Viswanath and Sons OTT: ஓடிடிக்கு வரும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.. சூர்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

  • சென்னை: ஒரு படம் தியேட்டரில் வெளியாகி ஒரு வாரம் தான் ஆகி இருக்கிறது. ரசிகர்கள் இன்னும் தியேட்டரில் படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் ஓடிடியில் எப்போது பார்க்கலாம்? என்ற கேள்வியும் எழுந்துவிட்டது. அதுதான் தற்போது சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே விஜய் நடித்த ஜனநாயகன் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போது ஓடிடிக்கு வந்ததை தொடர்ந்து இப்போது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகி இருக்கிறது.

    Advertisement

    நடிகர்கள்

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமீதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சூர்யாவின் முந்தைய படங்களுடன் ஒப்பிடும்போது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முற்றிலும் வேற ஒரு கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஆக்சன் மாஸ் என இல்லாமல் ஃபேமிலி சென்டிமென்ட், காதல் உணர்வுகள் என ஒரு ஃபீல் குட் கதையை வெங்கி அட்லூரி கையில் எடுத்திருக்கிறார்.

    Advertisement

    வசூல் நிலவரம்

    சூர்யாவுடன் மமீதா பைஜூ சேர்ந்து நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. ராதிகா சரத்குமார், ரவீனா போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிதுது இருக்கிறார்கள். படம் தியேட்டரில் வெளியான முதல் வாரத்திலேயே நல்ல வசூலை பெற்றிருக்கிறது. இரண்டாவது வாரத்திலும் திரையரங்குகளில் படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஓடிடி அப்டேட்

    இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix கைப்பற்றி இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருக்கிறது. அதுபோல படம் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இங்கு ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அதிகாரப்பூர்வ செய்தி இன்னும் தயாரிப்பு நிறுவனம் அல்லது Netflix தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.

    Advertisement

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    இதற்கு இடையே திரையரங்க வெளியிட்டுக்கு 4 வாரங்களுக்கு பிறகு படம் ஓடிடிக்கு வரும் என்ற கணக்கில் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் Netflix தளத்தில் ஸ்டீம் ஆகலாம் என்று தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானதால் 4 வார கணக்குப்படி பார்த்தால் செப்டம்பர் 14ஆம் தேதி பொருத்தமாக வருகிறது. அதனால் தான் செப்டம்பர் 14 முதல் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியாகும் என்று தகவல் சுற்றி வருகிறது. எப்படியும் 14ஆம் தேதி மிஸ் ஆனாலும் செப்டம்பர் மாதத்தில் இந்த படம் ஓடிடி வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    English Summary

    Viswanath and Sons OTT: A film has been released in theaters for just a week. Fans are still celebrating the film in theatres. By then when can we watch it on OTT? The question has also arisen. That is what is currently happening with Suriya's Vishwanath and Sons. After Vijay starrer Demokraman came to OTT while it was running in theatres, now the OTT update of Vishwanath and Sons has been released.