சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் லட்சுமி பிரியா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதை இன்று வெளியான முதல் ப்ரோமோவில் காட்டி விட்டார்கள். ஏற்கனவே இந்த தகவல் நேற்றிலிருந்து வைரல் ஆகி வந்த நிலையில் இப்போது விஜய் டிவி அதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
லட்சுமி பிரியா எவிக்ஷன்
அதே நேரத்தில் லட்சுமி பிரியாவிற்கு அதிகமான பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இரண்டும் இருந்தாலும் அவர் திடீரென வெளியேற்றப்பட்டதற்கு என்ன காரணம் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஏற்கனவே லட்சுமி பிரியா மகாநதி சீரியலில் நடித்து பிரபலமாகி தான் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் போனால். ஆனால் முதல் வாரத்திலேயே இவருடைய பெயருக்கு நெகட்டிவ் வர தொடங்கிவிட்டது.
இவர் பேசும் விதம், ரசிகர்களுக்கு எரிச்சலை கொடுப்பது போல இருக்கிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முந்தைய சீசன் பார்வதி மாதிரி தான் லட்சுமி பிரியாவும் இருக்கிறார் என்பது பலருடைய வாதமாக இருக்கிறது. அடிக்கடி ஆனந்தியுடன் சண்டை போடும்போது மூஞ்சியை அடித்து உடைத்து விடுவேன் என்றெல்லாம் பேசியதற்கு அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் சொல்லி வந்தனர். ஆனால் அதுபோல இதுவும் நடக்காமல் இப்போது அவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அதனால் இவருடைய பெயர் கெட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக வெளியேற்றப்பட்டாரா? என்ற கேள்வியும் வருகிறது. இது ஒரு பக்கம் இருக்கும்போது ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் சீக்ரெட் ரூம் இருக்கு. ஒரு வேலை லட்சுமி பிரியாவே அந்த சீக்ரெட் ரூமுக்குள் அனுப்பி வைப்பாங்களா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது ஆனால் லக்ஷ்மி பிரியாவின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போஸ்ட் பதிவு செய்ய ஷேர் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் "தடைகள் உன்னை நிறுத்த வராது.. உன்னை சோதிக்க வருகின்றன" என புடவையில் எடுத்த சில புகைப்படங்கள் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இவர் வெளியே வந்து தான் இந்த போட்டோஸ்கள் பதிவிட்டிருக்கிறாரா? என்ற கேள்விகளும் வருகிறது. சரி எதுவாக இருந்தாலும் நாளை சனிக்கிழமை எபிசோடில் இது பற்றி தெரியவரும்.ரசிகர்கள் கருத்து
சாப்பாடு போட்டதை சொல்லி காட்டுறீங்களே.. நீங்க மனுசனே இல்ல! பிக் பாஸை கிழித்த பிரசாந்த் ரங்கசாமி
லட்சுமி பிரியாவின் பதிவு