தவெகவின் மோசமான தாக்குதல்.. ரெட் ஜெயன்ட் மூவிஸ் பஞ்சாயத்து.. ஓபனாக பேசிய விஷ்ணு விஷால்


  • சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள கட்டா குஸ்தி படம் வெளியான நாளிலிருந்து சமூக வலைத்தளங்களில் படம் குறித்து பாராட்டு பதிவுகளுடன் நெகட்டிவ்வான விமர்சனங்களும் குவிந்தன. குறிப்பாக படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால் பேசிய சில கருத்துக்களை தொடர்ந்து தவெக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் படத்தை குறிவைத்து விமர்சித்து வருகிறார்கள்.

    Advertisement

    விஷ்ணு விஷால் பேட்டி

    இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக ஓபனாக விஷ்ணு விஷால் பேசியிருக்கிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் அவரிடம் தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உங்கள் படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்புகிறார்களே என்று கேள்வி எழுப்பினர்.

    Advertisement

    அதற்கு விஷ்ணு விஷால் நான் அதை பார்த்தேன் உண்மையாகவே கஷ்டமாகத்தான் இருக்கின்றது. அதைப் பற்றி பெரிதாக பேச விரும்பவில்லை இந்த விஷயத்தை அரசியலாக மாற்றவும் விரும்பவில்லை. மக்களுக்கு படம் பிடித்திருக்கிறது அதுதான் முக்கியம் என்று சொல்லி இருக்கிறார். அதோடு சமூக வலைத்தளங்களில் நடைபெறும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து அவர் வருத்தத்துடன் பேசினார்.

    சோசியல் மீடியா வன்மம்

    ஆன்லைன் வன்மம் எனக்கு சுத்தமாக பிடிக்காது. அதற்கு எதிரா நான் ஏற்கனவே பலமுறை பேசி இருக்கிறேன். இப்போதும் அதே கருத்தில் தான் இருக்கிறேன். ஒருவரை தனிப்பட்ட முறையில் டார்கெட் செய்வது நல்ல சமூகத்தை உருவாக்காது. அதற்கு எதிராக நான் முன்பும் நின்றேன், இப்போது உறுதியாக நிற்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    மேலும் அவரிடம் கட்டா குஸ்தி படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பேசும் போது ரெட் ஜெயின்ட் நிறுவனத்தை அரசியல் அமைப்பாக பார்க்கவில்லை. ஒரு திரைப்பட நிறுவனமாகத் தான் பார்க்கிறேன். 13 வருஷங்களாக அவர்களுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. எனக்கு ஆதரவாக இருந்தவர்களுடன் சேர்ந்து படத்தை வெளியிட வேண்டும் என்று நினைத்தேன் அதனால் அதையும் அரசியலாக மாற்ற வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

    விஜய் - த்ரிஷாவை கலாய்த்தாரா விஷ்ணு விஷால்?... 'கட்டா குஸ்தி 2' படத்தின் ஒரு சீன் கிளப்பிய புதிய சர்ச்சை!
    Advertisement

    ரெட் ஜெயன்ட் நிறுவனம் பற்றி விளக்கம்

    விஷ்ணு விஷால் இப்படி ஓபனாக பேசியது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒரு தரப்பு விஷ்ணு விஷால் தேவையில்லாமல் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுகிறார் என்று சொல்லி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் அவர் யாரையும் நேரடியாக குற்றம் சாட்ட வில்லை சோசியல் மீடியா வெறுப்பு கலாச்சாரத்துக்கு எதிராக மட்டுமே பேசி இருக்கிறார் என்று அவருக்கு சப்போர்ட்டும் கொடுக்கிறார்கள்.

    Katta Kusthi 2 Day 2 Box Office: அடேங்கப்பா! கட்டா குஸ்தி 2 வது நாள் வசூல் இவ்வளவா? மாஸ் காட்டும் விஷ்ணு விஷால் படம்
    அதே நேரத்தில் செல்ல அய்யாவுவை இயக்கத்தில் உருவான கட்டா குஸ்தி திரைப்படம் முதல் பாகத்தை வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் நல்ல வரவேற்புடன் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தில் கருணாஸ், காளி வெங்கட், முனிஷ்காந்த், கருணாகரன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

    Advertisement

    இந்த படத்தில் வசூலும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதை பார்க்கும் போதே தெரிகிறது என்னதான் நெகட்டிவா பேசுறவங்க பேசிக்கிட்டே இருங்க... நாங்க படம் நல்லா இருந்தா பார்ப்போம் என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் போல.

    English Summary

    Vishnu Vishal: Since the release of Katta Kusthi 2, produced by actor Vishnu Vishal, social media has been flooded with praise and negative reviews. Especially following some comments made by Vishnu Vishal during the promotion of the film, Thaveka supporters are targeting the film and criticizing it on social media. Vishnu Vishal has spoken openly about this issue for the first time. At a recent event, reporters questioned him about TVK volunteers and Vijay fans spreading negative reviews against your film on social media.