விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் சிக்மா.. ஞாயிற்றுக்கிழமை வசூல் எவ்வளவு? 3 நாட்களில் இத்தனை கோடியா?

  • சென்னை: விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் சிக்மா திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகும் முன்பே ஜேசன் சஞ்சய் மீதான எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபுறம் அவர் கதையை தேர்வு செய்ததும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த படத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை வசூல் நிலவரம் முந்தைய நாளை விட கொஞ்சம் அதிகரித்து இருக்கிறது.

    Advertisement

    சந்தீப் கிஷன், பிரியா அப்துல்லா, சம்பத்ராஜ், ராஜூ சுந்தரம், சிவ் பண்டிட் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்ட அதிரடி காமெடி கலந்த கதையாக உருவாகியுள்ளது. படம் வெளியான முதல் நாளில் 2.35 கோடி இந்திய நெட் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் 2வது நாளான சனிக்கிழமை வசூல் 1.50 கோடியாக குறைந்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமை வசூல் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    Advertisement

    சிக்மா வசூல் நிலவரம்

    தற்போது வெளியாகியுள்ள சாக்னிக் வசூல் கணிப்பின்படி, அக்டோபர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிக்மா சுமார் 1.50 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் 3 நாட்களில் படத்தின் இந்திய வசூல் 5.35 கோடியாக உயர்ந்திருக்கிறது. இன்றைய மொத்த வசூல் சுமார் 6.10 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் நாளில் கிடைத்த 2. 35 கோடி வசூலுடன் ஒப்பிட்டால் அடுத்த 2 நாட்களில் அதே அளவிலான வசூலை தக்க வைக்க முடியவில்லை. அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமையும் சுமார் 1.50 கோடி வசூல் கிடைத்திருப்பது படத்துக்கு ஓரளவுக்கு தொடர்ச்சியான வரவேற்பு இருப்பதை காட்டுகிறது.

    Advertisement

    ஜெயித்தாரா ஜேசன் சஞ்சய்?

    ஜேசன் சஞ்சய்யில் முதல் படம் என்பதால் சிக்மாவின் வசூல் மட்டுமல்ல படத்தை பற்றி விமர்சனங்களும் கவனிக்கப்படுகிறது. சந்தீப் கிஷனின் நடிப்பு, சில அதிரடி காட்சிகள் தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவை பாராட்டுக்கள் பெற்றாலும் கதையில் புதுமை மற்றும் திரைக்கதை வேகம் குறித்து கலவையான கருத்துக்கள் வெளியாகி உள்ளன. ஒரு இயக்குனரின் முதல் படம் என்பதால் ஆரம்ப வசூலை வைத்து மட்டும் வெற்றி தோல்வி என்று முடிவு செய்து விட முடியாது. குறிப்பாக வார இறுதி முடிந்த பிறகு திங்கள்கிழமை முதல் ஞாயிறுகளில் பார்வையாளர்கள் வருகை எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம்.

    English Summary

    Sigma box office: The film Sigma, marking the directorial debut of Vijay's son Jason Sanjay, was released in theaters on October 2nd. While there was significant anticipation surrounding Jason Sanjay prior to the release, his choice of story also became a topic of discussion among fans. The film's box office collection yesterday—Sunday—showed a slight increase compared to the previous day.