சென்னை: எஸ் ஜானகி என்ற பெயரை சொன்னதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவருடைய குரல்தான். 20,000 மேற்பட்ட பாடல்களை பாடி பலதலை முறைகளை தனது குரலால் கட்டிப்போட்ட ஜானகி கடைசி சில வருஷங்களாக சினிமாவை விட்டு மொத்தமாக ஒதுங்கி இருந்தார். இன்று 88 வயதில் அவருடைய மறைவு செய்தி வெளியாகி இருக்கும் நிலையில் கடைசி காலத்தில் அவர் எப்படி இருந்தார் என்று கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
வயது மூப்பு காரணமாக உடல்நல பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜானகி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. 60 வருஷத்துக்கு மேலாக இசைத்துறையில் இருந்த ஜானகி தனது குரல் நல்லா இருக்கும்போதே பாடுவதை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
பாடகி ஜானகியின் கடைசி நிகழ்ச்சி
கடந்த 2017 அக்டோபர் 28ஆம் தேதி மைசூரில் தனது கடைசி இசை நிகழ்ச்சியில் பாடி ரசிகர்களிடம் விடை பெற்றார். அதே மைசூரில் தான் பல ஆண்டுகளுக்கு முன்பு தனது ஆரம்பகால இசை நிகழ்ச்சியையும் நடத்தி இருந்தார். இது குறித்து அவரே ஒரு பேட்டியில் கூட அப்போது பெருமையாக பேசி இருந்தார். ஜானகியின் கடைசி இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் எழுந்து நின்று அவருக்கு மரியாதை கொடுத்தனர்.
அப்போது அம்மாவின் இசை பயணம் முடிவதை பார்த்த மகன் முரளி கிருஷ்ணா எமோஷனலாகி அழுத புகைப்படங்களும் செய்திகளில் அதிகமாக பேசப்பட்டன. பாடுவதை நிறுத்திய பிறகு ஜானகி பெரிதாக மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. பேட்டிகள், சினிமா நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அவரை அரிதாகத்தான் பார்க்க முடிந்தது. அதுமட்டுமல்லாமல் அவரைப் பற்றிய உடல்நிலை குறித்து சில வதந்திகளும் அவ்வப்போது பரவி வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜானகி இறந்து விட்டதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவியது. அப்போது இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் அது தவறான தகவல் அவர் நல்லாதான் இருக்கிறார் என்று விளக்கம் கொடுத்திருந்தனர். 2019 ஆம் ஆண்டு மைசூருக்கு தன்னுடைய குடும்ப விஷயமாக போயிருந்த சமயத்தில் வீட்டிற்குள் தவறி கீழே விழுந்ததில் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார் .அதுபோல வயது மூப்பு காரணமாக உடல் நில பிரச்சனைகள் குறைவாக வந்ததும் அவர் பெரிதாக வெளியில் வருவதை குறைத்து கொண்டார். ஆனால் கடந்த ஜனவரி மாதம் ஜானகியின் வாழ்வில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டது. தன்னுடைய ஒரே மகனான கிருஷ்ணா காலமானார். அந்த நிகழ்வுக்கு பிறகு குடும்பமே பெரும் துயரத்தில் மூழ்கியது. அப்போதும் ஜானகி உடல்நிலை குறித்து பல செய்திகள் பரவி வந்தது. கடைசியில் அவருடைய குடும்பத்தினர் அது எல்லாமே வதந்தி என்று சொல்லி இருந்தனர். Janaki: ஒரே பையன் போயிட்டானே.. மகன் மறைவால் உடைந்த ஜானகி.. சில மாதங்களிலேயே வந்த பேரதிர்ச்சி 55 வருஷம் பாடிய பிறகுதான் ஞாபகம் வந்ததா? பத்மபூஷனையே வேண்டாம் என்று சொன்ன எஸ் ஜானகி.. காரணம் தெரியுமா? எஸ் ஜானகி பற்றிய வதந்திகள்
புத்திர சோகம்
இதற்கு முன்பும் ஜானகி இறந்துவிட்டதாக ஐந்து முறைக்கு மேலே செய்தி வெளியாகி இருக்கிறது. அது குறித்து கூட ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, நான் ஐந்து முறை இறந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள் என்று சிரித்துக் கொண்டே பேசி இருந்தார். ஆனால் இப்போது அவர் உண்மையிலேயே மறைந்து விட்டார்.
மகன் இறந்த சில மாதங்களிலேயே ஜானகியும் இந்த உலகத்தை விட்டு பிரிந்துவிட்டார் என்பது ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியாத சோகமாக மாறி இருக்கிறது. ஏற்கனவே சமீபத்தில் தான் பாக்கியராஜ், பாரதிராஜா என்ற இரண்டு சினிமா ஆளுமைகளை இழந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இப்போது பாடகி ஜானகியும் மறைந்தது பலரையும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது.