ஜெயிலர் 2 தியேட்டரில் அனிருத் செய்த சம்பவம்.. ஆரவாரம் செய்த ரசிகர்கள்.. சூரி போட்ட பதிவு

  • சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் 2 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் படத்தைப் பார்த்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், இசையமைப்பாளர் அனிருத் திரையரங்கில் மைக்கைப் பிடித்து பாடிய வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அதுபோல இந்த படத்தை பார்த்துவிட்டு சூரி வெளியிட்ட பதிவும் கவனம் பெற்று வருகிறது.

    Advertisement

    பாட்டு பாடிய அனிருத்

    ஜெயிலர் 2 படத்தின் முதல் காட்சியை பார்த்துக்கொண்டிருந்தபோது அனிருத் மைக்கைப் பிடித்துப் பாடி ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, தலைவர் நிரந்தரம் பாடலில் வரும் "பட்டத்தைத் தூக்க நூறு பேரு" என்ற வரியை அனிருத் பாடியபோது, அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். அனிருத்துடன் சேர்ந்து ரசிகர்களும் பாடி மகிழ்ந்த அந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    Advertisement

    நடிகர் சூரி பதிவு

    ரஜினிகாந்த் மீதான ரசிகர்களின் அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்தக் கொண்டாட்டம், திரையரங்கையே திருவிழா போல மாற்றியிருக்கிறது. படத்துக்கு இசை அமைத்த அனிருத்தே நேரில் வந்து மைக்கை பிடித்து பாடியதைப் பார்த்த ரசிகர்களின் உற்சாகமும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. இதற்கிடையே, நடிகர் சூரியும் ஜெயிலர் 2 படத்தைத் திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறார். படம் பார்க்கும்போது எடுத்த வீடியோவைப் பகிர்ந்த அவர், "தலைவர் படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி... அந்த சந்தோஷமே தனி. ஜெயிலர் 2 கொண்டாட்டம். அன்றும் இன்றும் என்றும் தலைவன் ரசிகன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

    Advertisement
    ஜெயிலர் 2 எப்படி இருக்கு? சூப்பர் ஸ்டார் ஜொலித்ததா? டல் அடித்ததா? விமர்சனம் இதோ

    பிரபலங்களின் வருகை

    சூரியின் இந்தப் பதிவும் ரஜினி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கும் அனுபவமே தனி மகிழ்ச்சி என்பதை அவர் தனது பதிவில் சொல்லி இருக்கிறார். அனிருத், சூரி எனத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஜெயிலர் 2 படத்தைத் திரையரங்கில் பார்த்து வரும் நிலையில், அவர்கள் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன. ரசிகர்களின் ஆரவாரம், அனிருத்தின் பாடல், பிரபலங்களின் முதல் நாள் கொண்டாட்டம் என ஜெயிலர் 2 வெளியான நாளே சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

    English Summary

    Jailer 2: With the release of Jailer starring Rajinikanth and directed by Nelson in theaters today, the film is being celebrated not only by fans but also by prominent figures from the film industry. A video of music composer Anirudh taking the microphone inside a theater and singing has been garnering significant attention online. Similarly, a post shared by actor Soori after watching the film has also drawn considerable notice.