கெனிஷா கிளம்பியதுமே இப்படி? சென்னை நீலாங்கரை பங்களாவில் ரவி மோகன் செய்த வேலையால் கதவை உடைத்த போலீஸ்


  • சென்னை: "எல்லா வேலைக்காரர்களையும் நம்ப முடியாது. ஆனால், ரவி மோகன் ஏன் தன்னுடைய வீட்டு பணிப்பெண்களைப் பூட்டி வைத்தார், நிஜமாகவே நகை திருடு போனதா, அல்லது கடுமையான மன உளைச்சலா. அவர்கள் உண்மையிலேயே பணியாளர்களா? என்றெல்லாம் காவல்துறை விசாரித்து வருவதாக திரைப்படை விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்,

    Advertisement

    cheyyaru balu சேனலில் பேசியிருக்கும் பாலு, "நடிகர் ஜெயம் ரவிக்கு என்னதான் ஆயிற்று என்ற கேள்விதான் இப்போது எல்லோர் மனதிலும் இருக்கிறது. ஏனெனில் அவ்வளவு அருமையான நடிகர், பழகுவதற்கும் இனிமையானவர்.

    Advertisement

    சென்னை நீலாங்கரை வீடு

    நேற்று நீலாங்கரையில் இருக்கின்ற அவருடைய வாடகை வீட்டில் இருந்து, இரண்டு பெண் பணியாளர்களை அவர்களுடைய மகனுடன் சிறைபிடித்து வைத்துவிட்டார் என்று 100-க்கு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது.

    காவல்துறை சென்று விசாரித்தபோது, "அவர்கள் எங்கள் வீட்டில் திருடிவிட்டார்கள்" என்று ரவி தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். "திருடினால் புகார் கொடுங்கள், அதைவிடுத்து வீட்டில் பூட்டி வைக்கலாமா?? என்று காவல்துறை எச்சரித்துள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை சரியில்லை என்றால் ஒரு மனிதன் எப்படியெல்லாம் மாறுவான் என்ற விவாதம் இப்போது சமூக வலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    நடிகர் ரவி மோகன்

    கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் அவருடைய தோழி கெனிஷா, '"எனக்கும் சென்னைக்கும் தொடர்பில்லை, இங்கு எல்லாரும் போலியானவர்கள், என் வாழ்க்கையே வெறுத்துவிட்டது" என்று பதிவு செய்துவிட்டுப் புறப்பட்டார்.

    Advertisement

    அவர் புறப்பட்ட உடனே ரவி மோகன் பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு, 'என் பிள்ளைகளைப் பார்க்க விடவில்லை, நிம்மதி இல்லாத வாழ்வு, காசுக்காகவே என்னைப் பார்க்கிறார்கள்' என்று மிகவும் ஆக்ரோஷமாக, உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். 'விவாகரத்து கிடைக்கும் வரை நான் படங்களில் நடிக்க மாட்டேன்' என்றும் கூறிவிட்டார்.

    கெனிஷா பிரிந்து சென்றதால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். எதிரிக்குக் கூட இந்த நிலைமை வரக்கூடாது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது ஊடகங்களில் பேசியதற்காக, "உணர்ச்சிவசப்பட்டுத் தெரியாமல் பேசிவிட்டேன்" என்று நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

    கெனிஷா கிளம்பியதுமே

    முன்னர் இந்தச் சிக்கல் நடந்தபோது ஈசிஆர் வீட்டில் இருந்து அவருடைய கார் சாவி, பணம் எல்லாம் பிடுங்கப்பட்டு, 10 பைசா கூட இல்லாமல் வேளச்சேரி வரை உட்கார்ந்து உட்கார்ந்து நடந்து வந்ததாக ரவி சொல்லியிருந்தார். ஒரு குடும்பத்திற்குள் சென்று பார்த்தால்தான் உண்மை தெரியும். ஆனால், இந்த வேலைக்காரப் பெண்களை ஏன் அறையில் பூட்டி வைக்க வேண்டும்? கெனிஷா சென்றதிலிருந்து இவர் ஒரு மாதிரி ஆகிவிட்டாரா என்று விசாரணை போய்க்கொண்டிருக்கிறது.

    Advertisement

    எப்போதுமே நடிகர்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் ஒரு பந்தம் இருக்கும். அஜித் தன்னிடம் வேலை பார்த்த 12 பேருக்கு, ஓஎம்ஆர் சாலையில் சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்து, சாவியை தந்த ஆச்சரியப்படுத்தினார்.. ஏனெனில் அந்த வேலையாட்கள் அவ்வளவு நம்பிக்கையானவர்கள். பணியாளர்கள் தங்களுடைய எல்லையை உணர்ந்து வேலை செய்ய வேண்டும்.

    விக்ரம் வீட்டு பணிப்பெண்

    கோவிட் சமயத்தில் திருமணத்திற்கு 20 பேர்தான் அனுமதி. அந்த நேரம் நடிகர் விக்ரம் வீட்டில் 40 வருடங்களாக வேலை பார்த்த பணிப்பெண் மேரியின் மகனுக்குத் திருமணம் நடக்கிறது. விக்ரமின் உடல்தான் மூலதனம், அதனால் 'ஐயா நீங்கள் வர வேண்டாம்' என்று அந்தத் தாய் சொல்லியும், விக்ரமால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    Advertisement

    தன் மகன் திருமணம் போல நினைத்து, திருப்பரூர் முருகன் கோயிலுக்கு நேராகச் சென்று இறங்கினார். அவர்களைப் பார்த்ததும் அந்தப் பையனும், தாயும் நெகிழ்ந்து தேம்பித் தேம்பி அழுதார்கள். அது 40 வருட பந்தம்.

    வாழ்வில் குறுக்கிட்ட பெண்

    அதுக்காக எல்லா வேலைக்காரர்களையும் நம்ப முடியாது. ஆனால், ரவி ஏன் அந்தப் பெண்களைப் பூட்டி வைத்தார், நிஜமாகவே நகை திருடு போனதா, அல்லது கடுமையான மன உளைச்சலா. அவர்கள் உண்மையிலேயே பணியாளர்களா? என்றெல்லாம் காவல்துறை விசாரித்து வருகிறது.

    இவ்வளவு பெரிய வளர்ந்து வரும் ஓர் அற்புதமான நடிகரின் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிட்டு, வாழ்வு அமையாமல் போனது எவ்வளவு பெரிய வேதனை! நமக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் உச்சத்திற்குச் செல்கிறார்களே என்ற வருத்தம் கண்டிப்பாக அவருக்கு இருக்கும். இறைவன் அவருக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    What Happened After Kenisha Left? Police Forced to Break Open the Door at Ravi Mohan’s Neelankarai Bungalow