விஜய் டிவி டிஜே பிளாக்குக்கு கல்யாணம்.. மணப்பெண் யார் தெரியுமா? இன்னும் 9 நாள் தான்!

  • சென்னை: விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கலில் போட்டியாளர்கள் பேசுவதை விட சரியான நேரத்தில் ஒரு பாட்டு போட்டு கவுண்டர் கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைப்பவர் யார் என்றால் உடனே நினைவுக்கு வருவது டிஜே பிளாக் தான். அந்த டிஜே பிளாக்கின் வாழ்க்கையில் இப்போது ஒரு முக்கியமான அத்தியாயம் தொடங்கப் போகிறது. அவருக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது அதுவும் இன்னும் சில நாட்களிலேயே கல்யாணம் நடக்கப் போகிறது.

    Advertisement

    டிஜே பிளாக்கின் உண்மையான பெயர் சுதன் குமார். சென்னையில் வியாசர்பாடி கன்னிகா புரத்தைச் சேர்ந்த இவர் அரசு பள்ளியில் படித்து இருக்கிறார். இன்று விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாட்டு போட்டு போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் என்டர்டைன்மென்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் ஒருவர் ஒரு வார்த்தை பேசினால் அதற்கேற்ற பாடல் அல்லது கவுண்டரை அடுத்த நொடியே போட்டு அரங்கேற்றையே சிரிக்க வைப்பது தான் இவருடைய ஸ்பெஷல். ஆனால் அந்த இடத்துக்கு சுதன் ஈசியாக வந்துவிடவில்லை.

    Advertisement

    டிஜே பிளாக் ஆரம்ப காலம்

    அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது கிடைத்த இலவச லேப்டாப்பில் தான் இவருடைய இசை பயணம் ஆரம்பித்திருக்கிறது. நண்பர்களிடம் கேம்ஸ், பாடல்கள் என்று வாங்கி போட்டுக் கேட்டு கொண்டிருந்தபோது அதிலிருந்த ஒரு டிஜே சாஃப்ட்வேர் இவருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அதை வைத்து தானாகவே கற்றுக்கொண்டு முதலில் உறவினர்கள், நண்பர்களின் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் இசை போட ஆரம்பித்திருக்கிறார்.

    அந்த நேரத்தில் குடும்ப சூழ்நிலையும் இவரை வேலைக்கு வேகமாக போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசும் போது எனக்கு இசை ரொம்ப பிடித்ததால் தான் இந்த துறைக்கு வந்தேன் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் எங்கள் வீட்டில் இருந்த கடனை அடைக்க தான் நான் மியூசிக்குல் வந்தேன். ஆரம்பத்தில் ஒரு கிளப்பில் வேலைக்கு சேர்ந்து அனுபவம் பெற்றேன். பிறகு டிஜே ஸ்ரீதர் மூலம் விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது.

    Advertisement

    விஜய் டிவி அனுபவம்

    விஜய் டிவியில் முதல் நாளே சுதனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவிடவில்லையாம். முதல் பாட்டு போட்ட போது வேலை தெரியாத பசங்களையெல்லாம் எதுக்கு அனுப்புறீங்க என்று திட்டும் அளவுக்கு தொடக்கம் இருந்திருக்கிறது. ஆனால் அதையே சவாலாக எடுத்துக் கொண்டு போட்டியாளர்களின் பெயருக்கு சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்களை போட்டு கவுண்டர் போட ஆரம்பித்திருக்கிறார். அதற்கு பிறகு தான் டிஜே பிளாக் என்ற பெயரே தனக்கு தனி அடையாளத்தை மாற்றியது என்று சொல்லி இருக்கிறார்.

    விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் ஜெயமணி காலமானார்.. வருத்தத்தில் சின்னத்திரை உலகம்
    இப்படி கஷ்டப்பட்டு தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்ட சுதனுக்கு இப்போது வாழ்க்கையில் இன்னொரு சந்தோஷமான திருப்பம் கிடைத்திருக்கிறது. டிஜே பிளாக் ரம்யா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண அறிவிப்பை சோசியல் மீடியாவில் பகிர்ந்த சுதன் "என்றென்றும் பற்றிக்கொள்ள எனக்கு மிகவும் பிடித்தமான மனிதருடன்.. எனது வாழ்வின் மிகச்சிறந்த புதிய பயணத்தை தொடங்குகிறேன்" என்னும் 10 நாட்களில்" என்று காதல் கலந்த வரிகளுடன் கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

    Advertisement

    டிஜே பிளாக்குக்கு கல்யாணம்

    அதனால் இப்போது விஜய் டிவி நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் சுதனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பூஜாவுக்கு என்று அதிகமான காதல் வசனங்கள், பாடல்கள் போடுவது என அட்ராசிட்டி செய்ததால் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்திகள் பரவி வந்தது. ஆனால் இப்போது அது உண்மை இல்லை என்று சொல்வது போல தான் ரம்யா உடன் தனக்கு கல்யாணம் நடக்கப் போகிறது என்று டிஜே பிளாக் பகிர்ந்து இருக்கிறார்.

    English Summary

    DJ Block : In Vijay TV reality show, who makes the fans laugh by playing a song at the right time rather than talking about the contestants, it is DJ Black who immediately comes to mind. An important chapter in the life of that DJ Black is now about to begin. He is definitely married and will be married in a few days.