மகன் பட ப்ரோமோஷனில் கூட கலந்து கொள்ளாத விஜய்.. TVK - னு சத்தம் கேட்டதும் ஜேசன் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன்

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா படத்தின் ப்ரோமோஷன் நேற்று சேலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் அதிகமான ரசிகர்களும், இந்த திரைப்படத்தின் பிரபலங்களும் கலந்து கொண்டனர். அப்போது ரசிகர்கள் எதிர்பார்த்தபடி விஜய் மற்றும் அம்மா சங்கீதா இருவரும் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் அந்த நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் விஜய் ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது.

    Advertisement

    விஜய் குடும்பத்தை சுற்றி சில மாதங்களாகவே சில சர்ச்சைகள் பரவி வருகிறது. விஜய் மனைவி கடந்த வருடத்தில் கொடுத்த விவாகரத்து வழக்கு பெரிதாக பேசப்பட்டது. அதில் அவர் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார், அதனால் தான் எங்கள் குடும்பத்தில் பிரச்சனை வருகிறது, அந்த நடிகையுடன் வெளிநாட்டில் எடுக்கும் புகைப்படங்களை அந்த நடிகை போஸ்ட் போடுவது எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றெல்லாம் அதில் கூறப்பட்டிருந்தது. அதனால் பெரிதாக அந்த சம்பவம் பேசப்பட்டது.

    Advertisement

    விஜய் குடும்ப சர்ச்சை

    ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அந்த விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் வாங்கி இருக்கிறார். இதற்கிடையில் விஜய் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராகவும் மாறி இருக்கிறார். அந்த சமயத்தில் விஜய் மகன் ஜேசன் சிக்மா படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் தன்னுடைய மகனுக்கு விஜய் சப்போர்ட் செய்வாரா? குடும்பத்துடன் பேசிக்கொண்டு இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விகள் எழுந்தது.

    அதற்கு காரணம் சில வருடங்களுக்கு முன்பு ஜேசன் பட்டமளிப்பு விழா மற்றும் அவருடைய தங்கையின் பட்டமளிப்பு விழாக்களிலும் விஜய் கலந்து கொள்ள வில்லை. இதனால் அவர் குடும்பத்தை விட்டு மொத்தமாக பிரிந்து விட்டார் என்றும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் சமீபத்தில் பேட்டிகளில் ஜேசன் பேசிக்கொண்டிருக்கும் போது தன்னுடைய அப்பாவை பற்றி பெருமையாகவே பேசிக் கொண்டிருந்தார். தன்னுடைய அப்பாவின் வெற்றி தங்களுக்கு பெரிய பொறுப்பை கொடுத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

    Advertisement

    கணவன் மனைவி பிரச்சனை

    இதனால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை இருக்கிறது உண்மைதான் ஆனால் பிள்ளைகளுடன் விஜய் நெருக்கமாக தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லி வந்தனர். அதே நேரத்தில் இதுவரைக்கும் தன்னுடைய மகன் படத்தைப் பற்றி பாராட்டவோ அல்லது சப்போட்டாகவோ எந்த கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை அதனால் மகன் பிரமோஷனுக்காகவாவது விஜய் வருவாரா? என்ற கேள்விகளும் பலருக்கும் இருந்தது.

    கலந்து கொள்ளாத விஜய்

    இந்த நிலையில் தான் நேற்று சேலத்தில் சிக்மா படத்தின் பிரமோஷன் நடந்திருக்கிறது. ஆனால் அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல விஜய் கலந்து கொள்ளவில்லை. ஜேசன் சார்பாக அவருடைய அம்மாவும், தங்கச்சியுமாவது வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது அவர்களும் வரவில்லை. ஆனாலும் ஜேசன் அந்த நிகழ்ச்சியில் தன்னம்பிக்கையுடன் பேசி இருந்தார். தான் டைரக்டராக போகிறேன் என்று என்னுடைய அம்மாவுக்கு தான் முதல் முறையாக சொன்னேன் அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. என்னுடைய சினிமா பயணத்திற்கு என்னுடைய குடும்பத்தினர் தான் சப்போர்ட் பண்றாங்க என்று அவர் பேசிக் கொண்டிருந்தார்.

    Advertisement

    விஜய் மகன் ரியாக்ஷன்

    அந்த சமயத்தில் அங்கிருந்த இளம் பெண்கள் TVK என்று கத்த, ஒரு நிமிடம் அமைதியாக அதை ரசித்து விட்டு ஜேசன் தம்சப் மட்டும் காட்டி இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் விஜய் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றால் என்ன அவருடைய சப்போர்ட் அவருடைய மகனுக்கு தான் இருக்கிறது. அதனால்தான் ரசிகைகள் TVK என்று கத்திய போது கூட அவர் சந்தோஷத்தப்படியே தம்சப் கொடுத்து இருக்கிறார் என்று இந்த வீடியோக்களை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

    English Summary

    Jason Sanjay: A grand promotional event for the film *Sigma*—directed by Jason Sanjay, son of Tamil star Vijay—was held yesterday in Salem. The event saw a large turnout of fans and celebrities associated with the movie. Contrary to fan expectations, Vijay and his mother, Sangeetha, did not attend the event together; however, an incident that took place during the program deeply moved Vijay's fans.