சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கான எபிசோடில் நடந்த சம்பவம் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடந்த சம்பவம் தான். அதே கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து இங்கே ஃபாலோ பண்ண தொடங்கி விட்டார்கள். இதுவரைக்கும் டிஆர்பியில் டாப் இடத்தில் இருந்த சீரியலுக்கு இந்த நிலைமையா? என்பதுதான் எல்லோருடைய கருத்தாக இருக்கிறது.
பொதுவாகவே விஜய் டிவியில் சில பெயர்களை பிரிக்கவே முடியாது. அது போல தான் மீனா என்ற பெயர் விஜய் டிவியின் ஹீரோயினிக்கு என்று அடையாளமாகவே வைக்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்திலும், இரண்டாவது பாகத்திலும் ஹேமா பெயர் மீனாதான். அதேபோல சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயினி பெயரும் மீனா தான். சரி பெயரை தான் ஓரே போல வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் மீனா என்றாலே இப்படித்தான் என்று ஒரு அடையாளத்தையும் வைத்து விட்டார்கள் போல.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் யார் என்ன தப்பு பண்ணினாலும் மீனா கண்ணுல தான் எல்லா பிரச்சனையும் மாட்டும். அதே போல தான் சிறகடிக்க ஆசை சீரியலிலும் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே மனோஜ் செய்யும் திருட்டுத்தனங்கள், ரோகிணியின் பித்தலாட்டம், விஜயாவின் நாடகம் எல்லாமே கண்டுபிடிப்பது முத்து மீனா தான். அதிலும் அதிக பொறுப்பு மீனாவுக்கு தான் இருக்கும். மீனாதான் அறிவாளியாக எல்லா உண்மைகளையும் கண்டுபிடிப்பார் ஆனால் அவரே சில நேரங்களில் தப்பும் பண்ணுவார்.
ஹீரோயினி தப்பு பண்ணுனா யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று ஒரு மனநிலையையும் மக்கள் மனதில் விதைத்து விட்டார்கள். அதுபோலத்தான் இப்ப கூட நடந்து இருக்கிறது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கேள்விப்பட்டதும் அவருக்காக குடும்பத்திற்கு தெரியாமல் மீனாதான் உதவி செய்வார். அதேபோல இப்போ ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் இதனால் குடும்பத்தை மீறி ரோகினிக்கு மீனா உதவி செய்து கொண்டிருக்கிறார். அங்கேயாவது கோமதியும் தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை கேள்விப்பட்டதும் அவரை ஏற்றுக் கொள்ள முடிவு பண்ணிட்டாங்க. ஆனா சிறகடிக்க ஆசை சீரியலில் கதையை வேறு. இங்கே ரோகிணி கர்ப்பமாக இருந்தாலும் பரவாயில்லை அவர் விவாகரத்து செய்துவிட்டு மனோஜை 2வது கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று விஜயா கங்கணம் கட்டிக்கொண்டு பெண் பார்த்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் மனோஜ் வேற மனநலம் சரியில்லாத ஒரு ஒரு பெண்ணை பணத்துக்காக 2வது கல்யாணமும் பண்ணிவிட்டார். அதை ரெஜிஸ்டரும் பண்ணிவிட்டார். இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் விஜயாவுக்கும் குடும்பத்தினருக்கும் தெரியாமல் மீனாவும் ஸ்ருதியும் ரோகிணி வீட்டிற்கு போய் இருக்காங்க. உன் குழந்தைக்காக நாங்க உனக்கு துணையாக இருப்போம் என்று பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா சொன்னது போலவே இங்கேயும் இந்த மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார். இதைப் பார்க்கும் நமக்கு தான் மீனா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எல்லா சீரியலிலும் முடிவு பண்ணிட்டாங்களா? என்று தான் கேட்க தோணுது. இதுவரைக்கும் தியாகியாக இருந்த மீனாவை நெட்டிசன்கள் மக்கு மீனா என்று திட்டி தீர்த்து வந்தார்கள். இப்போது மீண்டும் மீனா தியாகியாக ரோகிணிக்கு உதவுகிறார். ஏற்கனவே ரோகிணி பற்றிய உண்மைகளை தெரிய வந்ததும் குடும்பத்திடம் சொல்லாததால் தான் முத்துவும் விஜயாவும் மீனாவை வீட்டை விட்டுவிட்டு துரத்தி விட்டிருந்தனர். இப்போ மீண்டும் குடும்பத்திற்கு தெரியாமல் ரோகிணிக்கு மீனா உதவுகிறார். இதனால் அடுத்து என்ன பஞ்சாயத்து வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தன் இருக்கிறது. இது மட்டும் இல்லங்க பாண்டியன் ஸ்டோர்ஸா சீரியலில் தங்கமயில் கணவரான சரவணன் தன்னுடைய முன்னாள் காதலியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அதேபோல சிறகடிக்க ஆசை சீரியலில் விவாகரத்து ஆகாமலேயே மனோஜ் இன்னொரு பெண்ணையும் கல்யாணம் பண்ணி வைத்திருக்கிறார். இதனால் இந்த கதை தான் அந்த கதையா? இல்ல அந்த கதை தான் இந்த கதையா? என்று ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். இதுவரைக்கும் மற்ற சேனல்களில் சீரியல்களை தான் அடுத்த சேனல்களில் காப்பி அடித்துக் கொண்டிருப்பார்கள். இப்போ சொந்த சேனலிலேயே சீரியலை காப்பி பண்ண தொடங்கிட்டாங்களா? என்று உங்களுக்கு தோன்றினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல பாஸ்.சீரியல் சர்ச்சைகள்
பாண்டியன் ஸ்டோர்ஸ், சிறகடிக்க ஆசை கதை
சீரியல்கள் ஒற்றுமை
தியாகி மீனா
மீண்டும் மீனாவுக்கு பஞ்சாயத்து