விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் ஜெயமணி காலமானார்.. வருத்தத்தில் சின்னத்திரை உலகம்

  • சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கறிக்கடைகாரர் (மலேசிய மாமா) என்ற கேரக்டரில் நடித்து வந்த நடிகர் ஜெயமணி 79 வயதில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு காலமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தியை கேட்டதும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    நடிகர் ஜெயமணி காலமானார்

    நடிகர் ஜெயமணிக்கு பிரபலம் கொடுத்தது திருமதி செல்வம் சீரியல் தான். அதற்குப் பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் சமீபத்தில் சில வருடங்களாக அவரை எந்த சீரியலிலும் காணவில்லை. இந்த நிலையில் தான் திடீரென கடந்த வருடத்தில் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் மாமாவாக மலேசியா மாமா என்ற கேரக்டரில் கறிக்கடைக்காரராக நடிக்க வந்தார்.

    Advertisement

    சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் இறப்பு

    ரோகினிக்கு சப்போர்ட் செய்து மலேசியா மாமாவாக அவர் செய்த அலப்பறை எல்லாம் ரசிகர்களை கவர்ந்திருந்தது. பிறகு எப்ப தான் இந்த மலேசியா மாமா முத்துக்கு கிட்ட மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பிலேயே ரசிகர்கள் இருந்தனர் ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. ரோகினி பற்றிய உண்மைகளை எல்லாம் மொத்த குடும்பத்திடம் சொன்னது கறிக்கடைக்காரர் தான். அந்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

    ரசிகர்கள் வருத்தம்

    ஒரு சில எபிசோடுகள் மட்டுமே நடிக்க வேண்டும் என்று வந்த இவருக்கு பிறகு அதிகமான காட்சிகள் கொடுத்தார்கள். அவர் மீண்டும் தொடர்ந்து நடிக்க வேண்டும், நல்ல திறமையான நடிகர் என்று பலரும் அவருக்கு சப்போர்ட் கொடுத்து வந்தனர். ஆனால் திடீரென ஜெயமணி காலமான செய்தி அனைவரையும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது. அவருக்கு நம்முடைய சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வோம்.

    English Summary

    Actor Jayamani: Actor Jayamani, who was playing the character of Karikadaikarar (Malaysian uncle) in the serial Siragadikka Aasai aired on Vijay TV, is reported to have passed away suddenly at the age of 79 due to chest pain. After hearing this news, many fans are saddened for him.