கொளத்தூர் பற்றி பேசி ஸ்டாலினை மீண்டும் சீண்டிய முதல்வர் விஜய்.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்


  • சென்னை: முதல்வர் விஜய் பேசும் ஒவ்வொரு விஷயங்களும் இப்போது விவாதமாக மாறி வருகிறது. சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலினை கிண்டல் செய்து பேசியதற்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் விமர்சனம் வைத்தனர். இந்த நிலையில் கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மறைமுகமாக பேசி மீண்டும் கிண்டல் செய்து இருக்கிறார். இதை வைத்து ப்ளூ சட்டைமாறன் கலாய்த்து ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

    Advertisement

    இன்று நடந்த கரூர் நிகழ்ச்சியில் பேசிய விஜய், நான் பேசவில்லை என்றால் வாயை திறங்க சிஎம் என்று சொல்கிறார்கள்... நான் பேச ஆரம்பித்தாலே எழுந்து வெளியே போய் விடுகிறார்கள். இனிமேல் பேசுவதற்கு முன்பு எல்லா கதவையும் மூடுங்கள் என்று சொல்லிவிட்டு தான் பேச வேண்டும். நான் ஐந்து நிமிடம் பேசியதற்கு கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க இதற்கு மேல் பேசினால் மொத்தமாக முடிந்துவிடும் என்று பேசினர்.

    Advertisement

    முதல்வர் விஜய் பேச்சு

    முதல்வர் விஜய் இப்படி பேசிய வீடியோ வெளியான சில மணி நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் ஆரம்பித்துவிட்டது. இந்த விவாதத்தில் வழக்கம் போல இணைந்தவர் தான் ப்ளூ சட்டை மாறன்‌. அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து அதற்கு, "தவெகாவை துறைமுகம் தொகுதியில் தூள் பக்கோடா போட்டதே திமுக.. சேப்பாக்கத்தில் சேமியா பாயசம் போட்டதே திமுக.. அதைப்பற்றி பேச மாட்டீர்களா? 234 தொகுதிகளில் 126 இடங்களில் தவெக தோல்வி அடைந்தது. அங்கே மக்கள் போட்டதும் கொத்து பரோட்டா தானே?" என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

    Advertisement
    ஹாஸ்பிடலுக்கு அதிரடியாக போன முதல்வர் விஜய்.. அங்கு இப்படியா செய்யணும்? விளாசிய ப்ளூ சட்டை மாறன்

    ப்ளூ சட்டை மாறன் பதிவு

    இந்த பதிவு சோசியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் இன்னும் ஒரு சிலர் ப்ளூ சட்டை மாறனின் பதிவை பகிர்ந்து விவாதித்து வருகின்றனர் . ஏற்கனவே சட்டசபையில் முதல்வர் பேசும்போது அப்பாவை காணோம் என்று கலாய்த்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பேச்சுக்கு திமுக மட்டும் அல்ல கூட்டணியில் இருந்த வீசிக தலைவர் திருமாவளவன், சி பி எம் மாநில செயலாளர் சண்முகம் உட்பட பலர் அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.

    Advertisement

    விஜய் கூட இருந்தவங்களே இப்படி பண்ணிட்டாங்க.. நடிகர் கில்லி மாறன் இறப்புக்கு பிறகு மகள் உருக்கம்.. குவியும் ஆறுதல்
    இந்த விமர்சனத்திற்கு பிறகும் விஜய் தன்னுடைய பேச்சை மாற்றுவார் என்று எதிர்பார்த்தால் அவர் மீண்டும் கரூர் மேடையில் கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க என்று பேசியது பழைய விவாதத்தை மீண்டும் தூண்டி இருக்கிறது. எதுவாக இருந்தாலும் சரி இப்போ கொத்து பரோட்டா என்ற ஒரு டயலாக் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

    English Summary

    Vijay and Blue Sattai Maran: Chief Minister Vijay's speech at a public meeting in Karur has sparked another political controversy after he joked that his five-minute speech had already caused a stir in Kolathur. Blue Sattai Maran responded by pointing to TVK electoral defeats, questioning why those setbacks were not being discussed.