அவரை பழிவாங்க நினைத்தேன்! அன்பால தான் அப்படி சொல்லுறேன்.. சரண்டரான விஜய் சேதுபதி

  • சென்னை: பத்தா இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசிய வீடியோஸ் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ஷாருக்கானை பழிவாங்குவதற்காக நான் நினைத்தேன், காரணம் இதுதான் என்று ஓபனாக பேச அது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

    Advertisement

    சோசியல் மீடியாவை திறந்தாலே இன்று காலையில் இருந்து பத்தா திரைப்பட இசை வெளியீட்டு விழா வீடியோக்கள் தான் வைரல் ஆகி வருகிறது. அதில் அட்லீ விஜய் பற்றி பெருமையாக பேசியதை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே விஜய் சேதுபதி விஜய் பற்றி பேசியது ஒரு பக்கம் வைரல் ஆகி வருகிறது. லீடர்ஷிப் பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி இதற்கு பேசியதற்கு பிறகு இப்போது விஜய் பற்றி நேரடியாகவே பேசி இருக்கிறார்.

    Advertisement

    விஜய் சேதுபதி பேச்சு

    இதற்கிடையே இன்னொரு விஷயத்தையும் விஜய் சேதுபதி பேசியிருந்தார். அதாவது ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்ததை பற்றி சொல்லிருந்தார். அதாவது ஷாருக்கானை பழிவாங்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. நான் காலேஜ் படிக்கும்போது ஒரு பெண்ணை காதலிச்சேன். ஆனா அந்த பொண்ணுக்கு என்னை விட ஷாருக்கானை புடிக்கும்னு சொல்லிடுச்சு. அந்த நிமிடத்தில் இருந்து அவரை பலி வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். இதை நான் ஜவான் பட இசை வெளியீட்டு விழாவில் கூட பேசி இருந்தேன்.

    பழிவாங்க நினைத்த காரணம்

    நமக்கு பிடித்தவர்களுக்கு நம்மை விட இன்னொருவரை பிடிக்கிறது என்றால் அவரை எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். படத்தில் நான் நடித்திருந்தேன். அப்போது அவருடன் சண்டை போட்டதெல்லாம் நிஜத்தில் நான் போட்ட சண்டை தான். அது படத்துக்காக மட்டும் போடவில்லை என்று சிரித்தபடியே சொல்லியிருந்தார். ஏற்கனவே அட்லீ பேசும்போது ஜவான் பட கதையை விஜய் சேதுபதி என்கிட்ட ரெண்டு லைன் சொன்னாரு எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது.

    Advertisement

    அட்லீ பேச்சு

    அப்போது அவர் இந்த கதையை வெற்றிமாறனிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் இந்த கதையை கமர்சியலா எடுத்தால் நல்லா இருக்கும் என நினைக்கிறேன் என்று சொன்னாரு. உடனே நான் சார் நல்லா இருப்பீங்க அவர் கிட்ட சொல்ல வேண்டாம். நானே இந்த படத்தை எடுக்கிறேன் என்று சொன்னேன். அந்த கதை என் வாழ்க்கையை மாற்றியது என்று சொல்லி இருந்தார். அதே ஜவான் பட கதையைப் பற்றி தான் விஜய் சேதுபதி மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.

    திடீர் விளக்கம்

    ஆனால் அவர் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த ஆளு.. அவரு என்று ஷாருக்கானை பற்றி பேசிக்கொண்டிருந்தார். திடீரென என்ன நினைத்தாரோ, நான் இது கோபத்தில் பேசவில்லை அன்பால் மட்டும்தான் அவரைப் பற்றி பேசுகிறேன் என்று விளக்கம் கொடுத்தார். காரணம் போன வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி பேசியது விஜய்க்கு எதிராக இவர் பேசிவிட்டார் என்று சர்ச்சையான நிலையில் அதேபோல ஷாருக்கானுக்கு ஆதரவாக ரசிகர்கள் நம்ம பக்கம் திரும்பி விடக்கூடாது என்று நினைத்து விட்டார் போல. உடனே பதறிப் போய் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

    English Summary

    Vijay Sethupathi: Videos of Vijay Sethupathi speaking at the *Jawan* (Pathaan) audio launch event are going viral on social media. He openly discussed his desire to take revenge on Shah Rukh Khan and explained the reason behind it, a statement that is garnering significant attention online.