அய்யனார் துணை சீரியல் மதுமிதாவுக்கு கல்யாணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

  • சென்னை: சின்னத்திரையில் இப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகைகளில் மதுமிதாவும் ஒருவர். குறிப்பாக 'எதிர்நீச்சல்' சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்த பிறகு இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அய்யனார் துணை' சீரியலில் நிலா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    Advertisement

    இப்படி சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் மதுமிதா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கிறார். ஏற்கனவே தனது காதலனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், இப்போது திருமண தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.

    Advertisement

    காதலன் யார்

    மதுமிதா கடந்த வாரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் தனது காதலனை காட்டி இருந்தார். அட காதலனே அறிமுகப்படுத்துவதற்கு முன்பே காலையில் ஒரு அப்டேட் கொடுத்து விட்டார் இன்று மாலை 5 மணிக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று ரசிகர்களுக்கு புதிர் கொடுத்திருந்தார். அப்போதே ரசிகர்கள் புது படத்தில் ஏதும் கமிட்டாக போகிறாரா? இல்லன்னா திருமணமா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

    மதுமிதா காதலித்து வந்தவரின் பெயர் பாலாஜி. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இப்போது அந்தக் காதல் திருமணத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. காதலனை அறிமுகப்படுத்தியதோடு நிறுத்தாமல், அவருடன் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் மதுமிதா தற்போது பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    செப்டம்பர் 30-ல் திருமணம்

    இதற்கிடையே மதுமிதா வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புதான் ரசிகர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ். தானும் பாலாஜியும் செப்டம்பர் 30-ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக மதுமிதா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் ஒருபக்கம் மதுமிதாவின் திருமண அறிவிப்பை கொண்டாடிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அவருடைய திருமண புகைப்படங்களை பார்க்கவும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

    நீண்ட நாட்களாக காதலித்து வந்தவரையே திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்பதால் மதுமிதாவின் ரசிகர்களும் இந்த திருமணத்தை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

    சின்ன ரோல் நடிக்க கூட அட்ஜஸ்ட்மென்ட் கேட்கிறாங்க! அதுவும் எப்படி தெரியுமா? அய்யனார் துணை நடிகை ஓபன்
    Advertisement

    பெங்களூரு பெண்ணான மதுமிதா

    மதுமிதா பெங்களூருவை சேர்ந்தவர். கடந்த 2018-ம் ஆண்டு முதலே கன்னட சீரியல்களில் நடித்து வந்திருக்கிறார். அதன்பிறகு 2019-ம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான பிரியாத வரம் வேண்டும் சீரியலில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன்பிறகு சன் டிவிக்கு சென்ற மதுமிதாவுக்கு மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது எதிர்நீச்சல் சீரியல்.

    திருச்செல்வம் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் மதுமிதா நடித்தார். பெண்களை மையமாக வைத்து உருவான இந்தக் கதை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    Advertisement
    மாறி மாறி முத்தமழை.. உங்களுக்கே இது ஓவரா தெரியலையா? அய்யனார் துணை சீரியல் அலப்பறை

    எதிர்நீச்சல் ஜனனி

    எதிர்நீச்சல் சீரியல் 2024-ம் ஆண்டு முடிவுக்கு வந்தாலும், ஜனனி கதாபாத்திரம் மூலமாக மதுமிதாவுக்கு கிடைத்த வரவேற்பு மட்டும் அப்படியே தொடர்ந்தது. அந்த சீரியலுக்காக அவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்திருக்கின்றன. எதிர்நீச்சல் சீரியல் முடிந்த பிறகு விஜய் டிவி பக்கம் வந்த மதுமிதா, அய்யனார் துணை சீரியலில் நடிக்கத் தொடங்கினார். இப்போது செப்டம்பர் 30-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், சின்னத்திரை ரசிகர்கள் இப்போதே மதுமிதா-பாலாஜி ஜோடிக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

    English Summary

    actress Madhumitha: Madhumitha is one of the actresses currently enjoying a warm reception among television audiences. She garnered a dedicated fan base, particularly after playing the character 'Janani' in the serial *Ethirneechal*. She is currently starring as 'Nila' in the serial *Ayyanar Thunai*, which airs on Vijay TV.