ஸ்ரீ ரெட்டிக்கு ராகவேந்திரர் சிலை சாட்சியாக நடந்த ஏமாற்றம்? லாரன்ஸின் அறிவிப்புகள் வெறும் விளம்பரமா?


  • சென்னை: டி.ராஜேந்தர், கார்த்திக் கட்சி ஆரம்பித்தபோது மற்றவர்களுக்கு ஒரு பயம் இருந்தது. ஆனால் விஜய் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்ற பிறகு, எல்லா நடிகர்களுக்கும் அந்த பயம் போய்விட்டது. எப்படியோ விஜய் வந்துவிட்டார், மக்கள் வாக்களிப்பார்கள் என்று தெரியும், ஆனால் அவர் முதலமைச்சர் ஆவாரா என்பது நமக்குத் தெரியாது" என்றெல்லாம் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார். அத்துடன் நடிகர் லாரன்ஸ் அரசியல் பிரவேசம் பற்றியும் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

    Advertisement

    ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு நேர்காணலில், ராகவா லாரன்ஸ் தன்னை ராகவேந்திரர் சிலைக்கு முன்னால் நிற்க வைத்து, தலைமுடி முதல் கால் வரை வர்ணித்துவிட்டு, ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார். 'நான் உன்னை ஏமாற்ற மாட்டேன், அப்படி ஏமாற்றினால் ராகவேந்திரர் என்னை சும்மா விடமாட்டார்' என்று லாரன்ஸ் சொன்னதாகவும் ஸ்ரீரெட்டி சொல்கிறார்.

    Advertisement

    ஸ்ரீரெட்டி - ராகவேந்திரா

    எதற்காக ராகவேந்திரரைத் தன்னுடைய சுயலாபத்திற்குப் பயன்படுத்துகிறார்? இப்படிப்பட்டவர் இன்று மக்களிடம் வந்து, 'நான் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாமா, ஆலோசனை சொல்லுங்கள்' என்று கேட்கிறார். ஸ்ரீ ரெட்டியை ஏமாற்றியபோது இவர் மக்களிடமோ, தன்னுடைய அம்மாவிடம் அனுமதி கேட்டாரா?

    லாரன்ஸ் ஏழைகளுக்குப் படிப்பு உதவி செய்கிறார், அதை நான் பாராட்டுகிறேன். ஆனால், அவருடைய படங்களின் பாணியைப் பாருங்கள். ஒரு படம் எடுக்க வேண்டும், அதில் பேயாக நடிக்க ஒரு அழகான பெண்ணைக் கொண்டு வர வேண்டும், பிறகு அவர்களைத் தன் வசப்படுத்த வேண்டும். இதுதானே உண்மை?

    Advertisement

    ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு எங்கே

    ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு தருவதாகக் கூறிவிட்டு, பின்னர் அவர் போன் போட்டால் லாரன்ஸ் எடுக்கவே இல்லை. இவருடைய படங்களில் ராய் லட்சுமி, நிக்கி கல்ராணி, வேதிகா எனத் தொடர்ந்து ஒரே நடிகைகளே 3, 4 படங்களில் நடிக்கிறார்கள். ஒரு நடிகை வெளிப்படையாக சொன்னார் என்பதற்காக மற்ற அனைவரையும் நாம் கொச்சப்படுத்த முடியாது, ஆனால் இவர், எத்தனை நடிகைகளிடம் இப்படி நடந்திருப்பார் என்ற கேள்வி எழத்தானே செய்கிறது?

    இவர் பாடல்களில் அமைக்கும் நடன அசைவுகள் அனைத்தும் எல்லை மீறிய ஆபாசமாகவே இருக்கின்றன. குறிப்பாக ஆந்திரா படங்களில் இவர்கள் செய்த வேலைகள் மிக அதிகம்.

    Advertisement

    லாரன்ஸின் சினிமா செயல்பாடுகள் ஒருபுறம் இருக்கட்டும், சினிமாவுக்கு வெளியே அவர் செய்யும் விளம்பரங்களைப் பாருங்கள். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் 10 கோடி ரூபாய் கொடுத்துவிட்டதாகப் பொய் உரைத்தார். பிறகு கூட்டம் கலையும்போது எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று பின்வாங்கினார்.

