ஹோம் டூரா..? பார் டூரா..? பிரபலங்களில் புதிய ட்ரெண்ட் சரியா? சர்ச்சையில் விஜே மணிமேகலை! ரசிகர்களின் ஒரே கேள்வி


  • சென்னை: சமீபகாலமாக சின்னத்திரை நடிகைகளின் வீட்டில் பார் வசதி செட்டப் வைத்து கொண்டிருக்கின்றனர். அதையும் டூர் வீடியோ போட்டு சோசியல் மீடியாவில் அந்த வீடியோக்களை வெளியிடுகின்றனர். இது பார்க்கும் ரசிகர்களுக்கு தவறான ஒரு முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்று பலரும் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    ரட்சிதா ஹோம் டூர்

    சமீபத்தில் சீரியல் நடிகை ரட்சிதா மகாலட்சுமி வெளியிட்ட வீடியோவே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. சீரியலில் குடும்ப பாங்காக நடித்துக் கொண்டிருக்கும் இவரா இப்படி என்று பலரும் கேள்வி எழுப்பினர். சரவணன் மீனாட்சி சீரியலில் அவரை பார்த்து ஃபயர்விட்ட ரசிகர்கள் எல்லாம் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கமெண்ட்களில் கழுவி ஊற்றினர்.

    Advertisement

    காலம் மாறி போச்சு

    முன்பெல்லாம் தந்தையோ அல்லது பெரியவர்களோ வந்தாலே தெருவில் தம் அடித்தாலோ அல்லது மது குடிக்கும் இளைஞர்கள் மறைவாக ஓடிவிடுவார்கள். ஆனால் இப்போது அதை பெருமையாக இளைஞர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு சினிமாவும் ஒரு தவறான முன் உதாரணம்.

    சினிமாக்களில் ஹீரோக்கள் செய்யும் தவறுகளை பெருமையாக இளைஞர்களும் பின்பற்ற தொடங்கி விட்டார்கள். இதுவே சமுதாயத்தில் சீர்குழைப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இப்போது சீரியல் நடிகைகளும் தங்கள் பங்குக்கு இதுபோன்று தவறான முன் உதாரணத்தை காட்டி வருகின்றனர். ஏற்கனவே விஜே மகேஸ்வரி தன்னுடைய வீட்டில் வரும் கெஸ்ட்களுக்கு மது பார்ட்டி கொடுப்பதற்காக ஒரு ரூம் வைத்திருப்பதாகவும், ஒரு பிரிட்ஜ் முழுக்க விலை உயர்ந்த மதுபானங்கள் வாங்கி வைத்திருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

    Advertisement

    விஜே மணிமேகலை ஹோம் டூர் வீடியோ

    அதற்கு முன்பு பல நடிகைகள் இதுபோல வீடியோக்கள் வெளியிட்டிருந்தனர். அந்த வரிசையில் இப்போது விஜே மணிமேகலையும் சிக்கி இருக்கிறார். விஜே மணிமேகலைக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வந்து பலருடைய மனதை கவர்ந்து விட்டார்.

    ஆனால் அந்த நிகழ்ச்சியில் விஜே பிரியங்கா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் திடீரென வெளியேறினார். அதுவும் தன்னுடைய தன்மானம் முக்கியம் என்று அவர் போட்ட போஸ்ட் கூட அப்போது பெரிதாக சப்போர்ட் பெற்றது. இப்போது ஜீ தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் டான்ஸ் மாஸ்டர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    Advertisement

    பார் செட் அப்

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இப்போது படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தான் தன்னுடைய சொந்த ஊரில் ஒரு பிரம்மாண்டமான வீடு கட்டி இருந்தார். ஏற்கனவே சென்னையிலும் அவருக்கு வீடு இருக்கிறது. இப்படியான நிலையில் இப்போது தன்னுடைய சொந்த ஊரில் இருக்கும் பண்ணை வீட்டில் நடிகை தீபாவை வைத்து ஒரு ஹோம் டூர் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

    தனியார் youtube சேனலுக்காக நடிகை தீபா அந்த வீட்டை சுற்றி காட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் ஒரு ஷோகேஸ் முழுக்க விலை உயர்ந்த மதுபானங்கள் இருக்கிறது. அது பற்றி அவருடைய கணவரும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் நெட்டிசன்கள் இப்போது திட்டி தீர்த்து வருகிறார்கள்.

    Advertisement
    குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு!

    ஒரு வீட்டில் என்ன இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம், அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதையே சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்க்கும் வகையில் காட்டும் போது அதற்கு வரும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள்

    அதனால்தான் மணிமேகலையின் பண்ணை விட்டு வீடியோவை பார்த்த பலரும் வீட்டை காட்ட வந்தீங்களா? இல்ல பார் செட்டப்பை காட்ட வந்தீங்களா? என்று கேள்வி எழுப்புகின்றனர். இவர்கள் இதுபோல வீட்டிற்குள்ளேயே பார் செட்டப் வைத்து குடிப்பதை நார்மலைஸ் செய்வதால் இவர்களை பாலோ பண்ணும் லட்சக்கணக்கான இளைஞர்களும் மது அருந்துவதும் அதை வீட்டுக்குள்ளேயே கொண்டு வந்து வைப்பதும் தவறே இல்லை என்று நினைக்க தொடங்கி விடுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    English Summary

    VJ Manimegalai: VJ Manimegalai is also trapped. VJ Manimegalai has many fans. She not only became a host but also became a contestant on Vijay TV's Cook with Komali show and won the hearts of many. For her private YouTube channel, actress Deepa was showing around the house and posting a video. It has a showcase full of expensive liquors. Her husband is also proud of it. Netizens who see this are now cursing.