எளிமையாக நடந்த விஜே பிரியங்காவின் வளைகாப்பு.. பக்கத்தில் யாரு பாருங்க! உருக்கமான பதிவு

  • சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி எளிமையாக நடந்திருக்கிறது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட போட்டோஸ்களை தனது instagram பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    விஜய் டிவியில் பிரியங்காவை பார்க்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அவர் கலகலப்பான பேச்சு, ஜாலியாக தொகுத்து வழங்குவது என நிகழ்ச்சியை எப்போதும் சுவாரசியமாக கொண்டு செல்வதில் பிரியங்காவுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் நெருக்கமானவராக மாறினார்.

    Advertisement

    விஜய் டிவி பிரியங்கா

    அதற்கு பிறகு ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனில் பங்கேற்று இறுதிப்போட்டி வரை சென்றிருந்தார். அது மட்டுமல்ல விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சி இருந்தாலும் அதில் நான் போட்டியாளராக இருப்பேன், அல்லது தொகுப்பாளராக இருப்பேன் என்று சொல்வது போல எல்லா நிகழ்ச்சியிலும் தலைகாட்டி விடுவார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு டைட்டிலும் வென்றிருந்தார்.

    காதல் திருமணம்

    கடந்த வருஷம் டிஜே வசியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிரியங்கா இந்த வருஷம் தங்களுடைய வாழ்க்கையில் புதிய வரவு வரப்போவதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். கணவர் வசியுடன் இணைந்து வெளியிட்ட வீடியோவில் இரண்டு பேராக இருந்த எங்களுடைய வாழ்க்கை இனி மூன்று பேராக போகிறது என்று கேப்ஷன் கொடுத்து தனது கர்ப்பத்தை அறிவித்திருந்தார். கர்ப்பமாக இருந்தாலும் தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

    Advertisement
    நடிகை சமந்தா- விஜே பிரியங்கா வாழ்க்கையில் இப்படி ஒரு ஒற்றுமையா? நெகிழ்ச்சி பதிவு

    பிரியங்கா பகிர்ந்த பதிவு

    இந்த நிலையில் இன்று அவருடைய வளைகாப்பு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவருடைய தம்பி, தம்பியின் மனைவி மற்றும் பிரியங்காவின் அம்மா உள்ளிட்ட குடும்பத்தினர் மட்டுமே இருக்கின்றனர். பிரியங்காவின் கணவர் குடும்பத்தில் இருந்து வேற யாரும் கலந்து கொண்டது போல புகைப்படங்களை அவர் வெளியிடவில்லை. அதனால் பிரியங்காவிடம் ரசிகர்கள் என்ன ஆச்சு உங்க கணவர் வீட்டில் இருந்து யாரும் வரவில்லையா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

    Advertisement

    ரசிகர்கள் கேள்வி

    இன்னும் ஒரு சிலரோ நீங்க விஜய் டிவி பிரபலங்களை எல்லாம் கூப்பிடவில்லையா? ரொம்பவும் எளிமையாக பங்க்ஷன் கொண்டாடி இருக்கீங்களே என்று கேட்கின்றனர். ஆனால் பிரியங்கா வெளியிட்ட பதிவில் "அன்பு நிறைய நிறைந்த ஒரு தருணம்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். ஒருவேளை 9வது மாதத்தில் இன்னும் பிரமாண்டமாக உறவினர்கள் மற்றும் நண்பர்களை கூப்பிட்டு வளைகாப்பு பண்ணப் போகிறாரா? அதனால் தான் இந்த வளைகாப்பை எளிமையாக நடத்தி இருக்கிறாரா? என்றும் பலர் கேள்வி எழுப்பினாலும், பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள் மட்டும் குவிந்து கொண்டே இருக்கிறது.

    English Summary

    VJ Priyanka: A simple baby shower ceremony was held for Vijay TV presenter Priyanka Deshpande. She shared photos from the event—taken with her family and close relatives—on her Instagram page, and fans as well as fellow television celebrities are now sending her their best wishes.