சன் டிவி ஹீரோவை கரம் பிடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை.. யூடியூப் காதல்.. எளிமையான எங்கேஜ்மென்ட்


  • சென்னை: சின்னத்திரையில் இன்னொரு காதல் ஜோடி திருமண பந்தத்தில் இணையப் போகிறது. 'மிஸ்டர் மனைவி' சீரியலின் ஹீரோ பவன் ரவீந்திரா மற்றும் நடிகை ஆர்த்தி சுபாஷ் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த ரசிகர்கள், "ரீல் காதல் ரியல் காதலாகி விட்டதே!" என்று வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

    Advertisement

    ஆர்த்தி சுபாஷ் இன்று சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான முகம். ஆனால் அவரது பயணம் சீரியலில் இருந்து தொடங்கவில்லை. யூடியூபில் ஷார்ட் பிலிம், காமெடி வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிறகுதான் அவருக்கு சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது.

    Advertisement

    சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

    அதன்பிறகு சன் டிவியின் 'பாண்டவர் இல்லம்' சீரியலில் மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்த அவர், கலகலப்பான நடிப்பால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். அந்த சீரியல் முடிந்ததும் 'வீட்டுக்கு வீடு வாசப்படி'சீரியலிலும் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிந்து பைரவி - கச்சேரி ஆரம்பம்' சீரியலில் பைரவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    நடிப்பைத் தாண்டி, சமூக வலைதளங்களிலும் ஆர்த்தி மிகவும் ஆக்டிவ். டான்ஸ், ரீல்ஸ், காமெடி வீடியோக்கள் என ரசிகர்களுடன் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்புதான் புதிய கார் வாங்கியதை வித்தியாசமான முறையில் கொண்டாடிய வீடியோவும் இணையத்தில் வைரலானது.

    Advertisement
    நான் இறந்தால் அதற்கு காரணம் அந்த குடும்பம் தான்! ஆர்த்தி ரவி பெயரை சொல்லாமல் ரவி மோகன் ஆதங்கம்

    சீரியல் நடிகர் பவன் ரவீந்திரா

    இந்த நிலையில், நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகர் பவன் ரவீந்திராவுடனான உறவை தற்போது அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பவனின் பிறந்தநாளிலேயே ரசிகர்களுக்கு காதல் குறித்து மறைமுகமாக சிக்னல் கொடுத்திருந்த ஆர்த்தி, இப்போது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு அந்த காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

    பவன் ரவீந்திராவும் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். 'மிஸ்டர் மனைவி' சீரியலின் மூலம் பெரிய அளவில் பிரபலமான அவர், தற்போது தெலுங்கு சின்னத்திரையிலும் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் அவருக்கு நல்ல ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

    Advertisement

    ஆர்த்தி சுபாஷ் எங்கேஜ்மென்ட்

    இருவரின் நிச்சயதார்த்த புகைப்படங்களில் எளிமையான அலங்காரத்துடன் குடும்பத்தினர் முன்னிலையில் மோதிரம் மாற்றிக் கொண்ட காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. "எப்போ கல்யாணம்?" என்ற கேள்விதான் இப்போது கமெண்ட் செக்ஷனில் அதிகமாக காணப்படுகிறது.

    சின்னத்திரையில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் ஏற்கனவே பலர் இருக்கிறார்கள். அந்த பட்டியலில் இப்போது ஆர்த்தி சுபாஷ் - பவன் ரவீந்திரா ஜோடியும் இணைந்திருக்கிறது.

    குஷ்பு மகள் கல்யாணத்தில் நெகிழ வைத்த நிமிடங்கள்...

    கடந்த சில மாதங்களாக சின்னத்திரை நடிகர், நடிகைகளின் திருமண செய்திகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், ரசிகர்களுக்கு இன்னொரு சந்தோஷ செய்தியாக இந்த நிச்சயதார்த்தம் அமைந்துள்ளது. "திரையில் ஜோடியாக இல்லையென்றாலும், வாழ்க்கையில் அழகான ஜோடியாக வாழ வேண்டும்" என்று ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Aarthi Subash: Popular television actress Aarthi Subash and actor Pavan Ravindra have officially announced their engagement, delighting fans with adorable photos from their intimate ceremony. Aarthi, who began her career through YouTube short films before becoming a familiar face in serials like Pandavar Illam.