விஜய் சேதுபதியின் ‘பத்தா’..ஞாயிற்றுக்கிழமை வசூலில் இப்படி ஒரு மாற்றமா? 4 நாட்களில் எவ்வளவு தெரியுமா?

  • சென்னை: விஜய் சேதுபதி படம் என்றாலே வழக்கமான கதையை எதிர்பார்க்காமல், ஏதாவது வித்தியாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தியேட்டருக்கு போகும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி பத்தா படம் வெளியானது. இந்த படம் நேற்று ஞாயிற்றுக்கிழமை எவ்வளவு வசூல் பெற்றது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    Advertisement

    'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சீதக்காதி' படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்துக்கு ஆரம்பத்திலேயே கவனம் இருந்தது. இந்த முறை 1980களின் வடசென்னையை பின்னணியாக வைத்து, ஒரு உள்ளூர் ரவுடியின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் நுழைவதை மையமாக வைத்து கதை நகர்கிறது. படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் ரூ.1.50 கோடி நெட் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதற்குப் பிறகு வசூல் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது.

    Advertisement

    2வது நாளில் ரூ.2.70 கோடியும், 3வது நாளில் ரூ.2.75 கோடியும் வசூலித்ததாக Sacnilk தளம் வெளியிட்டு இருக்கிறது. இதனால் முதல் 3 நாட்களில் இந்திய நெட் வசூல் ரூ.6.95 கோடியாக இருந்தது.

    ஞாயிற்றுக்கிழமை வசூல் நிலவரம்

    இதுதான் இப்போது படக்குழுவுக்கு சற்று உற்சாகம் கொடுத்திருக்கிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை 'பத்தா' படத்துக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருந்திருக்கிறது. TrackTollywood கணக்கின்படி, தமிழகத்தில் மட்டும் நேற்று படத்தின் வசூல் ரூ.2.74 கோடி மொத்தமாக இருந்துள்ளது. 911 காட்சிகளில் 1.75 லட்சத்துக்கும் அதிகமானோர் படம் பார்த்துள்ளனர். சென்னையை மட்டும் எடுத்துக்கொண்டாலும் நேற்று 'பத்தா'வுக்கு நல்ல கூட்டம் இருந்திருக்கிறது. 316 காட்சிகளில் 87 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படம் பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    Advertisement

    அதாவது, முதல் நாளில் இருந்த வசூலை அப்படியே வைத்துக்கொள்ளாமல், அடுத்தடுத்த நாட்களில் படம் மேலே சென்றிருக்கிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை தமிழக வசூல் ரூ.2.74 கோடி என்ற நிலைக்கு வந்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

    விமர்சனம்

    வசூல் மட்டும் இல்லாமல் படத்தைப் பார்த்த ரசிகர்களிடமும் 'பத்தா'வுக்கு சாதகமான கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. விஜய் சேதுபதியுடன் சிறுவன் சாய் பிரித்விராஜின் காட்சிகள், லிஜோமோல் ஜோஸின் நடிப்பு, கதையில் வரும் உணர்ச்சியான தருணங்கள் ஆகியவை பலராலும் பேசப்படுகின்றன. இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனும் படத்தைப் பாராட்டியிருக்கிறார். 'பத்தா' ஒரு அழகான படம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

    Advertisement

    இதனால்தான் படத்துக்கு முதல் நாளை விட அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்கள் வருகை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பெரிய அளவிலான பரபரப்பான படங்களுக்கு நடுவில் வெளியானாலும், 'பத்தா' தனக்கான பார்வையாளர்களை பிடித்துக்கொண்டிருக்கிறது.

    English Summary

    Patha box office: Fans go to theaters for a Vijay Sethupathi film expecting something unique rather than a conventional storyline. Amidst these expectations, the movie *Patha* was released on October 1st. Details regarding the film's box office collection from yesterday, Sunday, have now been revealed.