சென்னை: தமிழக அரசியல் குறித்து நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் செயல்பாடுகளை அவர் வெளிப்படையாக பாராட்டியதோடு நிகழ்ச்சியில், இருந்த விவசாயி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கொடுத்த பதிலும் இணையத்தில் விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய புஷ்பவனம் குப்புசாமி, இப்போது தமிழ்நாட்டில் யாரும் தைரியமாக லஞ்சம் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. யாராவது லஞ்ச வாங்கியதாக தெரிந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனால் தான் இப்போது பலரும் பயப்படுகிறார்கள். நல்ல மாற்றம் நடந்தால் அதை யார் செய்தாலும் பாராட்ட வேண்டும் என்று கூறினார்.
புஷ்பவனம் குப்புசாமி பேச்சு
அதை தொடர்ந்து முதல்வர் விஜய் தலைமையிலான அரசு விவசாயிகளுக்காக கடன் தள்ளுபடி அறிவிப்பை நிறைவேற்றி இருப்பதாக அவர் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பெரிய விவசாயிகளுக்கு குறிப்பிட்ட அளவில் நிவாரணம் வழங்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.
சூப்பர் சிங்கரில் அசம்பாவிதம்.. பாடும் போதே அழுத போட்டியாளர்கள்.. புஷ்பவனம் குப்புசாமி சொன்ன வார்த்தை
ஆனால் அரசு சொன்னது போல விவசாயிகளுக்கு நிவாரணத்தை வழங்கி விட்டது என்று குப்புசாமி சொன்னதும் அங்கிருந்த விவசாயி ஒருவர் இன்னும் முழுமையாக கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று கருத்து தெரிவித்தார். அதற்கு புஷ்பவனம் குப்புசாமி அவர் இப்பதான் வந்திருக்கிறார் எல்லாமே மாறும், சொன்னதை கண்டிப்பாக காப்பாற்றுவார். நம்புவோம்... நம்பிக்கைதான் வாழ்க்கை. எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால் எதுவும் நடக்காது என்று சொல்லி இருக்கிறார்.
மேலும் குடும்ப வாழ்க்கை உதாரணத்துடன் இன்னொரு குட்டி ஸ்டோரி சொல்லி இருக்கிறார். அதாவது வீட்டில் பொண்டாட்டி குழம்பில் உப்பு போடாவிட்டால், உப்பு போட சொல்லணும். அதை விட்டுட்டு இது சரியில்ல, அது சரியில்லனு பழைய கதை எல்லாம் இழுத்து பேசினா தேவையில்லாத சண்டைகள் தான் வரும். அதேபோலத்தான் அரசியலில் நல்லது நடந்தா பாராட்டணும், குறை இருந்தா சொல்லணும் என்று அவர் சொல்ல அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வெளியானதும் கலவையான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் நல்லது நடந்தால் பாராட்ட வேண்டும் என்று குப்புசாமிக்கு ஆதரவாக சிலர் பேசிக் கொண்டிருந்தாலும், கடந்த சில மாதங்களாக விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அரசியல் அரங்கில் கடும் விவாதம் நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதியும், நடைமுறையில் அறிவிக்கப்பட்ட திட்டமும் வேறுபடுகிறது என்று எதிர் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.முதல்வர் விஜய்க்கு சப்போர்ட்
விவசாய கடன் பற்றி பேச்சு