வைரத்தின் மகனுக்கு ஒரு வாய்ப்பு தரவில்லை.. மாற்றம்னு சொல்லி ஏமாத்திட்டீங்களே! விஜய பிரபாகரன் ஆதங்கம்

  • சென்னை: வைரத்தை இழந்துவிட்டோம் இனி தங்கத்தை இழக்கக்கூடாது என்று நினைத்தீர்கள்.. ஆனால் அந்த வைரத்தின் மகனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஏன் நினைக்கவில்லை? என மறைந்த திமுக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது.

    Advertisement

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய பிரபாகரன், விஜயகாந்த் அரசியல் காலத்தை நினைவுபடுத்தியதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் நடக்கும் விஷயங்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவருடைய பேச்சின் ஆரம்பத்தில், வைரத்தை இழந்தோம் இனி தங்கத்தை இழக்க மாட்டோம் என்று எல்லோரும் மனசுல நெனச்சதுக்கு இப்ப குற்ற உணர்ச்சியில் இருக்கிறீங்க. ஆனா வைரத்தை இழந்தோம் இனி அந்த வைரத்தின் மகனை இழக்கக்கூடாது என்று நினைத்து ,எனக்கு இந்த விஜய பிரபாகரனுக்கு ஒரு வாய்ப்பு யாரும் கொடுக்கவில்லையே?

    Advertisement

    விஜய பிரபாகரன் பேச்சு

    மாற்றம் என்று நினைத்து அரசியல் மாற்றம் செஞ்சீங்க. ஆனா மாற்றம் இருக்கா? தினந்தோறும் சட்டசபையில் பார்க்கிறோமே... அன்னைக்கு கேப்டன் நாக்கை துரத்தி சிங்கம் மாதிரி எழுந்து நின்றதால் தான் அங்கு கேள்வி எழுந்துச்சு. அன்னைக்கு கேப்டன் மீடியால வந்து பேசினார். ஒரு பக்கத்தை காமிச்சிங்களே மறுபக்கத்தை காமிச்சா தானே உள்ளே என்ன நடந்தது என்று தெரியும் என்று கேட்டார். அப்போது அவர் சொன்னது தான் இப்போ நடந்துட்டு இருக்கு. என்ன சட்டசபையில் லைவ் ஒளிபரப்பு செய்வது பற்றி பேசினார்.

    சட்டசபையில் நடக்கும் சம்பவம்

    மேலும், தமிழக அரசியலில் 3வது சக்தி உருவாகி இருக்கிறது என்றால் அது கேப்டன் ஒருவரால் தான். அந்த சட்டசபையில் என்ன பேசிட்டு இருக்குறங்க என்று கொஞ்சம் யோசிச்சு பாருங்க. ஒன்று உள்ளே ஒருவரை புகழ்ந்து பேசுறாங்க. இல்ல தனிப்பட்ட முறையில் அவங்களுக்கு என்ன தேவையோ அதை பற்றியே கேட்கிறார்கள். இல்ல அவங்களுக்குள்ள சண்டை போட்டுட்டு இருக்காங்க. மக்களுக்கு தேவையான பிரச்சனைகள் சட்டப்பேரவையில் பேசப்பட வேண்டிய நிலையில் விவாதங்கள் வேறு திசையில் போய்க் கொண்டிருக்கிறது.

    Advertisement

    விஜயகாந்த் உடன் என்னை கம்பேர் பண்ணுவது எனக்கு பிடிக்காது.. நான் ரஜினி ரசிகன்! ஆனால், நடிகர் சரவணன் ஓபன்
    நிர்மல் குமார் கரூர் கம்பெனிக்காரர் என்று கிண்டல் பண்றாரு. அதற்கு எதிர் தரப்பில் உதயநிதி ஸ்டாலின் அண்ணன் அவர் ஒரு பக்கமா பேசிட்டு இருக்கிறாரு. மாறிமாறி அவங்களுக்குள்ள சண்டை போட்டுட்டு இருக்காங்க. அதை பார்க்கும்போது சட்டசபை மாதிரியா இருக்கு? பட்டிமன்றம் மாதிரி இருக்கு. உள்ளே பேசுவதற்கு நிறைய விஷயம் இருக்கு. பிரேமலதா விஜயகாந்த் கூட உள்ளே நல்லா பேசுறாங்க என்று நீங்க எல்லாரும் சொல்லுறீங்க. அவங்க இன்னைக்கு இந்த நிலைமைக்கு வருவதற்கு 20 வருஷம் ஆகியிருக்கு.

    Advertisement

    விஜய பிரபாகரன் பேச்சுக்கு காரணம்

    கேப்டன் மகனான எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருந்தால் நானும் சட்டசபையில் மக்களின் கேள்விகளை கேட்டு இருப்பேன். எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. அதை கேட்பது எனது உரிமை என்று அவர் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார். விஜய் பிரபாகரன் இப்படி பேசியதற்கு காரணம் இருக்கிறது. ஆரம்பத்தில் விஜய் அரசியலுக்கு வந்ததும் விஜயகாந்த் என்ற வைரத்திற்கு நாம் வாய்ப்பு கொடுக்காமல் போய்விட்டோம். அவருடைய தம்பியாக வந்திருக்கும் விஜய் தங்கத்தை நாம விட்டு விடக்கூடாது என்று பலரும் சொல்லி வந்தனர். அதை வைத்து தான் இப்போது விஜய பிரபாகரன் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

    English Summary

    Vijaya Prabhakaran: You lost the diamond and thought you should not lose the gold again.. But why don't you think to give the son of that diamond a chance? The video of late DMK leader Vijayakanth's son Vijaya Prabhakaran is gaining attention on social media.