பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்!


  • சென்னை: தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் அதிகம் விவாதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று என்றால் அது பிக் பாஸ் தான். 2017-ம் ஆண்டு இந்த நிகழ்ச்சி தமிழில் தொடங்கப் போகிறது என்ற அறிவிப்பு வெளியானபோது, "100 நாட்கள் ஒரே வீட்டுக்குள் இருக்கணுமா?", "செல்போன் கூட பயன்படுத்தக் கூடாதா?", "இதையெல்லாம் யார் பார்ப்பாங்க?" என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

    Advertisement

    ஆனால் முதல் சீசன் முடிவதற்குள் நிலைமையே தலைகீழாக மாறியது. வீட்டுக்குள் நடந்த சண்டைகள், நட்புகள், காதல்கள், துரோகங்கள், கண்ணீர், கொண்டாட்டங்கள் என ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டன. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்க தொடங்கினர்.

    Advertisement

    இப்போது 9 சீசன்களை வெற்றிகரமாக கடந்து, 10-வது சீசனை நோக்கி பிக் பாஸ் பயணிக்கிறது. ஆனால் இந்த முறை விஜய் டிவி எடுத்திருக்கும் முடிவு தான் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்திருக்கிறது.

    காமன் மேன்க்கு திறந்த கதவு

    நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில்பிக் பாஸ் ப்ரோமோவை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அதில், இதுவரை வீட்டுக்கு வெளியே இருந்து பிக் பாஸை பார்த்து விமர்சித்த சாதாரண ரசிகர்களுக்கே நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரமாவை பார்த்ததும் இது பத்தாவது சீசனுக்காக இருக்குமோ என்று எதிர்பார்த்தவர்களுக்கு கடைசியில் அதிர்ச்சி தான் காரணம் இது பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ இல்லை பிக் பாஸ் காமன் மேன் ஷோ என்று புதிய ஒரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

    Advertisement

    "நான் இருந்தா இப்படித்தான் விளையாடியிருப்பேன்...", "அவங்க மாதிரி அமைதியா இருக்க மாட்டேன்...", "அந்த டாஸ்க்கில் நான் இருந்தா கிழிச்சிருப்பேன்..." என்று ஒவ்வொரு சீசனிலும் டிவி முன்பு அமர்ந்து பேசும் ரசிகர்களுக்கு, இப்போது தங்கள் திறமையை நிரூபிக்கும் மேடை கிடைத்திருக்கிறது.

    “காதலரை அறிமுகப்படுத்திய அபிராமி” ஒரு வரி கேப்ஷனில் முழு காதலை சொன்ன பிக் பாஸ் நடிகை.. பிரபலங்கள் அட்வைஸ்

    ஆரம்ப கால பிக் பாஸ் ஏன் ஹிட் ஆனது?

    பிக் பாஸ் முதல் சில சீசன்களில் நடிகர்கள், பாடகர்கள், நடன இயக்குநர்கள், தொகுப்பாளர்கள், மாடல்கள், சர்ச்சை பிரபலங்கள் என பல துறைகளில் இருந்தவர்களை ஒரே வீட்டுக்குள் அடைத்தனர்.

    Advertisement

    ஓவியா, ஆரவ், ஜூலி, வனிதா, முகென், பாலாஜி, சிவானி, அமீர், பிரியங்கா, ரச்சிதா என ஒவ்வொரு சீசனிலும் மக்கள் ஏற்கனவே அறிந்த முகங்கள் இருந்ததால் அவர்களின் உண்மையான குணத்தை பார்க்க ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.

    கடந்த சீசனில் என்ன குறை?

    கடந்த சில சீசன்களில் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள், ரீல்ஸ் பிரபலங்கள், சின்னத்திரை முகங்கள் அதிகமாக இடம்பெற்றனர். இவர்களில் பலரை ரசிகர்கள் ஏற்கனவே தினமும் சமூக வலைதளங்களில் பார்த்து பழகியிருந்தனர். அதனால் வீட்டிற்குள் அவர்கள் செய்த விஷயங்கள் பெரிய அதிர்ச்சியையோ, புதுமையையோ கொடுக்கவில்லை.

    Advertisement

    பல ரசிகர்கள், "முன்னாடி இருந்த பிக் பாஸ் மாதிரி சுவாரஸ்யம் இல்லை", "எல்லாரும் கேமராவுக்காக நடிக்கிற மாதிரி இருக்கு" என்ற விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

    காமன் மேன் வேலை செய்யுமா?

    இதுவரை பிக் பாஸ் வீட்டிற்குள் பிரபலங்கள் சென்றார்கள். இப்போது முதல் முறையாக சாதாரண மக்கள் செல்ல இருக்கிறார்கள். ஆனால் இதுதான் மிகப்பெரிய சவாலும் கூட.

    வீட்டுப் பக்கத்து சண்டையை வேடிக்கை பார்க்கும் மக்கள், தங்களுடைய சண்டையை கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் இடத்தில் எப்படி நடந்து கொள்வார்கள்?, குடும்பத்தினருடன் பேசாமல் 100 நாட்கள் இருக்க முடியுமா?, செல்போன் இல்லாமல் வாழ முடியுமா? ஒவ்வொரு வாரமும் சமூக வலைதளங்களில் தங்களைப் பற்றி வரும் விமர்சனங்களை பார்க்காமல் இருக்க முடியுமா? இவை எல்லாம் இப்போது ரசிகர்கள் சந்திக்கப் போகும் உண்மையான கேள்விகள்.

    Advertisement
    நான் சின்ன பையன்.. சூர்யாவுக்கு தான் பாதிப்பு! கருப்பு படத்தில் தர்பூசணி காட்சி கட்.. திவாகர் வினோத விளக்கம்

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    பிக் பாஸ் ரசிகர்களில் பலர் இந்த அறிவிப்பை வரவேற்று வருகின்றனர். "இந்த முறை நிகழ்ச்சி இயல்பாக இருக்கும்", "பிரபலங்களை விட சாதாரண மக்களிடம் தான் உண்மையான உணர்ச்சிகள் இருக்கும்", "இது பிக் பாஸுக்கு புதிய உயிர் கொடுக்கலாம்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், "பிரபலங்கள் இல்லாத பிக் பாஸ் எந்த அளவுக்கு வேலை செய்யும்?" என்ற சந்தேகமும் ஒரு தரப்பினரிடம் இருக்கிறது.

    வெற்றியா? சோதனையா?

    பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் இது ஒரு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. ஒன்பது ஆண்டுகளாக வீட்டுக்கு வெளியே இருந்து விமர்சித்த ரசிகர்களுக்கே இப்போது வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    இதுவரை "நான் இருந்தா வேற மாதிரி விளையாடியிருப்பேன்" என்று சொன்னவர்கள், உண்மையிலேயே பிக் பாஸ் வீட்டை கலக்கப் போகிறார்களா? அல்லது பிரபலங்களின் பற்றாக்குறை நிகழ்ச்சியை பலவீனப்படுத்துமா? இந்த கேள்விகளுக்கான பதில், பிக் பாஸ் சீசன் 10 தொடங்கிய பிறகுதான் தெரியவரும்.