social media page.