அப்பாவின் வெற்றி எங்க குடும்பத்தின் பெருமை.. அம்மாவின் மனநிலை! வதந்திகளுக்கு விஜய் மகன் பதிலடி

  • சென்னை: முதலமைச்சர் விஜய்யின் மகனும், இயக்குனருமாக அறிமுகமாகி இருக்கும் ஜேசன் சஞ்சய் அளித்து வரும் பேட்டிகள் கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அவருடைய முதல் படத்தின் ப்ரோமோஷனில் தன்னுடைய குடும்பத்தை பற்றிய சர்ச்சைகளுக்கும் வதந்திகளுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதிலும் தன்னுடைய அப்பாவின் வெற்றி தங்களுடைய குடும்பத்திற்கே பெருமை என்று அவர் சொல்லியது பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

    Advertisement

    விஜய் மகன் பேட்டி

    விஜய் தன்னுடைய குடும்பத்தை கவனிக்கவில்லை, குடும்பத்தில் பிரச்சனை, பிள்ளைகளுடன் நெருக்கம் இல்லை போன்ற வதந்திகளுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தது போல ஜேசன் சஞ்சய் பேசி இருப்பதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அந்த பேட்டியில், என்னுடைய அப்பாவுடைய ஹிஸ்டாரிக்கல் வெற்றி எங்க குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் பெருமையும் சந்தோஷத்தையும் கொடுத்திருக்கிறது. நாங்கள் எல்லோரும் ரொம்ப பெருமையாக ஃபீல் பண்ணுறோம். நான், என்னுடைய அம்மா, தங்கச்சி எங்க குடும்பத்துல இருக்கிற எல்லோருக்குமே அந்த சந்தோஷத்தை உணர்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    அப்பா பற்றி பேசிய ஜேசன் சஞ்சய்

    மேலும், மக்கள் அப்பா மீது வைத்திருக்கும் அன்பு மரியாதையும் பார்த்த பிறகு நாங்களும் அதற்கு பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதும் எங்களுக்கு புரிகிறது. அது எங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பாகவும் இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார். மேலும் நான் சினிமாவிற்கு வந்தது அப்பாவை காப்பி பண்ணுவதற்காகவோ, அல்லது அப்பாவை விட பெரிய ஆளாகணும் என்றோ... அல்லது நான் அவருடைய மகன் என்பதை நிரூபிப்பதற்காகவோ வரவில்லை.

    எனக்கான வேலையை நான் செய்யணும், இப்போதைக்கு எனக்கு சினிமா ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால அதுல முழு கவனத்தையும் செலுத்துகிறேன் என்று ஜேசன் கூறியிருக்கிறார். இந்த ஒரு பதில் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த சில வருஷங்களாக விஜய்யின் குடும்ப வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.

    Advertisement

    வதந்திகளுக்கு பதிலடி

    குறிப்பாக அவர் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறார், பெத்த பிள்ளைகள் கூட அவருடன் கிடையாது, அதனால் தான் அவருடைய மகன் தனியாக ஒரு படத்தை இயக்குகிறார் அதற்கு கூட விஜய் எந்த சப்போர்ட்டும் செய்யவில்லை என்றெல்லாம் பேசி வந்த நிலையில் இப்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல தன்னுடைய தந்தை பற்றி ஜேசன் சஞ்சய் பெருமையாக பேசி இருக்கிறார்.

    விஜய் பற்றி பெருமையாக பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடி திரிஷாவின் பதிவு வைரல்! கிளம்பிய புதிய விவாதம்!
    ஏற்கனவே ஒரு பேட்டியில், அப்பா என்னை எந்தவிதத்திலும் கட்டாயப்படுத்தியதே இல்லை. நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதற்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். ஒரு விஷயத்தை தொடங்கி விட்டால் அதற்கு முழு அர்ப்பணிப்புடன் செய்யணும் என்பதை தான் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    சிஎம் பையன் என்பதை மறந்துடுங்க! ஆனால்.. விஜய் மகன் சொன்ன வார்த்தை! பாயிண்ட்டை பிடித்த ரசிகர்கள்
    பலர் எதிர்பார்த்தது போல நடிகராக இல்லாமல் இயக்குனராக தனது பயணத்தை தொடங்கியுள்ள ஜேசன் சஞ்சய் தற்போது தன்னுடைய முதல் படத்தின் மூலமாக பிரபலமாகிவிட்டார். அதிலும் விஜய் மகன் வாயைத் திறந்து பேசினால் விஜய் நிலைமை அவ்வளவுதான் என்று சிலர் விஜய்க்கு எதிராக பேசி வந்த நிலையில் இப்போது அவர்களுக்கு பதில் சொல்வது போல தன்னுடைய அப்பாவைப் பற்றி பெருமையாகவே இவர் பேசி வருவதை விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

    English Summary

    Jason Sanjay: The interviews given by Jason Sanjay, the son of Chief Minister Vijay, who is making his debut as a director, have been talked about a lot on social media for the past few days. Especially in the promotion of his first film, he has explained the controversies and rumors about his family. Moreover, he said that his father's success is the pride of his family, which has attracted the attention of many people.