அடுத்தவங்க ட்ரிக்கர் பண்றதால உங்க குணம் மாறுதுனா.. நீங்கள் வீக்கா இருக்கீங்க..! விடாமல் அடிக்கும் விஜய் சேதுபதி

  • சென்னை: விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில நேரங்களில் பஞ்ச் டயலாக் பேசுகிறார். அது சுவாரஸ்யமாக இருந்தாலும் சில நேரங்களில் அவருக்கே அது வினையாக வந்து விடுகிறது. அப்படித்தான் அவர் ரீடர்ஷிப்பை பற்றி கிளாஸ் எடுத்தது கூட பெரிய விமர்சனத்தை சந்தித்தது. அதனாலயே அவர் கடைசியாக அதற்கு விளக்கம் கொடுக்கும் அளவிற்கு வந்துவிட்டது. இந்த நிலையில் நேற்றைய எபிசோடிலும் விஜய் சேதுபதி பேசியதும் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

    Advertisement

    கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகப் போகிறேன் என்று அறிவித்ததும் அந்த இடத்திற்கு யார் வந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு இருந்தது. அப்போது அதிகமானோர் விஜய் சேதுபதி பெயரை தான் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் விஜய் சேதுபதி வந்த பிறகு, போட்டியாளர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை முழுமையாக கேட்காமல் தான் என்ன நினைக்கிறோமோ அதையே போட்டியாளர்கள் சொல்ல வேண்டும் என்பது போலவே ட்ரிக்கர் பண்ணி கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    Advertisement

    விஜய் சேதுபதியின் செயல்பாடு

    இதை பார்க்கும்போது அடுத்தவர்களுக்கும் பேசுவதற்கு உரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்து எழுதுகிறது. இதற்கு முன்பு கமல்ஹாசன் மற்ற போட்டியாளர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து அதிலிருந்து குதர்க்கமான கேள்விகள் கேட்பார். ஆனால் விஜய் சேதுபதி அப்படி இல்லை அதற்கு முற்றிலும் மாறுபட்டவராக இருக்கிறார். சரி இருவரும் வேறு ஸ்டைலில் ட்ரை பண்ணுகிறார்கள்.

    சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

    இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி விஜய் சேதுபதி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்ததால் அதற்கு என்ன பதில் கொடுப்பார்? என்று எதிர்பார்ப்புடன் தான் இந்த வார இறுதி எபிசோட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். சனிக்கிழமை, நாங்கள் இந்த மேடையில் பேசும் வார்த்தைகள் எங்களுக்கும், போட்டியாளர்களுக்கும் உள்ளான உரையாடல்கள். நாங்கள் தனிநபரையோ அல்லது இயக்கத்தையோ குறிப்பிடவில்லை என்று பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

    Advertisement

    விஜய் சேதுபதி அட்வைஸ்

    ஆனால் அதற்கு பிறகு போட்டியாளர்களுக்கு உபதேசம் என்கிற பெயரில் அவர் பேசும் விஷயங்கள் எல்லாம் மீண்டும் விஜய் டீமை வம்பு இழுக்குறாரா? அல்லது விஜய் சேதுபதி பேசுவது இவர்களுக்கு பொருத்தமாக இருக்கிறதா? என்ற கேள்வியும் குழப்பமும் ரசிகர்களுக்கு வந்து விட்டது. நேற்று கூட ஜெசனிடம் விஜய் சேதுபதி பேசும்போது, "ஒருத்தர் நம்மள ட்ரிகர் பண்றதுல கடுப்பாகி இன்ஃப்லூன்ஸ் ஆகி நம்மளோட இயல்பான குணத்த விட்டு வேறொரு ஆளா மாறிடுறோம்ன்னா அந்தளவுக்கு நம்ம ரொம்ப வீக்காக, பலவீனமா இருக்கோம்னு அர்த்தம்.! So எப்போவும் மாறாம உங்க இயல்புல இருங்கனு" சொல்கிறார்.

    Advertisement

    அதுபோல சனிக்கிழமை எபிசோட்டில் கூட போட்டியாளர்களுக்கு சில உபதேசங்கள் கொடுத்திருந்தார். அதுவும் கவனம் பெற்று இருந்தது. விஜய் சேதுபதி பேசுவது நிகழ்ச்சியில் தனது கருத்தை என்று நினைக்கிறீர்களா? அல்லது தன்னைப் பற்றி விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா பாஸ்.?

    English Summary

    Vijay Sethupathi: Vijay Sethupathi occasionally delivers punchlines on the *Bigg Boss* show. While these moments can be entertaining, they sometimes land him in trouble. For instance, his lecture on "readership" drew significant criticism, eventually forcing him to offer an explanation. Against this backdrop, his remarks in yesterday's episode have also captured widespread attention.