சென்னை: சோசியல் மீடியாவை திறந்தாலே இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் பிக் பாஸ் முத்துக்குமரன் மீது இன்ஸ்டால் பிரபலம் வாஹதா சொன்ன குற்றச்சாட்டுகள் தான் அதிகமாக பேசப்படுகிறது. ஏற்கனவே தன்னை திருமணம் செய்கிறேன் என்று ஏமாற்றி விட்டார் என்று தற்கொலை முயற்சி செய்ததை வீடியோவாக வெளியிட்ட வாஹதா, இப்போது ஹாஸ்பிடலில் இருந்தபடியே அடுத்த வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் பீரியட்ஸ் நேரத்தில் முத்துக்குமரன் தன்னுடன் உடலுறவில் ஈடுபட்டார் என்று ஒரு புதிய குற்றசாட்டை சொல்லி இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் சோசியல் மீடியாவில் மோட்டிவேஷன், பெண்கள் முன்னேற்றம், பெரியார் தத்துவம் என்று வகைவகையாக பேசி பலருக்கும் பிரபலமானவர்தான். அவரை பற்றி இப்போ இன்ஸ்டாவில் பிரபலமான வாஹதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். ஏற்கனவே சில வீடியோக்கள் வெளியிட்டு அதை டெலிட் செய்திருந்தார். அந்த வீடியோக்களின் அவர் புகைபிடித்தபடி, மது அருந்துவது போல இருந்தது.
இன்ஸ்டா பிரபலம் தற்கொலை முயற்சி
அதோடு தான் தற்கொலை முயற்சி செய்யப் போகிறேன், அதற்கு முன்பு முத்துக்குமரன் பற்றியும் தன்னுடைய கடந்த காலத்தை பற்றியும் பேசுகிறேன் என்று அந்த வீடியோக்களில் வாஹதா பேசி இருந்தார். அதாவது நான் ஏற்கனவே சிலரை காதலித்திருந்தேன் அவர்களை பிரேக்கப் செய்துவிட்டேன். எனக்கு திருமணம் முடிந்து 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது ஆனால் இந்த விஷயம் எல்லாமே முத்துக்குமாரனுக்கு தெரியும். தெரிந்தும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொன்னாரு.
அவருடைய வார்த்தையை நம்பி நானும் அவருடைய வீட்டிற்கு போய் இருந்தேன். அங்கு வைத்து அவர் எனக்கு ஆயிரம் முத்தங்கள் தந்தார். இரவு நாங்கள் உறவில் இருந்தோம். ஆனால் அடுத்த நாள் கல்யாணத்தை பற்றி அவர் பேச மறுத்துவிட்டார். நான் இப்பௌ தற்கொலை பண்ணிக்க போகிறேன் என்று அவர் அந்த வீடியோக்களில் பேசியிருந்தார். இது வைரலானது. அவர் தற்கொலை முயற்சி செய்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
பிறகு நான் உயிர் பிழைத்து விட்டேன் என்று இன்ஸ்டா ஸ்டோரியில் போஸ்ட் போட்டிருந்தார். இந்த நிலையில் இன்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் புதிய ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் முத்துக்குமரனுக்கு நான் ஏற்கனவே காதல் தோல்வியில் இருந்த விஷயங்கள் எல்லாமே தெரியும். என்னை பற்றி எல்லா விஷயங்களும் அவருக்கு தெரிந்ததால் அவருடைய கேரிங் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. முதலில் நாங்கள் சோசியல் மீடியாவில் பேசியிருந்தாலும் நேரில் அவருடைய வீட்டிற்கு நான் போன போது அவருடைய வீட்டில் ஆல்கஹால் இருந்தது. அதை எனக்கு தந்தாரு. அப்போ நான் குடிக்க மாட்டேன் என்று சொல்லி எனக்கு தந்தாரு. நான் அதற்கு முன்பு சில நேரங்களில் குடித்திருக்கிறேன். அந்த விஷயமும் அவருக்கு தெரியும் என்பதால் நானும் அதை வாங்கி குடித்தேன். அப்போது அவர் என்னுடைய காலில் முத்தம் கொடுத்தாரு. பிறகு நான் கையில் போட்டு இருந்த டாட்டூவில் முத்தம் கொடுத்தார். அப்படி அவர் எனக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது எனக்கு அந்த கேரிங் ரொம்பவே பிடித்திருந்தது. அடுத்த கட்டமாக அவர் நான் உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்வேன். ஆனால் உன் விருப்பம் இல்லாமல் தொட மாட்டேன் என்று என்னிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தார். அவருடைய பேச்சு எனக்கு பிடித்து இருந்ததால் அதில் நான் என்னையே மறக்க தொடங்கிவிட்டேன், அவரை முழுமையாக நம்பினேன். அந்த சமயத்தில் அவர் என்னுடன் உறவு வைத்துக் கொள்ளும் முயற்சி செய்தார். இரவு உறவு.. காலையில் செய்த செயல்.. முத்துக்குமரன் மீது குற்றச்சாட்டு! வாஹிதா வெளியிட்ட புதிய ஸ்டோரி!முத்துக்குமரன் மீது குற்றச்சாட்டு
1000 முத்தம், உறவு வைத்து கொண்டு பிக் பாஸ் முத்துக்குமரன் ஏமாத்திட்டாரு.. தற்கொலை முயற்சி செய்த பெண்!
ஏமாற்று வார்த்தைகள்
அப்போது நான் பீரியட்ஸ் என்று சொன்னேன். ஆனாலும் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் என்னுடன் உறவில் இருந்தார். நான் அப்பொழுதே புரிந்திருக்க வேண்டும் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லும் நபர் பீரியட்ஸ் என்பதை கூட புரிந்து கொள்ளாமல் நம்முடன் நெருங்குகிறாரே என்று புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன் என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். வாஹதா அடுத்தடுத்து வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் முத்துக்குமரனின் பதில் என்ன? போலீஸ் விசாரணை போய்க்கொண்டிருக்கிறதா? என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.