பிக் பாஸ் பிளாக் பாண்டிக்கு நடந்தது நமக்கு பாடம்.. இதை தான் கவனிக்கணும்! பிறகு வருத்தப்படுவீங்க

  • சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டிற்குள் நுழைந்து 3 நாட்கள் தான் ஆகிறது அதற்குள் உடல் நிலை காரணமாக வெளியேற வேண்டிய நிலை பிளாக் பாண்டிக்கு. மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருத்துவ உதவி தேவைப்படுவதால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார்கள். இது பாண்டிக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஆனால் அவருடைய வாழ்க்கையில் நடந்த விஷயம் நமக்கு ஒரு பாடம். அதையும் நாம் கவனிக்க வேண்டும்.

    Advertisement

    கனா காணும் காலங்கள் சீரியலில் பாண்டியாக வந்ததிலிருந்து பலருக்கும் தெரிந்த முகம். அதற்கு பிறகு அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு எதிர்பார்த்த அளவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் கிடைத்த பிக்பாஸ் வாய்ப்பை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்திருக்கும். இந்த வாய்ப்பு மூலமாகவது மீண்டும் நம்மை எல்லோருக்கும் நினைவுபடுத்தலாம் என்று நம்பிக்கையோடு அவர் பிக்பாஸ் வீட்டிற்கு போய் இருப்பார். ஆனால் உடம்பு ஒத்துழைக்கவில்லை. நம்ம வாழ்க்கையிலும் இதே போல தான் நடக்கிறது.

    Advertisement

    நாம் செய்யும் தவறு

    வாழ்க்கையை முன்னேற வேண்டும், நல்லா சம்பாதிக்க வேண்டும், குடும்பத்திற்காக ஓட வேண்டும், ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என கிடைத்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் அந்த ஓட்டத்திற்கு நம்ம உடம்பு தாங்குகிறதா? என்பதை மட்டும் பார்க்க மறந்து விடுகிறோம். இதை முடிச்சிட்டு ஹெல்த் செக் பண்ணிக்கலாம், இந்த வேலை மட்டும் முடிஞ்சதும் டாக்டரை பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

    அலட்சியம்

    கை, கால் முதுகு வலி என பல வலி வந்தாலும் உடனே மெடிக்கல் ஷாப்புக்கு போய் மாத்திரை வாங்கி போட்டு விட்டு எனக்கு பெருசா எதுவும் ஆகாது இந்த மாத்திரையோட சரியா போயிடும்னு நம்பிகிட்டு இருக்குறவங்க ஏராளமானோர். அப்படிதான் பிளாக் பாண்டி மருத்துவ பரிசோதனை லிஸ்ட் வந்த பிறகு கூட இதைத்தானே சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய ரிப்போர்ட்டில் பாஸ்டிங்கில் சுகர் 300க்கு மேல் இருந்ததாகவும் Hbh1c சுமார் 10 என்ற அளவில் அளவில் இருக்கிறது என்று டாக்டர் சொல்கிறார்கள். அப்போது கூட அப்படி என்றால் என்ன சார்? எதுவும் பிரச்சனையா? என்று பாண்டி கேட்கிறார்.

    Advertisement

    பிளாக் பாண்டிக்கு ஏற்பட்ட பிரச்சனை

    இதே போல் எத்தனையோ பேர் நம்மில் இருக்கலாம். பாண்டிக்கு இந்த அளவிற்கு உடல் நிலை மோசமாகி இருக்கிறது என்றால் அவருக்கு இன்று நேற்று என ஒரே நாளில் நடந்த விஷயமாக இருக்காது. எப்படியும் குறைந்தபட்சம் சில மாதங்களாவது அவருக்கு இதற்கான அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாக காட்டி இருக்கும். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு எடுக்கப்பட்ட ரிப்போர்ட்டில் தான் இந்த விஷயங்கள் வெளியே தெரிந்திருக்கிறது. இல்லை என்றால் அவர் இதே போலவே தொடர்ந்து இருக்கும்போது பெரிய அளவில் பிரச்சனைகள் வந்திருக்கும்.

    Advertisement

    உடல்நிலை குறைபாடு

    பொதுவாக சர்க்கரை நோய் இருந்தால் எல்லோருக்கும் உடனே அறிகுறிகள் வந்துவிடாது. சிலருக்கு அறிகுறிகள் இல்லாமலே நீண்ட காலம் இருக்கலாம். அதனால் தான் உடம்பு நல்லாத்தான் இருக்கு என்று நினைத்துக் கொண்டு பரிசோதனையை தவிர்ப்பது சரியில்லை. இதுதான் பாண்டி விஷயத்தில் நமக்கு கிடைத்த பெரிய பாடம். நமக்கு உடம்பில் பிரச்சனை வந்தால் மட்டும் செக்கப் பண்ண வேண்டும் என்பதில்லை. வருடத்திற்கு ஒருமுறை அடிப்படை பரிசோதனைகளாவது செய்து கொள்வது நல்ல பழக்கம்.

    வேலை பளுவால் ஏற்பட்ட பிரச்சனை

    சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற விஷயங்களை தெரிந்து கொள்வதில் வெட்கப்பட வேண்டியதில்லை. எனக்கு வயசு ஆகல எனக்கு எதுவும் வராது என்று நினைப்பதுதான் பிரச்சனை. உடம்பு எந்த நேரத்தில் என்ன சொல்லும் என்று நமக்கு தெரியாது. சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த ஒருவர் ஒரு போஸ்ட் போட்டு இருந்தார். பல வருடங்களாக வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஞாயிற்றுக்கிழமை கூட ஓய்வில்லாமல் வேலை பார்த்ததன் விளைவாக 4 மாதங்களாக ICUவில் இருக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. அதற்குப் பிறகுதான் நான் வாழ்க்கையில் எது முக்கியம் என்று புரிந்து கொண்டேன் என்று சொல்லி இருந்தார்.

    Advertisement

    இது பலரையும் யோசிக்க வைத்தது. அதனால் தான் பிளாக் பாண்டிக்கு நடந்தது ஒரு பிக் பாஸ் சம்பவமாக மட்டும் பார்க்காமல் நம்ப உடம்பையும் கொஞ்சம் கவனிப்போம் என்று நமக்கே சொல்லிக் கொள்ள வேண்டிய ஒரு எச்சரிக்கையாக பார்க்க வேண்டும்.

    English Summary

    Bigg Boss: It has been only three days since Black Pandi entered the Bigg Boss Tamil Season 10 house, yet he has had to leave due to health issues. He was made to exit the house because medical advice indicated a need for ongoing medical care. Needless to say, this must be deeply disappointing for Pandi. However, the events that unfolded in his life offer us a lesson—one that we should take note of.