என்னை கொல்ல பார்க்குறாங்க வாட்டர்மெலான் திவாகரன் கூச்சல்.. அலறும் அதிகாரிகள்.. நொந்து போன மக்கள்

  • சென்னை: தமிழ்நாட்டு மக்கள்தான் வாட்டர்மெலன் திவாகரிடம் சிக்கி கொண்டிருக்கிறார்கள்... இன்று திவாகரை போல மோசமான நடிப்பை எங்கும் பார்க்க முடியாது. சரக்கே இல்லாதவர் திவாகர்.. அத்தனை கோமாளித்தனத்தையும் யூடியூப்பில் பதிவிட்டு வருகிறார்.. வெறும் உடம்பில் நாமத்தை போட்டுக்கொண்டு, அந்நியன் அம்பி..ம்மா, சிவாஜி கணேசன்..ம்மா என்கிறார்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

    Advertisement

    Media circle சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "திவாகரைப் போல யாராவது எங்காவது புகார் தருகிறார்களா? எந்த தொடர்பும் இல்லாமல் அவர் அங்கே உட்கார்ந்து ஏதோ ஒரு கேரக்டரில் நடிப்பது போல சம்பந்தமில்லாமல் பேசுகிறார். அவர் என்ன ஒரு டாக்டரா? நரம்பியல் நிபுணரா? அல்லது கார்டியாலஜிஸ்ட்டா? அவரிடம் எதைக் கேட்க முடியுமோ, அதைத்தானே பேட்டி எடுப்பவர்கள் கேட்பார்கள்? அதற்கெல்லாமே அவர் சண்டை போடுகிறார்.

    Advertisement

    அவர் எப்போதும் பாக்கெட்டில் போனை ஆன் செய்தபடியே வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். கலாட்டா செய்யப்போகிறோம் என்று முடிவு செய்தவுடன், அதை எடுத்து கேமரா முன்னால் சென்று அட்டகாசம் செய்கிறார். ஸ்டுடியோவுக்குள் போனாலே, பாய்ந்து போய் அந்த கேமராவை பிடுங்குகிறார். இங்கும், அங்கும் ஓடுகிறார்..

    அம்பி..ம்மா, சிவாஜி கணேசன்..ம்மா

    அங்கே வேலைபார்க்கும் கேமராமேன்கள், புரொடியூசர்கள், எடிட்டர்கள் எல்லாரும் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவைப் பாதுகாக்கவே முயற்சிப்பார்கள். அவர்கள் தற்காப்புக்காக அதைச் செய்யும்போது, அதை ஒரு தள்ளுமுள்ளு போல மாற்றி, "மக்களே, என்னைக் கொல்லப் பார்க்குறாங்க" என்று சிவாஜி கணேசன் போல அவர் நடிக்கிறார்.

    Advertisement

    வொர்த்தே இல்லாமல் இவரை கொன்று என்ன ஆகப்போகிறது.. இவரை யாராவது கொல்வார்களா? தமிழ்நாட்டு மக்கள்தான் இவரிடம் சிக்கி கொண்டிருக்கிறார்கள். இன்று அவரைப் போல மோசமான நடிப்பை எங்கும் பார்க்க முடியாது. சரக்கே இல்லாதவர் திவாகர்.. அத்தனை கோமாளித்தனத்தையும் யூடியூப்பில் பதிவிட்டு வருகிறார்.. வெறும் உடம்பில் நாமத்தை போட்டுக்கொண்டு, அந்நியன் அம்பி..ம்மா, சிவாஜி கணேசன்..ம்மா என்கிறார்.

    வாட்டர் மெலன் வீடியோ ஹிட்

    அந்த ஒரு வாட்டர் மெலன் வீடியோ மட்டுமே அவருக்கு ஹிட்டானது.. தமிழ்நாடு முழுக்க தன்னை நெகட்டிவ்வாக பிரபலப்படுத்தி கொள்ள முயற்சிக்கிறார்.. கோமாளி போல தன்னை காட்டிக்கொள்ள முயல்கிறார்..

    Advertisement

    அவர் டீ குடிக்கும் இடத்திலும் சரி, சாப்பிடும் இடத்திலும் சரி, எங்கே போனாலும் பிரச்சனை செய்கிறார். யார் கிட்ட பேசினாலும் பிரச்சனை.. அவரிடம் சொல்லிக்கொள்ளும்படியான எந்தத் திறமையும் இல்லை. .

    அவர் சாப்பிடும்போது, இலையில் எலி சாப்பிடுவது போன்ற ஒரு வீடியோவை சமீபத்தில் பார்த்தேன்.. அது உண்மையானதா அல்லது யாராவது அவரைச் சீண்டுவதற்காக ஏஐ மூலம் உருவாக்கியதா என்று தெரியவில்லை. ஆனால், அவர் விளம்பரத்திற்காக எதையும் செய்வார் என்பதால் அது உண்மையாகக் கூட இருக்கலாம்.

    ரத்த வாந்தி வந்துரும்

    ஒரு பிசியோதெரபிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு, தன்னை விமர்சிப்பவர்களை "உன் கை முடங்கிவிடும், உன் கால் உடைந்திடும், உனக்கு ரத்த வாந்தி வந்துரும்" என்று சாபமிடுவது எந்தவிதமான நாகரிகம்?

    Advertisement

    பெரிய புகழுக்காகவும், பணத்திற்காகவும் இப்படியெல்லாம் டிராமா போட்டு கொண்டிருக்கிறார்.. தன்னை பூட்டி வைத்து அடிக்கிறார்கள் என்கிறார்.. இவர் என்ன தங்கமலை பொக்கிஷமா, பூட்டி வைத்து அடிக்க? இவர் மீது புகார் தந்தாலும் கூட போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்..

    இவர் புகார் என்றாலே போலீசாரே குழம்பிப்போய்விடுகிறார்கள். நசரத்பேட்டை போலீசில் ஏற்கனவே புகார் உள்ளது.. இப்போது இன்னொரு யூடியூப் சேனல் உரிமையாளர்கள், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் திவாகர் மீது புகார் அளித்தனர்.

    போனை பிடுங்கிய போலீஸ்

    சம்பவத்தன்று திவாகர் அப்போது மதுரையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக மும்முரமாகி கொண்டிருந்தார்.. அந்த நேரத்தில் திடீரென சென்ற போலீசார், டக்கென திவாகரிடமிருந்த போனை கைப்பற்றி விட்டார்கள்.. இல்லையென்றால் அதையும் ஒரு வீடியோ எடுத்து போட்டிருப்பார்.. பிறகு அவரைச் சிறைபிடித்து சென்னைக்கு அழைத்து வந்தனர்..

    Advertisement

    ஆனால், அவர் கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் வெளிவந்ததையும் பெருமையாக வீடியோ போடுகிறார். போலீஸ் தன்னை கைது செய்யவில்லை என்கிறார்.. கைது செய்யாமல் எப்படி ஜாமீனில் வெளிவர முடியும்?

    உண்மையில், போலீசார் இவரை ஒரு பெரிய பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. தமிழ்நாடு முழுவதிலும் இவரை ஒரு தொந்தரவாகவே மக்கள் பார்க்கிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Why Did Police Snatch Divakar's Phone? Watermelon Star Released on Bail After Thangamalai Treasure Row?