    விஜயகாந்த் மகனுக்கு சான்ஸ்

    ஜெய்பீம் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக சொன்னாதே, அதெல்லாம் வெறும் விளம்பரம். விஜயகாந்த் மறைந்தபோது ஓடிவந்து, அவர் மகன் சண்முக பாண்டியனுக்கு யார் வாய்ப்பு தந்தாலும் அந்தப் படத்தில் நான் இலவசமாக நடித்துக் கொடுக்கிறேன் என்று ரசிகர்களைக் கவரப் பேசினார். லாரன்ஸ் இலவசமாக நடித்தாலும் அந்தப் பையனை வைத்துப் படம் எடுக்க எந்தத் தயாரிப்பாளரும் தயாராக இல்லை. லாரன்ஸ் தனியாகப் படம் எடுத்தால்தான் உண்டு.

    Advertisement

    இவர் இலவசமாக நடிக்கிறேன் என்று சொன்னது விஜயகாந்தையும் அவர் மகனையும் அவமானப்படுத்தும் செயல். பிறகு விஜய் டிவி பாலா என்ற இளைஞன் ஏதோ நல்லது செய்துகொண்டிருக்கிறார்.. அவரை தன்னுடன் சேர்த்துக்கொண்டு, நான் அவரை ஹீரோவாக்க போகிறேன் என்றார். இப்போது அந்த இளைஞனின் நிலைமை பூஜ்ஜியமாக உள்ளது. எங்கெல்லாம் புகழ் இருக்கிறதோ, அங்கெல்லாம் புகழைத் திருடும் நபர் லாரன்ஸ்!

    குழந்தைகள் கருவியா? பகடைக்காயா

    அடுத்து, 6 குழந்தைகளை வளர்க்கிறேன் என்று சொல்லி, அவர்களை மேடையில் நிற்க வைத்து விளம்பரம் தேடுகிறார். தன் சுயநல அரசியல் ஆசைக்காக அந்த ஆதரவற்ற பிள்ளைகளை பகடைக்காயாக, கருவியாக பயன்படுத்துவதே தவறு. இப்போது என்னுடைய என் அம்மா சம்மதித்துவிட்டார், நான் அரசியலுக்கு வரலாமா என்று மக்களிடம் கேட்கிறார். இதெல்லாம் ஏமாற்று வேலை.

    Advertisement

    இப்போது ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. திருச்சி கிழக்குத் தொகுதியில் ராகவா லாரன்ஸ், விஜய் ஆசீர்வாதத்துடன் தவெக சார்பாகப் போட்டியிடுகிறாராம். ஆனால் தவெக தரப்பில் இதைப் பற்றிப் பேச யாருமே இல்லை, அப்படி ஒரு ஆலோசனையே அங்கு நடக்கவில்லை. இவராகவே முன்வந்து என் நண்பர் கட்சி ஆரம்பித்துள்ளார், நான் சேரலாமா என்று நாடகமாடுகிறார்.

    ரஜினிகாந்த்திடம் "தலைவர்" என்று ஒரு ஆதரவையும், இங்கு விஜய்யிடம் "நண்பர்" என்று ஒரு ஆதரவையும் மாறி மாறி துண்டு போட்டு காட்டுகிறார். இவருடைய உண்மையான நோக்கம் தான் என்ன?

    2% வாக்கு வங்கி போதுமே

    இப்போது எல்லா நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது. லதா ரஜினிகாந்துக்குக் கூட அந்த ஆசை இருக்கிறது. அன்றெல்லாம் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கட்சி ஆரம்பித்தார்கள். இப்போது அப்படி இல்லை, ஒரு 2% வாக்குகள் பெற்று, 5 இடங்களை பேரம் பேசி 50 கோடி சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் எல்லாரும் கட்சி ஆரம்பிக்கிறார்கள். அந்தவகையில் அரசியல் இப்போது நல்ல தொழிலாக மாறிவிட்டது.

    டி.ராஜேந்தர், கார்த்திக் கட்சி ஆரம்பித்தபோது மற்றவர்களுக்கு ஒரு பயம் இருந்தது. ஆனால் விஜய் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்ற பிறகு, எல்லா நடிகர்களுக்கும் அந்த பயம் போய்விட்டது. எப்படியோ விஜய் வந்துவிட்டார், மக்கள் வாக்களிப்பார்கள் என்று தெரியும், ஆனால் அவர் முதலமைச்சர் ஆவாரா என்பது நமக்குத் தெரியாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Was Sri Reddy Misled Despite Lawrence’s Public Promise? Are His Big Announcements Just Publicity?