சென்னை: வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலரின் கதைகளுக்கு பின்னால் ஒரு போராட்டம் இருக்கும். ஆனால் அந்த போராட்டத்தை மறக்காமல் ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடுபவர்கள்தான் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடிப்பார்கள். அந்த பட்டியலில் இடம்பிடித்திருப்பவர் விஜே மணிமேகலை.
ஒரு காலத்தில் வாடகை வீட்டுக்கே பணம் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டதாக பல மேடைகளில் உருக்கமாக பேசிய மணிமேகலை, இன்று தன்னுடைய கனவு பண்ணை வீட்டின் கிரஹப்பிரவேசத்தை நடத்தி இருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
மணிமேகலை மற்றும் உசேன் காதல் திருமணம் செய்து கொண்டபோது பல சவால்களை சந்தித்தனர். குடும்ப எதிர்ப்பு, பொருளாதார சிக்கல், எதிர்காலம் குறித்த பயம் என பல தடைகளை தாண்டியே அவர்கள் வாழ்க்கையை தொடங்கினர். இதுகுறித்து பல பேட்டிகளில் பேசிய மணிமேகலை, திருமணத்திற்கு பிறகு தங்குவதற்கு சரியான வீடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும், கிடைத்த வீட்டிற்கு வாடகை கொடுக்கவே சில நேரங்களில் சிரமப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். அந்த காலத்தில் தன்னையும், கணவர் உசேனையும் நம்பி மட்டுமே வாழ்க்கையை நகர்த்தியதாக அவர் பலமுறை நினைவுகூர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் இரண்டு குடும்பத்தினரும் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மணிமேகலை கூறி இருக்கிறார். தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய மணிமேகலை, பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். குறிப்பாக "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் அவர் செய்த காமெடி, குறும்பு மற்றும் இயல்பான பேச்சு அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. பின்னர் அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சைகளால் விலகியிருந்தாலும், தனது உழைப்பால் தொடர்ந்து முன்னேறி தற்போது ஜீ தமிழிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சம்பாதித்த பணத்தை வெறும் ஆடம்பர வாழ்க்கைக்காக செலவழிக்காமல், நிலம் வாங்கி அதில் பண்ணை வீடு கட்ட வேண்டும் என்ற கனவை மணிமேகலை பல ஆண்டுகளாக பகிர்ந்து வந்தார். அதற்காக நிலம் வாங்கியது முதல் கட்டுமான பணிகள் வரை அனைத்தையும் தனது யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார். வீடு கட்டுவது என்பது எளிதான விஷயம் அல்ல. அதிலும் சொந்தமாக வடிவமைத்து, ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து கட்டுவது இன்னும் பெரிய சவால். ஆனால் அந்த சவாலை வெற்றிகரமாக முடித்து இன்று தனது பண்ணை வீட்டின் கிரஹப்பிரவேசத்தை நடத்தியுள்ளார். கிரஹப்பிரவேச விழாவிற்காக வீடு முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பாரம்பரிய உடையில் மணிமேகலையும் உசேனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. "House Warming" என்ற எளிய கேப்ஷனுடன் அவர் பகிர்ந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்குகள் குவிந்து வருகின்றன. மணிமேகலையின் இந்த வளர்ச்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் உணர்வுபூர்வமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். "வாடகை வீட்டில் இருந்து பண்ணை வீடு வரை வந்த பயணம் செம இன்ஸ்பிரேஷன்..." "உழைப்பு ஒருபோதும் தோற்காது என்பதற்கு மணிமேகலை தான் உதாரணம்..." "காதலுக்காக போராடிய ஜோடி இன்று வெற்றியோடு நிற்கிறது..."எப்போதும் சொல்வது போல நீங்கதான் ரியல் லைஃப் சூரிய வம்சம் ஜோடி என்று பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள் வீடு வாங்குவது புதிதல்ல. ஆனால் மணிமேகலையின் இந்த சாதனை ரசிகர்களை அதிகம் கவர்வதற்கு காரணம், அவர் தனது கஷ்டங்களையும் தோல்விகளையும் மறைக்காமல் பகிர்ந்து கொண்டது தான். ஒரு காலத்தில் வாடகை பணத்திற்காக கவலைப்பட்ட பெண்... இன்று தனது சொந்த பண்ணை வீட்டில் கிரஹப்பிரவேசம் நடத்தி நிற்கிறார். அதனால்தான் இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் ஒரே வார்த்தையை கூறி வருகின்றனர்... "கனவு காண்பவர்கள் பலர்... அதை நிஜமாக்குபவர்கள் சிலர். அந்த சிலரில் மணிமேகலையும் ஒருவர்!"காதலுக்காக போராட்டம்
சின்னத்திரையில் தொடங்கிய பயணம்
நிஜமாக மாறிய பண்ணை வீடு
கிரஹப்பிரவேச புகைப்படங்கள்
ரசிகர்களின் வாழ்த்து மழை
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள்
ரசிகர்களை நெகிழ வைக்கிறது