சென்னை: நடிகர் விஷால் சந்தோஷமாக தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தான் இப்போ இணையத்தில் வைரலாகி விடுகிறது. தமிழ் சினிமாவில் நடித்து பலருடைய கைதட்டை வாங்கி இருந்தாலும் தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் படித்த ஒரு மாணவி மேடையில் தங்கப் பதக்கம் வாங்குவதை பார்த்து தனது ரொம்ப சந்தோஷமாக இருப்பதாக அவர் நிகழ்ச்சியுடன் பேசி இருக்கிறார்.
நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ
நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று பல வேலைகளில் பிஸியாக இருந்தாலும் பல வருஷங்களாக மாணவர்களின் கல்விக்கும் உதவி செய்து வருகிறார். குறிப்பாக பொருளாதார சுழல் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு தனது தேவி சமுக மற்றும் கல்வி அறக்கட்டளை மூலம் உதவிகளை செய்து வருகிறார். இப்போது அந்த உதவியில் படித்த மாணவி பெற்றிருக்கும் வெற்றி பற்றிதான் உணர்ச்சி பெருக்கில் பேசியிருக்கிறார்.
சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 35 வது பட்டமளிப்பு விழாவில் விஷாலின் தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளையின் உதவியுடன் படித்த 10 மாணவர்கள் பட்டம் பெற்றிருக்கின்றனர். அதில் தீபிகா என்ற மாணவி பிசிஏ படிப்பில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
கடலூர் பண்ருட்டி பகுதியை சேர்ந்த தீபிகா விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் என்று விஷால் தன்னுடைய பதிவில் சொல்லி இருக்கிறார். 2023- 24 காலகட்டத்தில் தேவி அறக்கட்டளைக்கு வந்த தீபிகா தற்போது படிப்பை முடித்ததோடு தங்கப்பதக்கமும் வென்றிருப்பது அறக்கட்டளை நிறுவனத்தினரை நெகிழ வைத்திருக்கிறது என்று நீண்ட ஒரு பதிவை விஷால் வெளியிட்டு இருக்கிறார். மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டு அதில், இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். நான் இப்போ இந்த வீடியோ வெளியிட்டது கூட என் படத்திற்காகவோ அல்லது என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் விஷயத்தை பற்றியோ பேச அல்ல. என்னுடைய மகள் செய்த சாதனையை தான் உங்களிடம் சொல்ல போகிறேன். என்னுடைய மகள் என்றால் எங்களுடைய அறக்கட்டளை மூலமாக படித்து இன்று கோல்டு மெடல் வாங்கி இருக்கும் தீபிகாவை பற்றி சொல்கிறேன். தீபிகா படித்து வாங்கிய பாராட்டை நினைத்து எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ மெடல் வாங்கி இருக்க.. இது உனக்கு மட்டும் கிடைத்த வெற்றி கிடையாது, எனக்கு மட்டும் கிடைத்த சந்தோஷமும் கிடையாது. உன்னை மாதிரி வாழ்க்கையில் சாதிக்கணும் படிக்கணும்னு என்று நினைக்கிற பல மாணவர்களுக்கு நீ முன்மாதிரி. நான் உன்னை கண்டிப்பாக நேரில் வந்து பார்க்கிறேன். எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கு என்று பேசி இருக்கிறார். அதோடு நான் இந்த வீடியோ வெளியிட்டது என்னுடைய அறக்கட்டளை பற்றி பேசுவதற்காகவோ அல்லது நான் செய்து கொண்டிருக்கும் செயல்கள் பற்றி பேசவும் அல்ல. தன்னுடைய சொந்த முயற்சியால் படித்து இன்று சாதனை படைத்திருக்கும் தீபிகாவை வாழ்த்த தான். தீபிகாவை போல பலரும் வெற்றி பெற சத்தியபாமா கல்லூரி பலருக்கும் முன் மாதிரியாக இருக்கிறார்கள். அவர்களிடம் நாங்கள் சீட் கேட்டதும் உடனடியாக தந்தார்கள். இப்போது அதற்கு பலனும் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும் சார் என்று அந்த வீடியோவில் வேண்டுகோளையும் வைத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் விஷாலின் செயலை பாராட்டி அந்த மாணவிக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகிறார்கள்.சாதித்த மாணவி
நடிகர் விஷாலின் மகள்
சந்தோஷத்தில் விஷால்
தவெகவின் மோசமான தாக்குதல்.. ரெட் ஜெயண்ட் மூவிஸ் பஞ்சாயத்து.. ஓபனாக பேசிய விஷ்ணு விஷால்