சீரியலில் வில்லி நிஜத்தில் கிராமத்து பொண்ணு! திருநெல்வேலி திருவிழாவில் விஜே தீபிகா செய்த செயல்

  • சென்னை: சீரியலில் பார்த்தால் எப்போதும் ஏதாவது ஒரு வில்லத்தனமான திட்டத்துடன் சுற்றிக் கொண்டிருப்பார். ஆனால் நிஜ வாழ்க்கையில் நம்ம ஊரு பொண்ணு என்று சொல்ல வைக்க அளவுக்கு கிராமத்து வாழ்க்கையோடு ஒன்றி போயிருக்கிறார் விஜே தீபிகா. இப்போது அதற்கு சாட்சியாக அவரது சொந்த ஊர் பக்கம் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    விஜே தீபிகா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா கேரக்டர் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து பெரிய அளவில் பெயர் வாங்கினார். முதலில் அவர் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு அவருடைய முகத்தில் இருந்த முகப்பரு காரணமாக அவர் அந்த சீரியலில் இருந்து கண்ணீருடன் விலகினார்.

    Advertisement

    திருநெல்வேலி பொண்ணு

    பிறகு இன்னொரு நடிகை நடித்திருந்தார். ஆனால் அந்த நடிகையும் பாதியிலேயே விலகிவிட மீண்டும் இவரே நடித்திருந்தார். இது எல்லா சீரியலிலும் நடக்காத அதிசயம் இவருடைய வாழ்க்கையில் நடந்திருந்தது. ஆனால் சீரியலில் அவருடைய கேரக்டர் எப்படி இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் தீபிகாவின் பின்னணி ரொம்பவே வேற லெவல். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமம் தான் அவருடைய சொந்த ஊர்.

    ஆரம்பத்தில் பட்ட கஷ்டம்

    விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் என்று அவர் பல பேட்டிகளில் பேசியிருக்கிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே மீடியா மீது ஆசை வந்து தொகுப்பாளராகவும், நடிகையாகவும் வாய்ப்பு தேடி சென்னை வந்திருக்கிறார். ஆரம்பத்தில் வாய்ப்பு தேடும்போது எப்படி டிரஸ் பண்ண வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரியாமல் இருந்தேன். கிராமத்தில் இருந்து வந்ததால் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டேன். அந்த தடைகளை எல்லாம் தாண்டி தான் சின்னத்திரையில் இப்போது எனக்கு ஒரு இடம் கிடைத்திருக்கிறது என்று அவர் சொல்லி இருந்தார்.

    Advertisement

    சொந்த ஊர் கோவிலில்

    அதுபோல சொந்த ஊர் பக்கம் சென்று குடும்பத்தினருடன், ஊர் மக்களிடம் நேரம் செலவிடுவதையும் தன்னுடைய சோசியல் மீடியாக்களில் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே அவர்களுடைய வீடியோவில் கிராமத்து தோட்டம், கோவில் திருவிழா, ஆடு மாடு, வாழைத்தோப்பு என முழுக்க முழுக்க வில்லேஜ் வைப் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    உங்களை நம்பி தான ஓட்டு போட்டோம்.. எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க CM... போராட்டத்தில் சீரியல் நடிகை கல்யாணி
    இந்த நிலையில் தற்போது அவர் கோவில் திருவிழாவில் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கோவில் திருவிழாவில் அங்குள்ள வழக்கப்படி சுருள் தட்டு என்று சொல்வார்கள் அதை தான் அவரும் வைத்திருக்கிறார். ஒரு தட்டில் சாமிக்கு தேவையான துணி, பூ, பழம், பன்னீர் என எல்லாவற்றையும் வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

    Advertisement

    நெட்டிசன்கள் கருத்து

    சீரியல்களிலும் சோசியல் மீடியாவில் அவர் மாடர்ன் உடையில் வந்தாலும் தனது சொந்த ஊரில் பக்கா கிராமத்து பெண்ணாக அவர் மாறி இருக்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணாமலை சீரியலை வில்லத்தனத்தை காட்டிக் கொண்டிருக்கிறார் ஆனால் இங்கே இவ்வளவு பவ்யமாக நின்று கொண்டிருக்கிறார் என்று ஆச்சரியப்படுகின்றனர். அதுபோல இன்னும் சிலர் என்னதான் தீபிகா தனக்குன்னு ஒரு பிரபலத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் பழசை மறக்காமல் கிராமத்தில் எளிமையாக இருக்கிறாரே என்று அதிசயப்படுகிறார்கள்.

    English Summary

    VJ Deepika: As seen in the serial, he is always going around with some villainous plan. But in real life, VJ Deepika has merged with village life to the extent that she is called Namma Uru Ponnu. Now witnessing it, videos of him attending a temple festival near his hometown are going viral on social media.