விசிக மாநாட்டில் என்ன நடந்தது? மேடையில் நடந்த அசம்பாவிதம்! தொகுப்பாளர் சொன்ன பகீர் தகவல்கள்

  • சென்னை: திருமாவளவன் பிறந்த நாளில் நடந்த விசிக மாநாடு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேடையில் தொண்டர்கள் முற்றுகை இட்டதால் திருமாவளவன் பேச வந்த உரையை முதல் பாதியிலேயே முடித்துவிட்டார். இதையெல்லாம் நேரில் பார்த்த தொகுப்பாளர் என்ன நடந்தது என்பதை பற்றி பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

    Advertisement

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு எதிர் பார்த்ததைவிட மிகப்பெரிய கூட்டத்தால் பரபரப்பாக மாறியது. அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர் .ஆனால் கூட்டத்தின் அளவு அதிகரித்ததால் மாநாடு நிகழ்ச்சி தடுமாறும் அளவிற்கு நிலைமை சென்றது.

    Advertisement

    தொகுப்பாளர் விளக்கம்

    இந்த மாநாட்டை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் உமா ராஜாராம் வெளியிட்டுள்ள வீடியோவில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அனைத்தும் திட்டமிடப்பட்டு இருந்தது. திருமாவளவன் எப்போது மேடைக்கு வர வேண்டும்? எவ்வளவு நேரம் பேச வேண்டும்? அதற்கு மிக பிறகு நிகழ்ச்சிகளை எப்படி நகர்த்த வேண்டும் என்பது வரை எல்லாமே திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால் திருமாவளவன் மாநாட்டு வளாகத்திற்குள் வந்த தருணத்திலேயே நிலைமை மாறிவிட்டது. அவரை பார்ப்பதற்காகவும், அருகில் சென்று புகைப்படம் வீடியோஸ் எடுத்துக் கொள்ளவும் தொண்டர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்து சூழ்ந்து கொண்டனர். இதனால் கூட்டம் மேடை வரையிலும் வந்து விட்டது. அதனால் என்னால் அங்கே நின்று கொண்டிருக்க முடியவில்லை.

    Advertisement

    விசிக மாநாடில் நடந்த பிரச்சனை

    அப்போது திருமாவளவன் உன்னால் இங்கே நிற்க முடியவில்லை என்றால் கீழே இறங்கி கூட நின்றுக்கோமா கூட்டம் ரொம்ப வருது என்று என்னிடம் சொன்னார். நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் சார் என்று சொன்னேன். பிறகு அவர் பேச ஆரம்பித்ததும் கூட்டம் சூழ்ந்து கொண்டதால் அவரால் முழுமையாக தீர்மானங்களை படிக்க முடியவில்லை. அது அவருக்கு ரொம்பவே வருத்தத்தை கொடுத்து இருந்தது.

    வேற வழியில்லாமல் தான் அவர் உரையை பாதியிலேயே முடித்து விட்டார். ஒரு கட்டத்தில் திருமாவளவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருக்கு தண்ணீர் வழங்கப்பட்டு பாதுகாப்பாக அவரை அழைத்து செல்லப்பட்டது. அவரும் இந்த வயதிலும் எப்படியாவது உரையை முழுமையாக முடித்து விட வேண்டும் என்று அந்த கூட்டத்திற்குள் போராடிக் கொண்டிருந்தார். கடைசியில் அவரால் அதை முழுமையாக முடிக்க முடியவில்லை.

    Advertisement

    திருமாவளவன் தவிப்பு

    அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் விசிக இனி கூட்டணி கட்சியாக மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் ஆளும் கட்சியாக வளர வேண்டும் என்று தன்னுடைய இலக்கை சொல்லி இருந்தார். மேலும் விசிகவும் தமிழக வெற்றி கழகமும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும் என்று அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார். பிறகு நான் மேடையை விட்டு இறங்கி வீட்டிற்கு கிளம்பி வரும் வழியில் தான் எல்லோரையும் வேறு பாதையில் மாற்றி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

    Thirumavalavan: தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடரும்.. மாநாடு முடிந்த கையோடு முதல்வரிடம் பேசியது என்ன? திருமாவளவன் பதில்
    அதைப் பார்த்தாலும் வியப்பாகத்தான் இருந்தது. இப்ப இருக்கிற சூழ்நிலையை பார்த்தால் அரசியல் கூட்டம் தொடங்கும் போது மக்களை கட்டுப்படுத்துவது தான் பெரிய டாஸ்காக இருக்கும் என்று தெரிகிறது. அனைவரும் சுய கட்டுப்பாட்டுடன் இதுபோல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். அதுபோல கட்சிக் கூட்டங்களை நடத்துகிறவர்களும் மக்களை கட்டுப்படுத்துவதில் முன்னமே ஏற்பாடுகளையும் செய்து வைக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

    English Summary

    Thol Thirumavalavan: The conference held on Thirumavalavan's birthday was stopped halfway through. Thirumavalavan finished his speech in the first half as the volunteers besieged the stage. The anchor who witnessed all this has released a video talking about what happened.