சென்னை: தமிழக முதல்வர் விஜய் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை செய்து வரும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தற்போது அளித்த புதிய பேட்டியில் பேசியது சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த காலத்திலிருந்து அவருடைய அரசியல் அனுபவம், நிர்வாகதிறன் மற்றும் பொதுக்கூட்டங்கள் குறித்து பல விமர்சனங்களை ஜேம்ஸ் வசந்தன் செய்து வந்தார். ஆனால் இப்போது அவர் வெற்றி பெற்ற பிறகும் அத்திப்பழ புழு தான் இந்த அரசு என்று விமர்சித்திருப்பது பேசிப் பொருளாகி வருகிறது.
ஜேம்ஸ் வசந்தன் பேட்டி
சமீபத்திய பேட்டியில் ஜேம்ஸ் வசந்தன் பேசும்போது, இப்பவும் என் கணிப்பு தவறாக இல்லை. நான் நினைத்ததை விட ரொம்ப மோசமாக விஜய் இருக்கிறார். அவரை இந்த இடத்தில் அமர வைத்திருக்கவே கூடாது என்று சொல்லி இருக்கிறார். மேலும் கடந்த மூன்று மாதத்தில் அரசாங்கத்தில் என்ன நடந்திருக்கிறது? அதிகாரிகள் அவர்களுடைய வேலைகளை செய்து கொண்டிருப்பதால் எல்லாமே அப்படியாக போய்க் கொண்டிருக்கிறது.
புதியதாக எதுவும் முன்னேறவில்லை. இவருடைய ஆட்சி அத்திப்பழ புழு போற மாதிரி தான் இருக்கு. அத்திப்பழம் மலராக இருக்கும் போதே புழு உருவாகி விடும். அந்த புழு வாழ்க்கை அங்கேயே தொடங்கி அங்கேயே முடிஞ்சிடும். அதே மாதிரி தான் இந்த அரசும் உயிரோடு இருக்கு, ஆனா செயல்படவில்லை. யாருக்கும் எந்த பயனும் இல்லை என்று ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்து இருக்கிறார். இதனால் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். ஏற்கனவே ஒரு பேட்டியில் ஜேம்ஸ் வசந்தன் பேசும்போது அரசியல் அறிவே இல்லாத ஒருவர் நேரடியாக முதல்வராக வர நினைப்பது சரியல்ல, தமிழக அரசியலை குழப்ப வந்த கருவியாகத்தான் நான் விஜய்யை பார்க்கிறேன். விஜய்க்கு பின்னால் சினிமா கவர்ச்சி மட்டுமே இருக்கிறது என்றெல்லாம் அவர் இதற்கு முன்பும் கடுமையாக விமர்சித்து இருந்தார். “மோதிரம் கொடுத்தால் தமிழ்நாடு முன்னேறுமா?” விஜய்யின் 'தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை கலாய்த்த ஜேம்ஸ் வசந்தன் இப்போது அதைத் தொடர்ந்து விஜய்யின் அரசை அத்திப்பழ புழுவுடன் கம்பேர் பண்ணி பேசி இருக்கிறார். இதுவும் இப்போது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சிலர் எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டிய கேள்விகளை ஜேம்ஸ் வசந்தன் கேட்கிறார் என்று அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் மூன்று மாத ஆட்சியை வைத்து இவ்வளவு பெரிய முடிவுக்கு வர வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.விஜய் அரசு பற்றிய விமர்சனம்
மேலும் அவரை மக்கள் தேர்ந்தெடுத்து முதல்வராக்கிய பிறகும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். விஜய் அரசியல் கட்சி தொடங்கியது கூட பிரபலம் ஒருவருடைய காசில்தான் தன்னுடைய சொந்த காசுலிருந்து விஜய் கட்சிக்கோ மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை, அவருக்கு பின்னால் இருந்து வேறொருவர் தான் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் பேசி இருந்தார்.ரசிகர்கள் கருத்து