விஜய் பற்றிய சர்ச்சைக்கு.. ஒரு வாரம் கழித்து பிக் பாஸில் விளக்கம் கொடுத்த விஜய் சேதுபதி

  • சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போன வாரம் விஜய் சேதுபதி லீடர்ஷிப் பற்றி பேசியது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் இந்த மேடையில் பேசும் கருத்துக்கள் வெளிநபரை குறிப்பிடப்படவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    போன சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி ஷாதிகாவிடம், "லீடர்ன்னா என்னன்னு தெரியாம.. லேட்டஸ்ட் ஷிப்னா என்னன்னு புரியாம... வாய்க்கு வந்த வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, பிரச்சனை கேள்விகள் வரும்போது அதை எதிர்க்கட்சி மீது போட்டுவிட்டு தலை தெரிக்க ஓடுவது லீடர்ஷிப் கிடையாது" என்று பேசியது பெரிய அளவில் பேசப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்கள் பலருமே விஜய் சேதுபதிக்கு எதிராக பேச தொடங்கிவிட்டனர்.

    Advertisement

    பிக் பாஸ் சர்ச்சை

    விஜய் சேதுபதி இப்படி பேசியது விஜயை தாக்கி தான் என்று ஒரு பெரிய குற்றச்சாட்டுகளும் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் ஒரு வாரம் கழித்து விஜய் சேதுபதி இன்று பிக் பாஸ் ப்ரோமோவில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

    விஜய் சேதுபதி விளக்கம்

    அதில், "இந்த மேடையில் பேசப்படும் கருத்துக்கள் அனைத்தும் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் எங்களுக்கும் மட்டுமே சொந்தமானவை. வெளியில் இருக்கும் எந்த நபரையும் அல்லது அமைப்பையும் சார்ந்து குறிப்பிடப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். இதைப் பற்றி ஏற்கனவே புரிந்து இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கடந்த வாரமே இதை சொல்லி இருக்க வேண்டும், இப்போது சொல்ல வேண்டிய அவசியமாகிவிட்டது" என்று விஜய் சேதுபதி சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    இதையும் இப்போ பஞ்சாயத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். விஜய் சேதுபதி இப்போ இதை சொல்ல வேண்டிய அவசியமாகிவிட்டது என்று சொல்லி இருக்கிறாரே அதற்கு காரணம் அவருடைய பத்தா படம் விரைவில் வெளியாக இருப்பதால் அதற்காக இப்படி பேசுகிறாரா? விஜய் ரசிகர்கள் தொடர்ந்து தன்னைத் திட்டி வருவதால் படத்திற்கு பிரச்சனை வந்துவிடும் என்று நினைத்து விட்டாரா? என்று வழக்கம் போல் இப்போது விஜய் சேதுபதி பேசியதையும் நெகட்டிவ் ஆக பேச தொடங்கி இருக்கிறார்கள்.

    English Summary

    Vijay Sethupathi: Following the significant debate sparked last week by Vijay Sethupathi's remarks on leadership during *Bigg Boss Tamil* Season 10, a promo released today shows him clarifying that the views expressed on the stage were not directed at any specific individual. This clip is currently going viral on social media.