பிக் பாஸுக்குள் என்ன நடந்தது? வெளியே வந்ததும் பிளாக் பாண்டி போட்ட போஸ்ட்.. பீல் பண்ண வைத்து விட்டாரே

  • சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து நேற்று பிளாக் பாண்டியை உடல்நிலை சரியில்லை என வெளியே அனுப்பப்பட்டார். இது சோசியல் மீடியாவில் பெரிதாக விவாதிக்கப்பட்டு இருந்த நிலையில் வெளியே வந்த பிளாக் பாண்டி உள்ளே நடந்த நிகழ்வுகளை பற்றி பதிவு வெளியிட்டிருக்கிறார். இது வைரலாகி வருகிறது.

    Advertisement

    எதையாவது செய்து, எப்படியாவது நம்ம திறமையை வெளியே காட்ட வேண்டும்.. நமக்குன்னு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலத்தான் பிளாக் பாண்டியும் தனக்குன்னு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பல வருஷங்களாக போராடி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்தது. சரி இதை வைத்து மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமாகிவிடலாம் என்று அவர் நினைத்திருந்த நேரத்தில்தான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது.

    Advertisement

    உடல்நிலை பிரச்சனை

    பிக் பாஸ் வீட்டிற்குள் அவருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதும். அதற்காக பல டெஸ்டுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் அவருக்கு சுகர் அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் மேலும் சில பிரச்சனைகளும் இருப்பதால் அவர் முழுமையாக ரெஸ்ட்டில் இருக்க வேண்டும், இந்த பிக் பாஸ் வீடு அவருடைய உடல் நலத்திற்கு சரியாக இருக்காது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதுவும் பிக் பாஸ் டீம் மட்டுமல்லாமல் அவருடைய ஃபேமிலி டாக்டரும் இதையே சொல்லி இருக்கிறார்கள்.

    கதறி அழுத பாண்டி

    ஆனால் எப்படியும் நிகழ்ச்சியில் என்னால் இருக்க முடியும், என்னுடைய மனைவியிடம் நான் பேசுகிறேன், நான் லெட்டர் வேணும் என்றாலும் எழுதி தருகிறேன். எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை இந்த நிகழ்ச்சியை விட்டு நான் போகவே இல்லை என்று அவர் காலில் விழாத குறையாக கெஞ்சினார். ஆனால் பிக் பாஸ் டீம் உறுதியாக நீங்க ரெஸ்ட் எடுத்து விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்து விட்டார்கள். இது அவருக்கு மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

    Advertisement

    பிளாக் பாண்டியின் பதிவு

    இந்த நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாளிலேயே பாண்டி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். ஆனால் இவருக்காக இந்த நிலைமை வரணும் என்று பலர் சொல்லி வருகின்றனர். இவருடைய வெளியேற்றம் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தாலும் அவருடைய ஆரோக்கியமும் முக்கியம் அதனால் அவர் வெளியே வந்தது நல்லது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் நைட் தூங்கவிடாமல் டாஸ்க் நடத்தி கொண்டிருக்கிறார்கள். சாப்பாடும் சரியாக இல்லை இப்படி இருக்கும்போது இவருடைய உடல் நலத்தை கவனிக்காமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து விட்டால் பிறகு பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.

    Advertisement

    ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பாண்டி நான் சீக்கிரமாக மீண்டும் பழைய நிலையில் உள்ளே வருவேன் என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்ததும் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்.

    English Summary

    Bigg Boss: Black Pandi was sent out of Bigg Boss Tamil Season 10 yesterday due to ill health. Amidst widespread discussion on social media regarding this, he has shared a post about the events that took place inside the house, and it is going viral.