சென்னை: விஜய்யின் கடைசி படமாக வெளியாகி உள்ள ஜனநாயகன் இன்று அதிகாலை முதல் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் காட்சி முடிந்த சில நிமிடங்களிலே சோசியல் மீடியா முழுவதும் #Jananagan ஹேஷ்டேக் டிரண்ட் ஆகி வருகிறது.
வழக்கம்போல ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள், பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் பலரும் ட்விட்டர் (X) தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் விஜய்யின் ஸ்கிரீன் பிளே, அனிருத்தின் பின்னணி இசையை பாராட்டியுள்ள நிலையில் சிலர் கதை மற்றும் வில்லன் கேரக்டர் குறித்து விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். அதை விரிவாக பார்க்கலாம்.
சினிமா விமர்சகர் அமுத பாரதி தன்னுடைய விமர்சனத்தில், ஜனநாயகன் ஒரு நல்ல கமர்சியல் என்டர்டைன்மென்ட் படம்தான். குறிப்பாக விஜய், மமிதா பைஜூ இடையிலான உணர்வுபூர்வமான காட்சிகள் தான் படத்தின் பலம் என்றும் விஜய் தன்னுடைய மாஸ் ஸ்கிரீன் ப்ரெசென்ஸால் முழு படத்தையும் தாங்கி நிற்கிறார் என்றும் கூறியிருக்கிறார். அதேபோல் அனிருத் இசை, தளபதி கச்சேரி பாடல், இன்டெர்வெல் காட்சி ஆகியவை தியேட்டரில் பெரிய வரவேற்பு பெற்றுள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார். மற்றொரு ரசிகர், ஜனநாயகன் முதல் பாரதி பிளாக்பஸ்டர் தரத்தில் இருக்கிறது என்று பாராட்டிருக்கிறார். குறிப்பாக விஜர்யின் டைட்டில் கார்டு முதல் தளபதி கச்சேரி பாடல் வரை தியேட்டரே அதிர்ந்தது என்றும், ரசிகர்கள் ஒவ்வொரு காட்சியையும் கொண்டாடியதாகவும் அவர் பதிவிட்டு இருக்கிறார். மேலும் விஜய் மமீதா பைஜூ காட்சிகள் ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகிறது, இன்டெர்வல் சண்டைக்காட்சியையும் I am coming தருணமும் அரங்கத்தையே அதிர வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் விமர்சகர் வெங்கி, தன்னுடைய பதிவில் முதல் பாதியை வீடியோக்கர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவரை பொறுத்தவரை இன்டெர்வெல் பகுதி மட்டுமே பெரிய ஹைலைட் என்றும் அதை தவிர சில மாஸ் காட்சிகள் இருந்ததாகவும், திரைக்கதை சில இடங்களில் தடுமாறுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பாபி டியோலின் வில்லன் கேரக்டர் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை VFX பலவீனமாக இருக்கிறது, மகள் தொடர்பான எமோஷனல் காட்சிகள் இன்னும் ஸ்ட்ராங்காக இருந்திருக்கலாம் என்று அவர் கருத்து தெரிவிக்கிறார். இருப்பினும் விஜய்யின் நடிப்போம் அனிருத் இசை தான் முதல் பாதியை தாங்கி நிற்கிறது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். சோசியல் மீடியாவில் முதல் பாதி பற்றி வெளியாகும் பெரும்பாலான பதிவுகளில் விஜய்யின் அறிமுகம், அனிருத்தின் பின்னணி இசை, தளபதி கச்சேரி பாடல், இன்டெர்வல் ப்ளாக் ஆகியவை அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது. மறுபக்கம் வில்லன் கேரக்டர் மற்றும் சில காட்சிகளின் நீளம், VFX குறித்து சிலர் குறைகளையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.ஜனநாயகன் ட்விட்டர் ரிவ்யூ
ஜனநாயகன் இன்டெர்வல் காட்சி
ஜனநாயகன் படத்தின் குறைகள்