சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நடந்த சம்பவங்கள் அரசியல் அரங்கத்தைத் தாண்டி நேராக சோசியல் மீடியாவையே கைப்பற்றிவிட்டன. கடந்த சில நாட்களாக "முதல்வர் விஜய் சட்டசபையில் அமைதியாகத்தான் இருக்கிறார்", "பேசவே மாட்டாரா?", "எதிர்க்கட்சிக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாதா?" என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருந்த நிலையில், இன்று அதற்கெல்லாம் ஒரே மேடையில் பதில் சொல்லும் வகையில் விஜய் நீண்ட நேரம் பேசினார்.
அதிலும் குறிப்பாக திமுக தொடர்ந்து முன்வைத்த "சோஃபா மாடல் ஆட்சி" என்ற விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த விதமே இப்போது இணையத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்த முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்டாக பதில் சொல்லியதோடு, திமுகவை நேரடியாக தாக்கும் வரிகளையும் விட்டார். குறிப்பாக "பார்ட்டி ஃபண்ட்" குறித்த விஜய்யின் குறிப்பு சபையில் பரபரப்பை ஏற்படுத்தியதது. அந்த ஒரு வார்த்தைக்குப் பிறகே திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்றதாகவும், தொடர்ந்து அமளி ஏற்பட்ட பிறகு வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, "விஜய் பேச முடியாது என்று நினைத்தவர்கள், அவர் பேச ஆரம்பித்தவுடன் சபையை விட்டு வெளியேறிவிட்டார்களே?" என்ற கேள்வியே சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியது. திமுகவின் "Speak up CM" பிரசாரத்துக்கு பதிலாக, இன்று விஜய் நேரடியாக பதிலடி கொடுத்தார் என்ற கருத்தும் TVK ஆதரவாளர்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது. இதில்தான் விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி போட்ட பதிவுகள் மேலும் தீ மூட்டியிருக்கின்றன. விஜய் அரசியலில் வெற்றி பெற்றால் மொட்டையடித்துக் கொள்கிறேன் என்று முன்பே சபதம் செய்து, அவர் முதலமைச்சரானதும் அதை செய்து காட்டிய பிரசாந்த் ரங்கசாமி, இன்றைய சட்டசபை சம்பவத்துக்குப் பிறகு தொடர்ந்து பல பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், "Party fund னு சொன்ன உடனே டென்ஷன் ஆயிட்டாங்க!", "ஒரே ஒரு வார்த்தைல மொத்த பேரையும் ட்ரிக்கர் பண்ணிட்டாரே!", "இவரையாடா பேச மாட்டார்னு சொல்லிட்டு இருந்தீங்க?" என்ற வரிகள் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்த பதிவுகளின் ஸ்கிரீன் ஷாட்கள் பல TVK ஆதரவு பக்கங்களில் பகிரப்பட்டு, "விஜய் பேசினார்... பதில் சொல்ல முடியாமல் எதிர்க்கட்சியே கிளம்பிவிட்டது" என்ற நரேட்டிவ் தள்ளப்படுகிறது. இன்றைய சட்டசபை காட்சியை பலர் சினிமா டெம்ப்ளேட்டோடு ஒப்பிட்டு பேசுவதும் கவனிக்கப்படுகிறது. சில TVK ஆதரவாளர்கள், போக்கிரி படத்தில் விஜய் போலீஸிடம் பேசும் காட்சியை எடுத்துக்காட்டி, "இன்று சட்டசபையில் பேப்பர் பார்க்காமலே பேசி எதிர்க்கட்சியை டோட்டல் வாஷ் அவுட் பண்ணிட்டார்" என்று கொண்டாடி வருகின்றனர். நேற்று வரை "விஜய் அமைதியா இருக்கிறார்", "மௌனமே பேசியது" என்று கிண்டல் செய்தவர்கள், இன்று அவர் பேச்சுக்குப் பிறகு வேறு கதையை சொல்ல முடியாமல் போய்விட்டது என்ற வாதமும் TVK தரப்பில் ஸ்ட்ராங்காக ஓடுகிறது. குறிப்பாக "ரீல் ஜனநாயகன்" என்று கிண்டல் செய்தவர்களுக்கே இன்று "ரியல் ஜனநாயகன்" காட்சியைக் காட்டிவிட்டார் என்ற பாணியில் பல மீம்களும் சுற்றி வருகின்றன. ஆனால் இதே சம்பவத்தை திமுக ஆதரவாளர்கள் முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். அவர்களது தரப்பில், "முதல்வருக்கு ஏற்ற மரியாதையோ, அரசியல் மொழியோ இல்லாமல் தேவையில்லாத தூண்டல் பேச்சு பேசியதால் தான் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்" என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. மேலும், "எதிர்க்கட்சி இல்லாதபோது பேசிக் கொண்டிருந்தது யாருக்காக?" என்ற கேள்வியுடன் சிலர் சோசியல் மீடியாவில் விமர்சனங்களையும் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில், விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அரசியல் பாணியை ஒத்த சைகைகள் காட்டியது பற்றியும் தனியாக விவாதம் கிளம்பியுள்ளது. இந்த சம்பவம் காரணமாக சபை அரசியலே மீண்டும் சினிமா மீம் வாருக்கு தள்ளப்பட்டுவிட்டதாக சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். மொத்தத்தில், இன்று சட்டசபையில் நடந்தது ஒரு வழக்கமான அரசியல் மோதல் மட்டுமல்ல; "விஜய் பேச மாட்டார்" என்ற நரேட்டிவ் உடைந்த நாளா?, அல்லது "ஒரே ஒரு வார்த்தையால் சபையை தூண்டிய நாள்"ஆ? என்ற இரு கோணங்களிலும் இது பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகி விட்டது - இன்று விஜய்யின் சட்டசபை பேச்சை விட, அதற்குப் பிறகு வெடித்த சோசியல் மீடியா ரியாக்ஷன்களும், பிரசாந்த் ரங்கசாமி போட்ட பதிவுகளும் தான் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. சட்டசபை சம்பவம்
முதலமைச்சர் பதில்
பிரசாந்த் ரங்கசாமி போஸ்ட்
60 வருஷமா பேசியே நாட்டை கெடுத்துட்டாங்க.. விஜய் ஏன் அமைதியா இருக்கிறார்?விமர்சனத்துக்கு SAC அதிரடி
விமர்சனங்கள்