விஜய் டிவி டிஜே பிளாக்குக்கு கல்யாணம்.. குவிந்த பிரபலங்கள்.. மாப்பிள்ளையின் உருக்கமான போஸ்ட்

  • சென்னை: விஜய் டிவி ரசிகர்களுக்கு பரீட்சமான டி ஜே பிளாக் என்கிற சுதன் குமார் தற்போது தனது வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அவரது திருமண போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

    Advertisement

    டிஜே பிளாக் தனது சோசியல் மீடியா பதிவில் "இனி என்றும் என் துணை பயணியாக" என்று தனது மனைவியோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    விஜே பிளாக் கல்யாணம்

    திருமணத்திற்கு முந்தைய நலங்கு பங்க்ஷனையும் காமெடி ரிலீஸ் வீடியோக்களாக வெளியிட்டு இருந்தார். அதுபோல 10 நாட்களுக்கு முன்பே தன்னுடைய எங்கேஜ்மென்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு அதில், "என்றென்றும் பற்றிக்கொள்ள எனக்கு பிடித்த நபருடன் எனது வாழ்க்கை பயணத்தை தொடங்குகிறேன்" என்று தனது மனைவியின் கைகளை பிடித்தப்படி ஒரு போட்டோ வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் வைரலாகி வந்தது.

    பிரபலங்கள் வாழ்த்து

    இந்த நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதியான இன்று அவருக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. ரம்யா என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதியின் திருமண பங்க்ஷனில் விஜய் டிவி பிரபலங்கள், சீரியல் நடிகர்கள், சூப்பர் சிங்கர் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

    Advertisement

    வாழ்க்கையின் ஆரம்பத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டு இன்று தனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கும் விஜே பிளாக்க்கு நம்முடைய சார்பாகவும் திருமண வாழ்த்துக்கள்.

    English Summary

    DJ Black: Sudhan Kumar, known to Vijay TV fans as DJ Black, has now embarked on a new chapter in his life. Photos and videos from his wedding are going viral.